எளிமைக்கு உதாரணமா மாறிட்டாரு.. பிரேமலு படம் ஹிட்டடிக்க இவரும் காரணம்.. இவரை யாருனு தெரியுதா?..

கட்டம் போட்ட சட்டை, சாதாரண காலணியைப் போட்டுக் கொண்ட ஓர் நபர் பிஎம்டபிள்யூ (BMW)-வின் விலை உயர்ந்த சொகுசு காரை டெலிவரி பெறும் படம் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. பார்க்க மிகவும் எளிமையான நபரைப் போல் காட்சியளிக்கும் அவர் வேறு யாரும் அல்ல, மலையாள திரையுலகைச் சேர்ந்த பிரபலமே அவர் ஆவார். இன்னும் விவரமாக கூற வேண்டும் என்றால், 'பிரேமலு' படத்தின் டைரக்டர் மற்றும் எழுத்தாளருமான ஏடி கிரிஷ்-ஷே ஆவார். இவர் எழுத்தாளர் மற்றும் டைரக்டர் ஆகிய ரோல்களை மட்டுமே மலையாள திரையுலகில் ஆற்றி வரவில்லை.

சில நேரங்களில் அவர் தயாரிப்பாளர் மற்றும் நடிகராகவும் மாறிவிடுவார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், மூன்று மலையாள திரைப்படங்களிலும், மூன்று குறும் படங்களிலும் அவர் நடித்திருக்கின்றார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படமே ஐயம் காதலரன் ஆகும். இவரே தற்போது மிகவும் சாதாரணமான நபரை போல், ஷோரூமுக்கே வந்து பிஎம்டபிள்யூ சொகுசு காரை டெலிவரி பெற்றுச் சென்றிருக்கின்றார்.

Premalu director girish ad acquires bmw luxury car

அவர் வாங்கி இருப்பது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் (BMW 2 Series) சொகுசு கார் மாடல் ஆகும். இதன் ஆரம்ப விலையே இந்தியாவில் 43 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும்.

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான ஆப்ஷன்களில் இந்த சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், இந்த இரண்டில் எந்த தேர்வை மலையாள திரைப்பட இயக்குநர் வாங்கினார் என்பது தெரியவில்லை. அவர் மிகவும் எளிய நபரை போல் வந்து இந்த விலை உயர்ந்த காரை வாங்கியதன் விளைவாகவே தற்போது டிரெண்டிங் நபராக மாறி இருக்கின்றார்.

Girish ad acquires bmw luxury car

மிகவும் கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்ட ஓர் செடான் ரக கார் மாடலே 2 சீரிஸ் ஆகும். இது இந்திய சந்தையில் எம் ஸ்போர்ட் மற்றும் எம் ஸ்போர்ட் ப்ரோ ஆகிய இரண்டு விதமான தேர்வுகளிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது. மிக சிறந்த ரைடு அனுபவத்தை வழங்கும் வகையிலேயே தாங்கள் இந்த காரை தயார் செய்திருப்பதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

இதற்கேற்ப ஏகப்பட்ட சிறப்பம்சங்களை அது வழங்கியும் இருக்கின்றது. மிக முக்கியமாக பயணிகளுக்கு சுவாரஷ்யமான பயண அனுபவத்தை வழங்கக் கூடிய அம்சங்களையும் இந்த காரில் பிஎம்டபிள்யூ வாரி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், விர்சுவல் அசிஸ்டன்ட், பார்க்கிங் அசிஸ்டன்ட், கெஸ்சர் கன்ட்ரோல், ரிவர்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் கருவி போன்றவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, ஆறு விதமான டிசைன்களில் ஒளிரக் கூடிய லைட், 10.25 அங்குல முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் திரை, 10.25 அங்குல டிரைவருக்கான திரை மற்றும் முன் பக்க பயணிகளுக்கு ஸ்போர்ட்ஸ் வகை இருக்கை உள்ளிட்டவையும் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல மனம் கவர் அம்சங்களை இந்த சொகுசு காரில் நம்மால் பார்க்க முடியும்.

இதுமாதிரியான அம்சங்களைத் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காருக்கு இந்திய பணக்காரர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக மலையாள திரை உலகைச் சேர்ந்த இயக்குநர் கிரிஷ் இந்த ஆடம்பர காரை வாங்கிய நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமீப காலமாக திரை உலகைச் சார்ந்த பிரபலங்கள் புதிய காரை வாங்கும் நிகழ்வு அதிக அளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே புதிதாக விலை உயர்ந்த காரை வாங்கி திரைப் பிரபலங்களில் ஒருவராக பிரேமலு இயக்குநர் கிரிஷ்-ம் இணைந்திருக்கின்றார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 4, 2024, 16:39 [IST]
English summary
Premalu director girish ad makes headlines with bmw 2 series luxury sedan purchase
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+