மனைவி உடன் சென்று கார் வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா? அந்த ஹிட் படத்தில் வருபவர் தானே!!

பிரேமலு (Premalu), இந்த ஆண்டில் மலையாளத்தில் ஹிட் அடித்த திரைப்படங்களுள் ஒன்று. இந்த படத்தில் நடித்த இளம் நடிகர், நடிகைகள் சினிமா வட்டாரத்தில் கவனத்தை பெற ஆரம்பித்துள்ளனர். அத்தகைய நடிகர்களுள் ஒருவர் தான், ஷ்யாம் மோகன் (Shyam Mohan) ஆவார். ஆதி சேட்டன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஷ்யாம் மோகனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், நடிகர் ஷ்யாம் மோகன் மனைவி உடன் சேர்ந்து சென்று புத்தம் புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஜிடி (Volkswagen Taigun GT) காரை ஷோரூமில் டெலிவிரி பெற்றுள்ளார். இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு எப்போதுமே ஒரு நல்ல வரவேற்பு உள்ளது. மாருதி சுஸுகி, ஹூண்டாய் கார்கள் அளவிற்கு ஃபோக்ஸ்வேகன் கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனை ஆகாவிடினும் ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் நம் நாட்டிலும் உள்ளது. இதன் காரணமாகவே, அவ்வப்போது புது, புது கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதே ஃபோக்ஸ்வேகன் வழக்கமாக கொண்டுள்ளது.

shyam mohan buys volkswagen taigun

இந்த வகையில், கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் டைகுன் ஜிடி கார்களை ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்தது. இந்த ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஜிடி காரை தான் மலையாள நடிகர் ஷ்யாம் மோகன் வாங்கியுள்ளார். மனைவி உடன் டீலர்ஷிப் ஷோரூமுக்கு சென்ற ஷ்யாம் மோகன் அங்கு காருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பான அவரது இன்ஸ்டா பதிவில், உபேர் கார் பயணங்களுக்கு ஷ்யாம் மோகன் குட் பை சொல்லியுள்ளார். ஏனெனில், அவரது குடும்பத்தில் தான் புத்தம் புதிய கார் வந்துவிட்டதே. ஷ்யாம் மோகனின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவை பார்த்து, ரசிகர்களுடன் சில சினிமா பிரபலங்கள் கூட அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். கொச்சியில் உள்ள ஃபோக்ஸ்வேகன் ஷோரூமில் டைகுன் ஜிடி காரை நடிகர் ஷ்யாம் மோகன் மனைவி உடன் சென்று டெலிவிரி எடுத்துள்ளார்.

shyam mohan buys volkswagen taigun

ஆரம்பத்தில் குறும்படங்களில் நடித்துவந்த நடிகர் ஷ்யாம் மோகனின் வாழ்வில் பிரேமலு திரைப்படம் ஒரு மைல்கல் என்றுதான் சொல்ல வேண்டும். ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஜிடி காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஏற்கனவே கூறியதுபோல் இந்த காரை கடந்த ஏப்ரல் மாதத்தில் மார்க்கெட்டில் ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்தது. டைகுன் ஜிடி லைன் மற்றும் டைகுன் ஜிடி பிளஸ் ஸ்போர்ட் என 2 விதமான வேரியண்ட்களில் டைகுன் ஜிடி கார் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் மலையாள நடிகர் ஷ்யாம் மோகன் தற்போது வாங்கியிருப்பது டைகுன் ஜிடி லைன் கார் ஆகும். ஆனால், எந்த கியர்பாக்ஸ் ஆப்ஷனில் காரை வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. ஏனெனில், டைகுன் ஜிடி கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் டைகுன் ஜிடி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.14.08 லட்சம்; ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் ரூ.15.63 லட்சம் ஆகும்.

shyam mohan buys volkswagen taigun

மறுப்பக்கம், டைகுன் ஜிடி பிளஸ் ஸ்போர்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மேனுவல் கியர்பாக்ஸ் உடன் ரூ.18.54 லட்சம் மற்றும் டிஎஸ் கியர்பாக்ஸ் உடன் ரூ.19.74 லட்சம் ஆகும். டைகுன் ஜிடி லைன் காரில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜினும், டைகுன் ஜிடி பிளஸ் ஸ்போர்ட் காரில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜினும் பொருத்தப்படுகிறது.

தோற்றத்தை பொறுத்தவரையில், வழக்கமான டைகுன் கார்களில் இருந்து இந்த ஜிடி கார்கள் வேறுப்பட்டு தெரிகின்றன. காருக்கு மேல் பக்கத்தில் கார்பன் ஸ்டீல் கிரே மேற்கூரையும், முன்பக்கத்தில் சிவப்பு நிறத்தில் 'GT' முத்திரை பொறிக்கப்பட்ட க்ரில் பகுதியும் வழங்கப்படுகிறது. இந்த முத்திரையை காரின் ஃபெண்டர் மற்றும் டெயில்கேட்டிலும் பார்க்க முடிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மலையாள நடிகர் ஷ்யாம் மோகன் வாங்கியிருக்கும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஜிடி லைன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைதான் ஏறக்குறைய ரூ.15 லட்சம் ஆகும். ஆன்-ரோடு விலை கிட்டத்தட்ட ரூ.20 லட்சம் அளவிற்கு வந்துவிடும். இதற்கேற்ப பவர்ஃபுல்லான என்ஜின் மற்றும் மாடர்ன் தொழிற்நுட்ப வசதிகள் வழங்கப்படுவதால், தரமான ஃபோக்ஸ்வேகன் காரை தான் நடிகர் ஷ்யாம் மோகன் வாங்கியுள்ளார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 13, 2024, 17:14 [IST]
English summary
Premalu movie fame actor shyam mohan buys volkswagen taigun gt line check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X