அடிக்கடி சைடு ஸ்டாண்டு போட்டுட்டே வண்டு ஓட்டுறீங்களா? வெறும் 172 ரூபாயில் இந்த பிரச்சனைக்கு தீர்வு!

பைக்கில் சைடு ஸ்டாண்டை எடுக்காமலேயே ஓட்டி செல்கிறீர்களா? வெறும் 172 ரூபாய் செலவு செய்தால் போதும் இந்த பிரச்சனையிலிருந்து நிரந்தரமான தீர்வு கிடைக்கும். இதற்கான புது தயாரிப்பு ஒன்று மார்க்கெட்டிற்கு வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சாலையில் டூவீலரில் செல்லும் பலர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்றால் டூவீலரின் சைடு ஸ்டாண்டை எடுக்காமல் பயணிப்பது தான் சாலையில் செல்லும்போது சக வாகன ஓட்டிகள் அதை கவனித்து சைடு ஸ்டாண்டை எடுக்காமல் செல்லும் வாகன ஓட்டியை சத்தம் போட்டு எச்சரிப்பார்கள். நாமும் பலமுறை இப்படியான சைடு ஸ்டாண்ட் போட்டு வரும் வாகன ஓட்டியை எச்சரித்திருப்போம். சில நேரம் நாமே இப்படியாக சைடு ஸ்டேண்டை போட்டுக் கொண்டே பயணித்து கொண்டிருப்போம்.

uno minda side stand sensor

இப்படியாக சைடு ஸ்டாண்டே போட்டு பயணிப்பது என்பது ஆபத்தானது. இன்று வரும் வாகனங்களில் சைடு ஸ்டாண்ட் சென்சார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சைடு ஸ்டான்டை போட்டுக் கொண்டே வாகனம் நகர்ந்தால் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் விதமாக பல்வேறு ஒலிகள்/எச்சரிக்கை விளக்குகள் எரியும் பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது. ஆனால் பழைய வண்டிகளில் அப்படி இல்லை. இன்று பயன்பாட்டில் பல வண்டிகள் பழைய வண்டிகள் இருப்பதால் இந்த சைடு ஸ்டாண்ட் பிரச்சினை மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

சைடு ஸ்டாண்ட் போட்டுக் கொண்டே பயணித்தால் திருப்பங்களின் போது ஸ்டாண்ட் சாலையில் முட்டி உங்கள் பைக் அல்லது ஸ்கூட்டர் விபத்தில் சிக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இதனால் பலர் உயிரிழந்திருக்ககூட வாய்ப்புகள் இருக்கிறது. சைடு ஸ்டாண்டை எடுக்காமல் பயணிப்பது என்பது எப்பொழுதும் ஆபத்தான விஷயமாக இருக்கும். ஆனால் அவசர நேரங்களில் நாம் மறந்து போய் பயணித்து விடுவோம். பயணிக்கும் போது நமக்கே சைடு ஸ்டாண்ட் போடப்பட்டிருப்பது தெரியாமல் இருக்கும்.

uno minda side stand sensor

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண யூநோ மெண்டா என்ற நிறுவனம் புதிய தயாரிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இந்நிறுவனம் சைடுஸ்டாண்ட் சென்சார் மற்றும் சுவிட்ச்களை வைத்து இந்த தயாரிப்பை உருவாக்கியுள்ளது. இது வெறும் 172 ரூபாய் செலவு செய்தால் போதும் இந்த கருவி நீங்கள் வாங்கி உங்கள் வாகனத்தில் பொருத்தி விடலாம். அதுவும் இந்த சுவிட்ச்க்கு தயாரிக்கப்பட்ட தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகள் வரை வாரண்டியும் இருக்கிறது.

இந்த புதிய கருவி சைடு ஸ்டாண்டில் சென்சாரை பொருத்தி இன்ஜின் சர்க்யூடன் உடன் இணைக்கப்பட்டிருக்கும் வண்டியை ஆன் செய்யும் போது சைடு ஸ்டாண்ட் போடப்பட்டிருந்தால் அது இன்ஜின் சர்க்யூட்டை என்கேஜ் செய்ய விடாமல் தடுத்துவிடும். இதனால் சைடு ஸ்டாண்ட் போட்டுக் கொண்டே வாகனம் ஓட்டுவது தவிர்க்கப்படும்.

uno minda side stand sensor

அது மட்டுமல்லாமல் இந்த சைடு ஸ்டாண்ட் போடப்பட்டிருக்கும்போது அதை வாகன ஓட்டிக்கு தெரிவிப்பதற்காக எல்இடி லைட் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இந்த எல்இடி லைட் ஒளிர்ந்தால் சைடு ஸ்டாண்ட் போடப்பட்டிருக்கிறது என அர்த்தம். இதனால் வாகன ஓட்டிகள் சுதாரித்துக்கொண்டு தங்கள் சைடு ஸ்டாண்டை எடுத்துவிட்டு பயணிக்க முடியும்.

வாகனம் சென்று கொண்டிருக்கும் போதே திடீரென சைடு ஸ்டாண்ட் ஓப்பன் செய்யப்பட்டால் அது குறித்தும் இந்த எல்இடி லைட் மூலம் வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ள முடியும். இதனால் சைடு ஸ்டாண்ட் பிரச்சனை இல்லாமல் வாகனம் ஓட்ட முடியும். சுமார் மூன்று லட்சம் வாகனங்களில் இந்த கருவியை பொருத்தி சோதனை செய்துள்ளதாகவும் அனைத்து விதமான தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் இந்த கருவி எந்தவித மாற்றமும் இல்லாமல் வேலை செய்வதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் புதிய கருவி டூவீலர் ஓட்டும் வாகன ஓட்டிகளை உயிரை காக்கும் கருவியாக உருவாக்கப்பட்டுள்ளது. இது தற்போது புதிதாக வரும் பைக்குகளுக்கு தேவையில்லாத ஒரு கருவியாக இருந்தாலும், பழைய பைக்குகள் வைத்திருக்கும் பலருக்கு இந்த கருவி தேவைப்படுகிறது. அவர்கள் பைக்குகளில் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு வர இது பெரும் அளவில் உதவுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டூவீலரில் நிகழும் விபத்துகளில் பல இப்படியாக சைடு ஸ்டான்டுகளை சரியாக எடுக்காமல் ஏற்படும் விபத்துகளாக இருக்கின்றன. இதில் பலர் உயிரிழந்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் நீங்கள் பழைய பைக்குகளை ஓட்டும் நபராக இருந்தால் இந்த கருவியை வாங்கி உங்களின் வாகனங்களில் பொருத்திக் கொள்வது நிச்சயம் நல்ல பலனை தரும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 31, 2023, 17:08 [IST]
English summary
Preventing two wheeler side stand accidents uno mindas rs 172 sensor solution explained
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X