கொச்சி மெட்ரோவிற்கு கொடியசைத்து விட்டு, பிரதமர் மோடி என்ன சொன்னார் தெரியுமா..??

Written By:

கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களை தொடர்ந்து இந்தியாவின் 8வது மெட்ரோ சேவை கேரளாவின் கொச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. இதை இன்று பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். 

கேராளவில் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த மோடி..!!

கேரளாவின் முதல் மெட்ரோ சேவையாக பயன்பாட்டிற்கு வந்துள்ள இதை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கேராளவில் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த மோடி..!!

பின்பு, அவர் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், ஆளுநர் பி. சதாசிவம் ஆகியோரோடு பாலவிவட்டம் மெட்ரோ நிலையத்தில் இருந்து பத்தடிப்பாலம் மெட்ரோ நிலையம் வரை பயணம் மேற்கொண்டார்.

கேராளவில் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த மோடி..!!

மெட்ரோ பயன்பாட்டை தொடங்கி வைத்த பிறகு ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில்தனது உரையை தொடங்கிய மோடி, மலையாள மொழியில் பேசத் தொடங்கினார்.

கேராளவில் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த மோடி..!!

கொச்சி நகரத்தின் ஒட்டுமொத்த பொது போக்குவரத்தையும் ஒற்றை முறையில் ஒன்றிணைந்துள்ளதாக கூறினார்.

மேலும் கொச்சி மெட்ரோ ரயிலின் பெட்டிகள் அனைத்தும் மேக் இன் இந்தியா பிரச்சாரத்தை பிரதிபலிப்பதாக தெரிவித்தார்.

கேராளவில் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த மோடி..!!

சுமார் ரூ.5180 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கொச்சி மெட்ரோ இரயிலை குறித்து 10 முக்கிய தகவல்கள்:

1.) அலுவா முதல் பாலவிவட்டம் இடையே 13 கி.மீ. தொலைவில் கொச்சி மெட்ரோ சேவை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

2.) மேலும் இதில் 22 கி.மீ தொலைவில் 11 நிலையங்களுக்கான பணி நடைபெற்று வருகிறது.

கேராளவில் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த மோடி..!!

3.) தற்போது முடிக்கப்பட்டுள்ள இந்த வழித்தடம் சுமார் ரூ.6000 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

4.) கொச்சி மெட்ரோவின் இந்த முதல் தளத்திற்கான வழித்தடம் மூன்று ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டது.

கேராளவில் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த மோடி..!!

5.) ஒவ்வொரு மெட்ரோ நிலையங்களும், கேரளாவின் தனிப்பட்ட கலாச்சாரங்களை பின்னணியாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

கேராளவில் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த மோடி..!!

6.) இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த மல்டி மாடல் போக்குவரத்து முறையை வழங்கும் நோக்கம் கொண்ட 'வாட்டர் மெட்ரோ' திட்டத்தின் ஒரு பகுதியாக கொச்சி மெட்ரோ அமைந்துள்ளது.

கேராளவில் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த மோடி..!!

7.) மாற்றுத்தினாளிகளுக்கு என தனிப்பட்ட பெட்டிகள், அவர்களின் பயன்பாட்டிற்காக வீல் சேர், முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை வசதிகள் போன்றவை உள்ளன.

கேராளவில் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த மோடி..!!

8.) மகளிர் மேம்பாட்டை கருதி கேரளா அரசு மேற்கொண்டு வரும் 'குடும்பஸ்திரி' என்ற அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு கொச்சி மெட்ரோவிற்கான பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

கேராளவில் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த மோடி..!!

9.) வாடிக்கையாளர்களின் சேவையில் இருந்து, மெட்ரோ நிலையங்களை சுத்தம் செய்வது, உணவுகளை வழங்குவது உட்பட பல்வேறு பிரிவுகளில் கொச்சி மெட்ரோவில் பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

கேராளவில் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த மோடி..!!

10.) இதே குடும்பஸ்த்ரீ அமைப்புடன், மாநிலத்தின் மாற்று பாலின கொள்கையின் அடிப்படையில் பல திருநங்கைகளும் கொச்சி மெட்ரோவில் பணியில் உள்ளனர்.

கேராளவில் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த மோடி..!!

இந்தியாவில் பல்வேறு மெட்ரோ சேவைகள் இருந்தாலும், நிலையங்களை வடிவமைத்த விதத்திலும், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு பணியிடங்களில் முன்னுரிமை அளித்த விதத்திலும் கொச்சி மெட்ரோ தனித்துவமான நிறுவனமாக உள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Prime Minister Narendra Modi Inaugurates Kochi Metro and says Coaches Reflect 'Make In India' Vision. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark