பிரதமர் மோடியின் கார் அணிவகுப்பில் உள்ள ரகசியங்கள் கசிந்தது; அவர் காருக்கு இவ்வளவு விலையா?

இந்திய பிரதமர் மோடியின் பாதுகாப்பு அணிவகுப்பில் அவர் பயன்படுத்தும் வாகனங்கள், அவரது பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா? உலக தலைவர்களுக்கு வழங்கப்படும் இணையான பாத

இந்திய பிரதமர் மோடியின் பாதுகாப்பு அணிவகுப்பில் அவர் பயன்படுத்தும் வாகனங்கள், அவரது பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா? உலக தலைவர்களுக்கு வழங்கப்படும் இணையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர் செல்லும் வாகனங்கள் எல்லாம் ஆயுதம் தாங்கிய வாகனங்கள் என்று கூறப்படுகிறது.

பிரதமர் மோடியின் கார் அணிவகுப்பில் உள்ள ரகசியங்கள் கசிந்தது; அவர் பயன்படுத்தும் கார்கள் இவ்வளவு கோடிகளா?

உலக அளவில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை கண்டு வருகிறது. நமது நாட்டின் முன்னேற்றத்தை பல்வேறு நாடுகள் உற்று கவனித்து வருகின்றனர். இப்படிப்பட்ட நாட்டில் பிரதமராக இருப்பது மிகப்பெரிய சவாலான விஷயம் தான். அந்த வகையில் தற்போது இந்திய பிரதமராக உள்ள மோடி பல்வேறு சவால்களை எதிர் கொள்ளவேண்டிய சூழ்நிலைகள் உள்ளது.

பிரதமர் மோடியின் கார் அணிவகுப்பில் உள்ள ரகசியங்கள் கசிந்தது; அவர் பயன்படுத்தும் கார்கள் இவ்வளவு கோடிகளா?

பிரதமராக இருப்பவர்கள் பல்வேறு இடங்களில் நடக்கும் கூட்டங்கள் சந்திப்புகள், என அவர்கள் பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அவர்களின் நேரம் முழுவதும் மிகச்சரியாக கணக்கிடப்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கும். இவ்வாறு மிக பரபரப்பிற்குள் இருக்கும் பிரதமர் மோடியின் உயிருக்கு அதை விட அதிக அளவில் அச்சுறுத்தல்கள் உள்ளன. சமீபத்தில் அவர் கொண்டு வந்த திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளால் அது மேலும் கூடியுள்ளது.

பிரதமர் மோடியின் கார் அணிவகுப்பில் உள்ள ரகசியங்கள் கசிந்தது; அவர் பயன்படுத்தும் கார்கள் இவ்வளவு கோடிகளா?

இப்படி ஒருவரின் உயரை தொடர்ந்து பாதுகாத்து வருவது எஸ்.பி.ஜி என்ற அமைப்பு தான். மோடி உள்நாட்டில் இருந்தாலும் வெளிநாடுகளுக்கு சென்றாலும் இந்த குழு தான் அவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை எல்லாம் செய்யும். அவர் பயணம் செய்யக்கூடிய கார், முதல் எல்லாவற்றிலும் அதிகமான பாதுகாப்பு வசதிகள் இருக்கும். பரதமர் மோடி பயன்படுத்தும் கார்கள் குறித்தும் அவைகளில் உள்ள வசதிகள் குறித்தும் கீழே காண்போம்.

பிரதமர் மோடியின் கார் அணிவகுப்பில் உள்ள ரகசியங்கள் கசிந்தது; அவர் பயன்படுத்தும் கார்கள் இவ்வளவு கோடிகளா?

பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ்

பஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார்கள் தான் மோடி பயன்படுத்தும் அதிக விலையுள்ள கார். அவர் பயன்படுத்தும் கார்களில் இருந்த மஹேந்திரா ஸ்கோர்ப்பியோ காரை நீக்கி விட்டு இந்த கார் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை சுமார் 10 கோடி. இதே போல மூன்று கார்கள் உள்ளன. அதில் எந்த காரில் மோடி இருக்கிறார் என்பது அவர் காரில் இருந்து கீழே இறங்கும் போது தான் தெரியும்.

பிரதமர் மோடியின் கார் அணிவகுப்பில் உள்ள ரகசியங்கள் கசிந்தது; அவர் பயன்படுத்தும் கார்கள் இவ்வளவு கோடிகளா?

இந்த 3 கார்களும் முற்றிலும் புல்லட் ப்ரூப் செய்யப்பட்டது. ஏ.கே 47 துப்பாக்கியை வைத்து காருக்கு பக்கத்தில் இருந்து சுட்டால் கூட காருக்குள் இருப்பவர்களுக்கு எதுவும் ஆகாது. மேலும் 17 கிலோ பவர் உள்ள ஒரு குண்டு காருக்கு அருகில் வெடித்தால் கூட காருக்கு லேசான சேதத்தை தவிர கார் இருந்த இடத்தை விட அசையகூட செய்யாது.

4 டன் எடை உள்ள இந்த காரில் தனியாக ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளது. அதன் மூலமே ஏசி வேலை செய்யும். முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த காரின் டயர் பஞ்சர் ஆனால் கூட இந்த கார் 80 கி.மீ. வேகத்தில் செல்லும்.

பிரதமர் மோடியின் கார் அணிவகுப்பில் உள்ள ரகசியங்கள் கசிந்தது; அவர் பயன்படுத்தும் கார்கள் இவ்வளவு கோடிகளா?

பிஎம்டபிள்யூ எக்ஸ்5

பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு வழங்ககூடிய எஸ்பிஜி அதிகாரிகள் அவரும் செல்வதற்காக 8 பிஎம்டபிள்யூ எக்ஸ் 5, எஸ்யூவி கார்கள் உள்ளன. இந்த கார்களை பாதுகாப்பு அதிகாரிகள் தான் பயன்படுத்துவார்கள், பிரதமர் மோடி இதை பயன்படுத்த மாட்டார்.

பிரதமர் மோடியின் கார் அணிவகுப்பில் உள்ள ரகசியங்கள் கசிந்தது; அவர் பயன்படுத்தும் கார்கள் இவ்வளவு கோடிகளா?

இந்த கார்களில் பாதுகாப்பு படை வாகனம் என்பதற்கான எந்த அடையாளமும் இருக்காது. சாதாரணமாக டிராபிக்கில் கலந்து விட்டால் சாதாரமாக ரோட்டில் செல்லும் கார் போல தான் காட்சியளிக்கும்.

இந்த காரில் உள்ள இன்ஜின் அம்சங்கள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. இன்னும் இந்த மாடல் காரின் பேஸ் வேரியன்டின்6 சிலிண்டர் இன்ஜினுடன் 258 பிஎச்பி பவரையும், 560 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

பிரதமர் மோடியின் கார் அணிவகுப்பில் உள்ள ரகசியங்கள் கசிந்தது; அவர் பயன்படுத்தும் கார்கள் இவ்வளவு கோடிகளா?

லேண்ட்ரோவர் ரேஞ்ச் ரோவர்

பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த லேண்ட் ரோவர் என்ற நிறுவனம் தயாரித்த கார் தான் ரேஞ்ச் ரோவர். மோடி பயன்படுத்தும் எஸ்யூவி கார்களின் இது தான் சிறந்த கார். மோடி திறந்த வெளியில் மக்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும் நேரங்களில் இந்த கார்களை பயன்படுத்துவார்.

பிரதமர் மோடியின் கார் அணிவகுப்பில் உள்ள ரகசியங்கள் கசிந்தது; அவர் பயன்படுத்தும் கார்கள் இவ்வளவு கோடிகளா?

குறிப்பாக ரோடு ஷோவில் அவர் கலந்து கொள்ளும் போது இந்த காரில் உள்ள சன் ரூப்பை ஓப்பன் செய்து அது வழியாக தான் மக்களை சந்திப்பார். மோடி பலமுறை இந்த காரை பயன்படுத்துவார். என்னதான் பிரிட்டிஷில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமாக இந்த கார் நிறுவனம் இருந்தாலும் இந்த நிறுவனத்தை கடந்த 2008ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த டாடா கார் நிறுவனம் வாங்கிவிட்டது.

பிரதமர் மோடியின் கார் அணிவகுப்பில் உள்ள ரகசியங்கள் கசிந்தது; அவர் பயன்படுத்தும் கார்கள் இவ்வளவு கோடிகளா?

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 200

டெயோட்டா லேண்ட் க்ரூஸர் காரில் அவர் அடிக்கடி பயணம் செய்வதை பார்க்கமுடிகிறது. ஜப்பான் நாட்டை சேர்ந்த கார் நிறுவனம் இந்த காரை தயார் செய்துள்ளது. பல அரசியல் தலைவர்கள் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர். இதில் பிரதமர் மோடி ஏறுவதற்கும் இறங்குவதற்கும் செளகரியமாக இருக்கும்.

பிரதமர் மோடியின் கார் அணிவகுப்பில் உள்ள ரகசியங்கள் கசிந்தது; அவர் பயன்படுத்தும் கார்கள் இவ்வளவு கோடிகளா?

இந்த காரின் மேற்பகுதியில் பெரிய சன்ரூப் பகுதி உள்ளது. இதன் மூலமாக பின்வரிசையில் அமரும் ஆட்கள் தாராளாக வெளியே நிற்கலாம். இந்த காரையும் அவர் மக்கள் கூடி நிற்கும் பகுதியில் அவர்களின் வரவேற்ப்பை பெற பயன்படுத்துவார்.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ

பிரதமர் மோடி செல்லும் அணி வகுப்பில் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ கார்கள் இருக்கும். இது பார்க்க லேண்ட்க்ரூஸர் கார் போலவே இருக்கும் ஆனால் இதில் பிரதமர் மோடி பயணிக்க மாட்டார். ஆனால் அவரது பாதுகாப்பு படையில் அதிகாரிகள் பயணம் செய்வார்கள், இந்த கார் அவசர காலங்களில் பயன்படுத்தபடும் எனவும் கூறப்படுகிறது.

பிரதமர் மோடியின் கார் அணிவகுப்பில் உள்ள ரகசியங்கள் கசிந்தது; அவர் பயன்படுத்தும் கார்கள் இவ்வளவு கோடிகளா?

டெயோட்டா பார்ச்சூனர்

இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி வரும் பார்ச்சூனர் காா் இது. இதுவும் மோடியின் கார் அணிவகுப்பில் முக்கிய வேலையை செய்யும் எப்பொதும் மோடி செல்லும் காருக்கு பக்கவாட்டிலேயே தான் இந்த கார் செல்லும்.

ஏதேனும் தாக்குதல்கள் நடந்தால் உடனடியாக இந்த கார் குறுக்கிட்டு தாக்குதல் நடக்கும் பகுதியில் இருந்து மோடியை காரை முடிந்த அளவு மறைக்க இந்த கார் பயன்படும் அதனால் இந்த காரும் முழுவதும் புல்லட் ப்ரூப், என பல அம்சங்களை கொண்டுள்ளது.

மெர்ஸிடியஸ் பென்ஸ் ஸ்பிரின்டர்

மெர்ஸிடியஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஸ்பிரின்ட்ர் வேன் அவருடன் செல்லும் வாகனத்தில் ஒன்று இந்த வேன் மொபைல் ஆம்புலன்ஸாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அவசர காலங்களில் பிரதமருக்கு தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தும் இந்த வாகனத்தில் இருக்கும். மேலும் இந்த வேன் 161 பிஎச்பி பவர் அல்லது 188 பிஎச்பி இன்ஜின் கொண்டதாக இருக்கும்.

பிரதமர் மோடியின் கார் அணிவகுப்பில் உள்ள ரகசியங்கள் கசிந்தது; அவர் பயன்படுத்தும் கார்கள் இவ்வளவு கோடிகளா?

டாடா சபாரி

இந்திய அரசியல்வாதிகளால் தவிர்க்க முடியாத கார் டாடா சபாரி, பெரும்பாலும் அரசியல்வாதிகள் இந்த காரை வாங்குவர். பரதமர் மோடியை இந்த காரை அவ்வப்போது தான் பயன்படுத்துவார். ஆனால் அவரின் காருக்கு அருகிலேயே இந்த கார் செல்லும்,

இந்த கார் ஒரு சிக்னல் ஜாம்மர் கருவியாக செயல்படுகிறது. ரிமோட் கண்ட்ரோல் மூலம் யாரம் வெடிகுண்டு வைத்து மோடியின் காரை தாக்க முயன்றால் இந்த கருவி சிக்னல்களை ஜாம் செய்து இந்த முயற்சியை முறியடித்து விடும்.

மஹேந்திர ஸ்கார்ப்பியோ

மஹேந்திர ஸ்கார்ப்பியோ கார் தான் இந்திய பிரதமரின் அங்கீரிக்கப்பட்ட வாகனமாக இருந்தது. தற்போது அது பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காராக மாற்றப்பட்டு விட்டது. எனினும் இந்த ஸ்கார்ப்பியோ கார் அவரது அணிவகுப்பில் வரு்ம. அதில் மோடியுடன் வருபவர்கள் பயணம் செய்வார்கள்.

பிரதமர் மோடியின் கார் அணிவகுப்பில் உள்ள ரகசியங்கள் கசிந்தது; அவர் பயன்படுத்தும் கார்கள் இவ்வளவு கோடிகளா?

மேலே குறிப்பிட்ட வாகனங்களில் பிரதமர் மோடி பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் ஆயுதங்களை தாங்கிய வாகனங்ள் தான். அந்த வாகனங்கள் மூலம் பல விதமான ஆயுத தாக்குதல்கள் நடத்த முடியும். ஆனால் அது எவ்வாறு என்னென்ன ஆயுதங்கள் அடங்கியது என்பது குறித்த தகவல் ரசிகயமாக வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறான பாதுகாப்பு வசதிகள் மிகச்சில உலக தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Article Published On: Tuesday, May 29, 2018, 11:43 [IST]
English summary
Prime Minister Narendra Modi & the cars in his convoy: Land Rover Range Rover to Toyota Landcruiser. Read in Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+