இந்த சாதாரண காரை வாங்கியது இவ்ளோ பெரிய ஆளா! முத்திரையை உத்து பாத்ததும் ஒடம்புலாம் புல்லரிச்சிருச்சு!
திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் (Travancore Royal Family) இளம் உறுப்பினர்களில் ஒருவர் இளவரசர் ஆதித்யா வர்மா (Adithya Varma). இவர் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது ஆடி ஏ4 (Audi A4) கார் ஆகும். இது சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்தது.
இங்கே குறிப்பிட வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதுதான் திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் வாங்கிய ஆடி நிறுவனத்தின் முதல் கார் ஆகும். இதற்கு முன்பு அவர்கள் ஆடி நிறுவனத்தின் கார் எதையுமே வாங்கியதில்லை. இளவரசர் ஆதித்யா வர்மா, ஆடி ஏ4 காரை டெலிவரி எடுக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இளவரசர் ஆதித்யா வர்மா, தற்போதைய தலைமுறை ஆடி ஏ4 காரை வாங்கியுள்ளார். வெள்ளை நிறத்தில் அந்த கார் பளிச்சென இருக்கிறது. இந்த காரில் நம்பர் பிளேட்டிற்கு கீழே திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் முத்திரை இருக்கிறது. இதை பயன்படுத்தி கொள்வதற்கு அவர்கள் சிறப்பு அனுமதி பெற்றுள்ளனர் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.
இதற்கு முன்பாக திருவிதாங்கூர் மன்னர் குடும்பம், மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்தின் கார்களைதான் அதிகமாக பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது முதல் முறையாக ஆடி நிறுவனத்தின் கார் வாங்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஆடி ஏ4 காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 43.85 லட்ச ரூபாய் மட்டுமே.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 51.85 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். உண்மையை சொல்வதென்றால், இது ஆடி நிறுவனத்தின் தயாரிப்புகளில் சற்று விலை குறைவான கார்களில் ஒன்று. இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், இது இளவரசர் ஆதித்யா வர்மாவின் நிறுவனத்தின் பயன்பாட்டிற்காகவே வாங்கப்பட்டுள்ளது.
அவர் இந்த காரை தனிப்பட்ட முறையில் பயன்படுத்த போவதில்லை. இளவரசர் ஆதித்யா வர்மாவே இந்த தகவலை கூறியுள்ளார். அத்துடன் ஆடி ஏ4 காரை வாங்கும் முடிவை ஆதித்யா வர்மா எடுக்கவில்லை. அவரது நிறுவனத்தின் இயக்குனர்கள்தான் இந்த முடிவை எடுத்துள்ளனர். இதுவும் இளவரசர் ஆதித்யா வர்மாவே தெரிவித்த தகவல்தான்.
ஆரம்பத்தில் பல்வேறு கார்களை இயக்குனர்கள் பரிசீலனை செய்துள்ளனர். இறுதியில் ஆடி ஏ4 கார்தான், அவர்களது பட்ஜெட்டிற்கு ஏற்றதாக இருந்துள்ளது. எனவே ஆடி ஏ4 காரை வாங்கும் முடிவு எடுக்கப்பட்டது. மெர்சிடிஸ்-பென்ஸ் சி-க்ளாஸ் (Mercedes-Benz C-Class) மற்றும் பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் (BMW 3-Series) போன்றவைதான், ஆடி ஏ4 காரின் போட்டி மாடல்கள் ஆகும்.
ஆனால் ஆடி ஏ4 காருடன் ஒப்பிடும்போது, அவை விலை உயர்ந்தவை. இதன் காரணமாக ஆடி ஏ4 காரை வாங்கியுள்ளனர். பெரிய ஆட்களுக்கு வேண்டுமென்றால், ஆடி ஏ4 கார் விலை குறைவானதாக இருக்கலாம். ஆனால் சாதாரண மனிதர்களுக்கு அதுவும் ஒரு விலை உயர்ந்த கார்தான் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
ஆடி ஏ4 காரில், 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 190 பிஎஸ் பவர் மற்றும் 320 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, முன் சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையில் இளவரசர் ஆதித்யா வர்மா எளிமையான ஒரு மனிதர்தான். அவர் தனது தினசரி பயணங்களுக்கு மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) காரை பயன்படுத்தி வருகிறார் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஆச்சரியமான ஒரு விஷயம். எனவே அவரது நிறுவனத்திற்கு விலை குறைவான ஆடி ஏ4 கார் வாங்கப்பட்டிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.


Click it and Unblock the Notifications