காட்டெருமை போன்ற பைக்கை வாங்கிய இளவரசர்! இதோட விலைலாம் அரச குடும்பத்துக்கு வெறும் டீ செலவு மாதிரிதான்!
இந்தியாவில் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் அதிபர்கள் எல்லாம் மிகவும் விலை உயர்ந்த கார் மற்றும் பைக்குகளை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்களே இப்படி என்றால், அரச குடும்பங்களை சேர்ந்தவர்களை பற்றி சொல்லவா வேண்டும்? இந்தியாவில் அரச குடும்பங்களை சேர்ந்த பலர் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
இதில், ஒரு சிலர் வாகன ஆர்வலர்களாகவும் இருக்கின்றனர். திருவிதாங்கூர் அரச குடும்பத்தை (Travancore Royal Family) சேர்ந்த இளவரசர் ஆதித்யா வர்மா (Prince Adithya Varma) இதற்கு மிகச்சிறந்த உதாரணம். இவரை பற்றிய செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஆட்டோமொபைல் தளம் கடந்த காலங்களில் வாசகர்களுக்கு வழங்கியுள்ளது.

இவரது வாகன ஆர்வத்திற்கு இதை விட வேறு சிறந்த உதாரணம் எதுவும் இருக்க முடியாது. இளவரசர் ஆதித்ய வர்மாவின் வாகன ஆர்வத்தை எடுத்துக்காட்டும் மற்றொரு நிகழ்வு ஒன்று சமீபத்தில் அரங்கேறியுள்ளது. ஆம், இளவரசர் ஆதித்யா வர்மா புதிய வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார்.
அது பிஎம்டபிள்யூ கே1600பி (BMW K1600B) பைக் ஆகும். இது கிராண்ட் டூரிங் மோட்டார்சைக்கிள் (Grand Touring Motorcycle) ரகத்தை சேர்ந்தது. கேரளா (Kerala) மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் (Thiruvananthapuram) உள்ள ஒரு பிஎம்டபிள்யூ ஷோரூமில், இந்த பிரம்மாண்ட பைக்கை இளவரசர் ஆதித்யா வர்மா டெலிவரி எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது மிகவும் வேகமாக பரவி வருகிறது. பிஎம்டபிள்யூ கே1600பி பைக்கில் மிகவும் சக்தி வாய்ந்த 1,645 சிசி 6 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 160 பிஎஸ் பவர் மற்றும் 180 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர பெரிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், க்ரூஸ் கண்ட்ரோல், ட்யூயல் சேனல் ஏபிஎஸ், சென்ட்ரல் லாக்கிங், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், ஸ்பீக்கர் என ஏராளமான வசதிகளும் (Features) பிஎம்டபிள்யூ கே1600பி பைக்கில் வாரி வழங்கப்பட்டுள்ளன.
இந்த பைக்கின் ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 35 லட்ச ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹோண்டா கோல்டுவிங் (Honda Goldwing) உள்ளிட்ட பைக்குகள் உடன், பிஎம்டபிள்யூ கே1600பி பைக் விற்பனையில் போட்டியிட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பிஎம்டபிள்யூ கே1600பி மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தாலும் கூட, மிகவும் சிறப்பான கிராண்ட் டூரிங் மோட்டார்சைக்கிள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இந்த பைக்கில், இளவரசர் ஆதித்யா வர்மா அவ்வப்போது எங்கேயாவது சுற்றுலா சென்றாலும் கூட செல்லலாம். அதற்காக அவர் முன்கூட்டியே திட்டமிட்டு இந்த பைக்கை வாங்கியிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








