டிஜிட்டல் பிரிண்ட் கிடையாது! இதெல்லாம் கையாலேயே வரைந்த ஓவியம்ன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க!

மத்திய பிரதேச மாநிலம் பர்வாணி என்ற பகுதியில் உள்ள ஒரு அரசு குடும்பத்தை சேர்ந்தவர் மகாராணி விதிதா சிங். அப்பகுதியில் ஒரு காலத்தில் ஆட்சியில் இருந்த அரசு குடும்பத்தை சேர்ந்தவர் இவர். தற்போது இவர் இருக்கும் ஊரில் இவரை மகாராணியாக மக்கள் பார்க்கிறார்கள். இவருக்கு ஒரு வித்தியாசமான பழக்கம் இருக்கிறது. இவர் ஒரு ஓவியக் கலைஞராக இருக்கும் நிலையில், இவர் ஆட்டோ மொபைல் குறித்து தனித்துவமான ஓவியங்களை வரையும் கலைஞராக திகழ்ந்து வருகிறார்.

இவர் பழைய மற்றும் புதிய வாகனங்களை ஓவியமாக வரைந்து தனித்துவமாக இருக்கும் வகையில் அதை வடிவமைக்கும் ஆற்றல் மிக்கவர். இவர் வரைந்த ஓவியங்கள் எல்லாம் சமீபத்தில் பெங்களூருவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த கண்காட்சிக்கு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கும் அழைப்பு வந்திருந்தது. அதன் பெயரில் அங்கு சென்று பார்த்தபோது நம்மையே ஆச்சரியப்படுத்தும் வகையில் பல்வேறு ஓவியங்கள் இருந்தன. இது குறித்த வீடியோ தொகுப்பை இங்கே உங்களுக்காக வழங்கி உள்ளோம்.

இந்த நிகழ்ச்சியில் முழுவதுமாக மகாராணி விதிதா சிங் வரைந்த ஓவியங்கள் தான் காட்சிப்படுத்தப்பட்டன. பல்வேறு விதமான ஓவியங்களை அவர் காட்சிப்படுத்தியிருந்தார். ஆயில் பெயிண்டிங் மூலம் வரைந்தது, சார்கோல் மூலம் வரைந்த ஓவியம் என விதவிதமான கார்களை, விதவிதமான ஆங்கிள்களில் வரைந்த ஓவியங்கள் எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

vidita singh automotive rhapsody

இந்த நிகழ்ச்சிக்கு மைசூர் மகாராஜா குடும்பத்தினரும் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஒவ்வொரு ஓவியங்களையும் அனைவரும் பார்த்து ரசித்தார்கள், பல்வேறு விதமான பிரமிப்பு அம்சங்களுடன் இந்த ஓவியங்கள் எல்லாம் வரையப்பட்டிருந்தன. பலர் இதை ஆச்சரியமாக பார்த்து சென்றார்கள். இந்த ஓவியங்களை எல்லாம் இந்த வீடியோவில் நீங்களும் காணலாம்!

More from DriveSpark

Article Published On: Tuesday, August 20, 2024, 12:40 [IST]
English summary
Princess vidita singh automotive rhapsody art gallery full details
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+