IPL முடிச்சிட்டு இந்தியா வந்த கையோடு புதிய BMW காருடன் பிரித்வி ஷா!! ஷோரூம் விலையே ரூ.70 லட்சத்தை தாண்டுது

சவுதி அரேபியாவில் நடந்து முடிந்த 2021 ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டவர் பிரிஷ்வி ஷா. அதிரடி வலக்கை பேட்ஸ்மேனான பிரிஷ்வி ஷா தேசிய இந்திய கிரிக்கெட் அணிக்கும் விளையாடிய அனுபவம் உள்ளவர்.

IPL முடிச்சிட்டு இந்தியா வந்த கையோடு புதிய BMW காருடன் பிரித்வி ஷா!! ஷோரூம் விலையே ரூ.70 லட்சத்தை தாண்டுது

2021 ஐபிஎல் தொடரில் ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல் தகுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடமும், இரண்டாவது தகுதிச்சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடமும் தொடர்ச்சியாக தோல்வி கண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.

IPL முடிச்சிட்டு இந்தியா வந்த கையோடு புதிய BMW காருடன் பிரித்வி ஷா!! ஷோரூம் விலையே ரூ.70 லட்சத்தை தாண்டுது

அதன்பின் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில் நமது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் முடிந்தாலும், மிக விரைவில் துவங்கவுள்ள 2021 உலகக்கோப்பை 20 ஓவர் போட்டிக்காக சில இந்திய அணி வீரர்கள் இன்னமும் UAE-இல் தான் உள்ளனர்.

IPL முடிச்சிட்டு இந்தியா வந்த கையோடு புதிய BMW காருடன் பிரித்வி ஷா!! ஷோரூம் விலையே ரூ.70 லட்சத்தை தாண்டுது

2021 டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி குழுவில் இடம்பெறாத வீரர்கள் மட்டும் இந்தியா வந்தடைந்துள்ளனர். சமீப காலமாக அதிரடியாக ஆடிய போதிலும், உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் பிரித்வி ஷா-விற்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் மற்ற வீரர்களுடன் UAE-இல் இருந்து கிளம்பி இந்தியா வந்தவர் சமீபத்தில் புதிய பிஎம்டபிள்யூ காருடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

IPL முடிச்சிட்டு இந்தியா வந்த கையோடு புதிய BMW காருடன் பிரித்வி ஷா!! ஷோரூம் விலையே ரூ.70 லட்சத்தை தாண்டுது

இதில், "கீழிலிருந்து ஆரம்பித்தோம், தற்போது நாங்கள் இங்கு உள்ளோம்" என வாழ்க்கையில் தனது வளர்ச்சியை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ள பிரிஷ்வி ஷா, இதற்கு கீழ் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் ஹாஸ்டேக்குகளை பதிவிட்டுள்ளார். இதில் இருந்து இந்த எதிர்கால இந்திய துவக்க ஆட்டகாரர் புதியதாக பிஎம்டபிள்யூ கார் வாங்கி இருப்பதை நமக்கு தெரியப்படுத்துகிறார் என்பது தெளிவாகிறது.

IPL முடிச்சிட்டு இந்தியா வந்த கையோடு புதிய BMW காருடன் பிரித்வி ஷா!! ஷோரூம் விலையே ரூ.70 லட்சத்தை தாண்டுது

2021 ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 479 ரன்கள் குவித்துள்ள பிரித்வி ஷா தற்போது வாங்கியிருப்பது பிஎம்டபிள்யூவின் 6 சீரிஸ் மாடலாகும். இந்திய சந்தையில் ஜிடி வெர்சனில் மட்டுமே தற்போதைக்கு விற்பனைக்கு கிடைக்கும் பிஎம்டபிள்யூ 6 சீரிஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.67.90 லட்சத்தில் இருந்து ரூ.77.90 லட்சம் வரையில் உள்ளன.

IPL முடிச்சிட்டு இந்தியா வந்த கையோடு புதிய BMW காருடன் பிரித்வி ஷா!! ஷோரூம் விலையே ரூ.70 லட்சத்தை தாண்டுது

இந்த படங்களில் பிரித்வி ஷா புதியதாக வாங்கி இருக்கும் பிஎம்டபிள்யூ காரானது வெள்ளை நிற நம்பர் ப்ளேட்டை கொண்டுள்ளது. எனவே இந்த காரினை UAE-இல் நடந்த 2021 ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே பிரித்வி ஷா முன்பதிவு செய்திருக்க வேண்டும். ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடினாலும், பிரித்வி ஷா மும்பையில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL முடிச்சிட்டு இந்தியா வந்த கையோடு புதிய BMW காருடன் பிரித்வி ஷா!! ஷோரூம் விலையே ரூ.70 லட்சத்தை தாண்டுது

இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் தான் 6 சீரிஸ் க்ரான் டூரிஸ்மோ (ஜிடி) மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை அறிமுகப்படுத்தி இருந்தது. தோற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் கொண்டுவரப்பட்ட இந்த பிஎம்டபிள்யூ ஃபேஸ்லிஃப்ட் காரில் சில புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டு இருந்தன.

IPL முடிச்சிட்டு இந்தியா வந்த கையோடு புதிய BMW காருடன் பிரித்வி ஷா!! ஷோரூம் விலையே ரூ.70 லட்சத்தை தாண்டுது

பிரித்வி ஷா 6 சீரிஸ் காரை வாங்கியுள்ளதை பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனமும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஆனால் இவர் 6 சீரிஸில் எந்த வேரியண்ட்டை வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. ஏனெனில் இந்தியாவில் 630ஐ எம் ஸ்போர்ட், 620டி லக்சரி லைன் மற்றும் 630டி எம் ஸ்போர்ட் என்கிற மூன்று விதமான வேரியண்ட்களில் பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

IPL முடிச்சிட்டு இந்தியா வந்த கையோடு புதிய BMW காருடன் பிரித்வி ஷா!! ஷோரூம் விலையே ரூ.70 லட்சத்தை தாண்டுது

இவை மூன்றிலும் ஒவ்வொரு விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அதாவது 630ஐ எம் ஸ்போர்ட் வேரியண்ட்டில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினும், 620டி லக்சரி லைனில் 2.0 லிட்டர் டீசல் என்ஜினும், 630டி எம் ஸ்போர்ட் வேரியண்ட்டில் 3.0 லிட்டர் நேரடி 6-சிலிண்டர் டீசல் என்ஜினும் பொருத்தப்படுகின்றன.

IPL முடிச்சிட்டு இந்தியா வந்த கையோடு புதிய BMW காருடன் பிரித்வி ஷா!! ஷோரூம் விலையே ரூ.70 லட்சத்தை தாண்டுது

இதில் அளவில் பெரிய 3.0 லிட்டர் டீசல் என்ஜின் உடன் கிடைக்கும் 630டி எம் ஸ்போர்ட் வேரியண்ட்டின் விலை தான் ரூ.77.90 லட்சம் என்கிற அளவில் உள்ளது. இந்த என்ஜின்களுடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6.5 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த பிஎம்டபிள்யூ காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 250கிமீ ஆகும்.

IPL முடிச்சிட்டு இந்தியா வந்த கையோடு புதிய BMW காருடன் பிரித்வி ஷா!! ஷோரூம் விலையே ரூ.70 லட்சத்தை தாண்டுது

கூபே ஸ்டைலிலான செடான் காரான பிஎம்டபிள்யூ 6 சீரிஸ்-இன் சமீபத்திய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினால் சற்று அகலமான ‘கிட்னி' வடிவ க்ரில், ரீ-ஸ்டைலில் ஹெட்லைட்கள் மற்றும் திருத்தப்பட்ட பம்பர்கள் என முன்பக்கம் பெரியதாக மாற்றப்பட்டுள்ளது. உட்புற டேஸ்போர்டில் 12.3 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தையும், இதே அளவிலான திரை உடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலும் பொருத்தப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, October 18, 2021, 15:05 [IST]
English summary
prithvi shaw buys new bmw car.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+