மலையாள நடிகர் பிரித்விராஜ் இவ்ளோ பெரிய கார் காதலரா!! ஒரே ஒரு காருக்காக பல கோடி ரூபாய்களை வாரி இறைச்சிருக்காரு!

மலையாள திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரித்விராஜ் போர்ஷே பிராண்டின் விலை உயர்ந்த சொகுசு கார் மாடலை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த லக்சூரி காரின் விலை மிக மிக அதிகம் என கூறப்படுகின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மலையாள திரை உலகின் முன்னணி நடிகர்களில் பிரித்விராஜ்-ம் ஒருவர் ஆவார். இவரே மிக மிக அதிக விலைக் கொண்ட போர்ஷே (Porsche) காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீப காலமாக மோலிவுட்டில் உள்ள நடிகர்கள் சொகுசு கார்களை அதிகளவில் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர்.

Prithviraj sukumaran porsche 911 gt3 touring

அந்தவகையில், சமீபத்தில் முன்னணி மலையாள நடிகரான ஃபஹத் ஃபாசில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 வி8 (Land Rover Defender 90 V8) கார் மாடலையும், தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்னர் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 450 சொகுசு எஸ்யூவி (Mercedes Benz GLS 450 Luxury SUV) ரக காரையும் வாங்கி இருந்தார்.

இவரைத் தொடர்ந்தே மோலிவுட்டின் மற்றுமொரு ஸ்டாரான பிரித்விராஜும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போர்ஷே காரை வாங்கி இருக்கின்றார். அவர் வாங்கி இருப்பது போர்ஷே 911 ஜிடி3 டூரிங் (Porsche 911 GT3 Touring) வகை கார் மாடல் ஆகும். சூப்பர் கார் இணையான வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட கார் மாடலே இது ஆகும்.

Porsche 911 gt3 touring side view

இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 3.20 கோடி ஆகும். இத்தகைய விலை உயர்ந்த காரையே பிரித்விராஜ் வாங்கி இருக்கின்றார். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 3.80 கோடியை நெருங்கக் கூடும் என கூறப்படுகின்றது.

இத்தகைய விலை உயர்ந்த காரை பிரித்விராஜ் வாங்கியதன் காரணத்தினாலேயே மலையாள திரை உலகின் ஹாட் டாபிக்காகவே அவர் மாறி இருக்கின்றார். மேலும், வாகன உலகின் தலைப்பு செய்தியாகவும் அவர் மாறி இருக்கின்றார். இதற்கு முன்னதாகவும் இவர் போர்ஷே காரை வாங்கி இருந்தார்.

Porsche 911 gt3 touring top view

அது போர்ஷே 911 கேப்ரியோலெட் கன்வெர்டபிள் கார் மாடல் ஆகும். இந்த காரைத் தொடர்ந்தே தற்போது போர்ஷே 911 ஜிடி3 காரை அவர் வாங்கி இருக்கின்றார். இந்த காரை மட்டுமில்லைங்க, நடிகர் பிரித்வி ராஜ்மிகப் பெரிய தொழிலதிபர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் மிக மிக அதிக விலைக் கொண்ட கார்கள் பலவற்றை அவர் பயன்படுத்தி வருகின்றார்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜி63, லம்போர்கினி ஹூராகேன், மினி கூப்பர் ஜேசிடபிள்யூ, லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் வோக் ஆகிய சொகுசு கார் மாடல்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். இதுதவிர, 1995 மாடல் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரையும் அவர் பயன்படுத்தி வருகின்றார். மேலும், 2021 ஆம் ஆண்டில் இவர் டாடா சஃபாரி காரையும் வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மலையாள நடிகர் பிரித்வி ராஜ் தற்போது வாங்கி இருக்கும் போர்ஷே 911 ஜிடி3 டூரிங் கார் மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது. மேலும், இந்த கார் வெறும் 3.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டதாகவும் இருக்கின்றது. இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் எஞ்ஜின் அதிகபட்சமாக 375 kW/510 பிஎஸ் பவரை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மலையாள நடிகர் பிரித்வி ராஜ் அதிக வேகத்தில் வாகனங்களை இயக்கக் கூடியவர் என குற்றம் சாட்டப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உலா வந்துக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே மிகவும் அதிக வேகத்தில் சீறி பாயும் காரை அவர் வாங்கி இருக்கின்றார்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 9, 2023, 5:00 [IST]
English summary
Prithviraj buys new porsche 911 gt3 touring
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X