விமானத்தை விஞ்சிய தனியார் ஆம்புலன்ஸ்கள்... வெறும் 5 கிலோ மீட்டர் பயணிக்க இவ்வளவு அதிக கட்டணமா?

தனியார் ஆம்புலன்ஸ்களில் நடக்கும் கட்டண கொள்ளை தொடர்பாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமானத்தை விஞ்சிய தனியார் ஆம்புலன்ஸ்கள்... வெறும் 5 கிலோ மீட்டர் பயணிக்க இவ்வளவு அதிக கட்டணமா?

எந்தவொரு சமயம் என்றாலும், ஆம்புலன்ஸ்கள் மிகவும் முக்கியமான வாகனங்கள். தற்போது கொரோனா வைரஸ் (கோவிட்-19) பெருந்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான தேவையும், அவற்றின் முக்கியத்துவமும் முன்பை விட அதிகரித்துள்ளது. இப்படிப்பட்ட இக்கட்டான ஒரு சூழலில், ஆம்புலன்ஸ்களை தவறாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.

விமானத்தை விஞ்சிய தனியார் ஆம்புலன்ஸ்கள்... வெறும் 5 கிலோ மீட்டர் பயணிக்க இவ்வளவு அதிக கட்டணமா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சமயத்தில், கேரளாவில் இருந்து வாளையார் சோதனை சாவடி வழியாக கோவைக்கு வர ஒரு சிலர் ஆம்புலன்ஸ்களை தவறாக பயன்படுத்தினர். அதிகாரிகளின் சோதனையில், இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் இருந்து வெளியேறுவதற்கும் ஆம்புலன்ஸ்களை தவறாக பயன்படுத்திய செய்தி வெளியானது.

விமானத்தை விஞ்சிய தனியார் ஆம்புலன்ஸ்கள்... வெறும் 5 கிலோ மீட்டர் பயணிக்க இவ்வளவு அதிக கட்டணமா?

தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் பொதுமக்களிடம் அதிகளவு பணம் பெற்றுக்கொண்டு, அவர்களை சொந்த ஊருக்கு கூட்டி சென்று வந்து கொண்டிருந்தார். இந்த விஷயம் தெரிந்ததும், அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தாலும், பயணங்களை மேற்கொள்வது அவ்வளவு சுலபமாக இல்லை.

விமானத்தை விஞ்சிய தனியார் ஆம்புலன்ஸ்கள்... வெறும் 5 கிலோ மீட்டர் பயணிக்க இவ்வளவு அதிக கட்டணமா?

பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்து சேவைகள் முடங்கியிருக்கும் நிலையில், தனியார் கார், டூவீலர் போன்ற வாகனங்களை இயக்குவதற்கும் கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இ-பாஸ் இல்லாமல் பயணம் செய்தால், காவல் துறையினரால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படலாம். இதனால்தான் ஆம்புலன்ஸ்களை சிலர் தவறாக பயன்படுத்தி நோயாளிகள் போர்வையில் பயணிக்கின்றனர்.

விமானத்தை விஞ்சிய தனியார் ஆம்புலன்ஸ்கள்... வெறும் 5 கிலோ மீட்டர் பயணிக்க இவ்வளவு அதிக கட்டணமா?

இதுபோன்ற செயல்பாடுகளால் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், தனியார் ஆம்புலன்ஸ்களின் கட்டண கொள்ளை தற்போது வெளிச்சத்திற்கு வந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கட்டண கொள்ளை விவகாரத்தை மிரர் நவ் தனது விசாரணையில் அம்பலப்படுத்தியுள்ளது.

விமானத்தை விஞ்சிய தனியார் ஆம்புலன்ஸ்கள்... வெறும் 5 கிலோ மீட்டர் பயணிக்க இவ்வளவு அதிக கட்டணமா?

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில், நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்வதற்கு, தனியார் ஆம்புலன்ஸ்கள் மிகவும் அதிகமான கட்டணத்தை வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆம்புலன்ஸ்களை இயக்குவது சேவையாக இல்லாமல், வெறும் தொழிலாக மட்டும் மாறியுள்ளது. நோயாளிகள் மீது எவ்வித அக்கறையையும் தனியார் ஆம்புலன்ஸ்கள் காட்டுவதில்லை.

விமானத்தை விஞ்சிய தனியார் ஆம்புலன்ஸ்கள்... வெறும் 5 கிலோ மீட்டர் பயணிக்க இவ்வளவு அதிக கட்டணமா?

அரசின் 108 ஆம்புலன்ஸ்கள் சரியான நேரத்திற்கு வருவதற்கு தவறினாலோ அல்லது ஒருவேளை வராமலேயே போனாலோ, தனியார் ஆம்புலன்ஸ்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை அதிகரித்து விடுகிறது. ஒரு சில தனியார் ஆம்புலன்ஸ்கள் இந்த நிலைமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றன. பெங்களூரில் இத்தகைய போக்கு அதிகமாக காணப்படுகிறது.

விமானத்தை விஞ்சிய தனியார் ஆம்புலன்ஸ்கள்... வெறும் 5 கிலோ மீட்டர் பயணிக்க இவ்வளவு அதிக கட்டணமா?

இதற்கு கர்நாடக அரசும் ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. தனியார் ஆம்புலன்ஸ்கள், நோயாளிகளிடம் இருந்து எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம்? என்பது தொடர்பாக கர்நாடக மாநில அரசு எந்தவொரு வரைமுறையையும் வகுக்கவில்லை. வரையறைகள் இல்லாத காரணத்தால், தனியார் ஆம்புலன்ஸ்கள் தங்கள் இஷ்டத்திற்கு அளவுக்கு அதிகமான கட்டணத்தை வசூல் செய்கின்றன.

விமானத்தை விஞ்சிய தனியார் ஆம்புலன்ஸ்கள்... வெறும் 5 கிலோ மீட்டர் பயணிக்க இவ்வளவு அதிக கட்டணமா?

இதுகுறித்து மிரர் நவ் விசாரணை நடத்தி செய்தி வெளியிட்டுள்ளது. இதில், வென்டிலேட்டர் ஆம்புலன்ஸ்களை வெறும் 5-6 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாடகைக்கு எடுப்பதற்கு, 9 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அதிகமான கட்டணம் என கூறப்பட்டுள்ளது.

விமானத்தை விஞ்சிய தனியார் ஆம்புலன்ஸ்கள்... வெறும் 5 கிலோ மீட்டர் பயணிக்க இவ்வளவு அதிக கட்டணமா?

சராசரியாக பார்த்தால், பெங்களூர் நகரில் வென்டிலேட்டர் ஆம்புலன்ஸ்களில் வெறும் 5-6 கிலோ மீட்டர்கள் பயணிப்பதற்கு 12 ஆயிரம் ரூபாய் செலவு ஆகும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 108 அரசு ஆம்புலன்ஸ்கள் சரியான நேரத்திற்கு வர தவறினால், தனியார் ஆம்புலன்ஸ்களில் பயணம் செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு நோயாளிகள் தள்ளப்படுகின்றனர்.

விமானத்தை விஞ்சிய தனியார் ஆம்புலன்ஸ்கள்... வெறும் 5 கிலோ மீட்டர் பயணிக்க இவ்வளவு அதிக கட்டணமா?

பல்வேறு தனியார் ஆம்புலன்ஸ் ஏஜென்சிகளை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, இந்த கட்டண கொள்ளை கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பிரச்னை ஏற்படுவதற்கு முன்னர் இருந்த கட்டணத்துடன் ஒப்பிடும்போது, தற்போது தனியார் ஆம்புலன்ஸ்களின் கட்டணம் இரட்டிப்பாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

விமானத்தை விஞ்சிய தனியார் ஆம்புலன்ஸ்கள்... வெறும் 5 கிலோ மீட்டர் பயணிக்க இவ்வளவு அதிக கட்டணமா?

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தனியார் ஆம்புலன்ஸ்கள் கட்டண கொள்ளையில் இறங்கியிருப்பது பெங்களூர் நகரில் வசதிக்கும் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மிரர் நவ் வெளியிட்டுள்ள செய்தியை நீங்கள் கீழே காணலாம்.

கர்நாடக மாநில அரசு இனியாவது இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்களின் கட்டணத்தை அரசு வரையறுக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் மிக முக்கியமான கோரிக்கையாக இருக்கிறது.

விமானத்தை விஞ்சிய தனியார் ஆம்புலன்ஸ்கள்... வெறும் 5 கிலோ மீட்டர் பயணிக்க இவ்வளவு அதிக கட்டணமா?

போக்குவரத்து சிக்னல்களில் சிகப்பு விளக்கு எரிந்தாலும் நிற்க தேவையில்லை என்பது உள்பட இந்தியாவில் ஆம்புலன்ஸ்களுக்கு பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நோயாளிகளின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே இதற்கு காரணம். அப்படிப்பட்ட ஆம்புலன்ஸ்களை இயக்கும் தனியார் நிறுவனங்கள் சேவை மனப்பான்மையுடன் கட்டணம் வசூலிக்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Private Ambulance Agencies Looting Patients In Bangalore. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X