உங்க ஃபேவரைட் விளையாட்டு வீரர்களின் பறக்கும் அரண்மனைகள்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வந்துருச்சு

உலகின் முன்னணி விளையாட்டு வீரர்களின் தனி விமானங்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உங்க ஃபேவரைட் விளையாட்டு வீரர்களின் தனி விமானங்கள்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வந்துருச்சு...

கால்பந்து மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் கொடி கட்டி பறக்கும் நட்சத்திர வீரர்கள், பல கோடி ரூபாய் கணக்கில் வருமானம் ஈட்டுகின்றனர். எனவே விலை உயர்ந்த கார் மற்றும் பைக்குகளை அவர்களால் மிக எளிதாக வாங்க முடிகிறது. இந்தியாவை பொறுத்தவரை நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான டோனி, கோஹ்லி போன்றோர் மிகவும் விலை உயர்ந்த பல வாகனங்களை வைத்துள்ளனர்.

உங்க ஃபேவரைட் விளையாட்டு வீரர்களின் தனி விமானங்கள்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வந்துருச்சு...

வெளிநாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கும் சொகுசு வாகனங்கள் மீது அதிகமான ஆர்வம் உள்ளது. ஆனால் கார், பைக்குகளை காட்டிலும் தனி விமானங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. இதனால் ஒரு சில விளையாட்டு வீரர்களிடம் மட்டுமே தனி விமானங்கள் உள்ளன. பிரைவேட் ஜெட் எனப்படும் இந்த தனி விமானங்கள், பயணிகள் விமானங்களை போல் பெரிதாக இருக்காது.

உங்க ஃபேவரைட் விளையாட்டு வீரர்களின் தனி விமானங்கள்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வந்துருச்சு...

ஒரு சிறிய குழுவை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்து செல்ல இந்த தனி விமானங்கள் பயன்படும். அளவில் சிறியதாக இருந்தாலும், சொகுசு வசதிகள் காரணமாக அவற்றின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே பல கோடி சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் என்றாலும், தனி விமானங்களை அவ்வளவு எளிதில் வாங்கி விட முடியாது.

உங்க ஃபேவரைட் விளையாட்டு வீரர்களின் தனி விமானங்கள்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வந்துருச்சு...

எனினும் ஒரு சில விளையாட்டு வீரர்களிடம் சொந்தமாக தனி விமானங்கள் உள்ளன. அப்படி தனி விமானம் வைத்துள்ள உலகின் முன்னணி விளையாட்டு வீரர்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். இந்தியாவை சேர்ந்த சச்சின், கோஹ்லி உள்ளிட்டோரிடமும் தனி விமானங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவை உண்மையா? என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

உங்க ஃபேவரைட் விளையாட்டு வீரர்களின் தனி விமானங்கள்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வந்துருச்சு...

கிறிஸ்டியானா ரொனால்டோ

உலகின் மிகவும் பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவராக கிறிஸ்டியானா ரொனால்டோ திகழ்கிறார். போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த இந்த கால்பந்து ஜாம்பவானிடம், லிமிடெட் எடிசன் கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி650 (Gulfstream G650) விமானம் சொந்தமாக இருக்கிறது. இந்திய ரூபாய் கணக்கில் பார்த்தால், இந்த விமானத்தின் மதிப்பு 280 கோடி ரூபாய் (37 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) என கூறப்படுகிறது.

உங்க ஃபேவரைட் விளையாட்டு வீரர்களின் தனி விமானங்கள்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வந்துருச்சு...

கிறிஸ்டியானா ரொனால்டோ இரு கைகளையும் விரித்து வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடுவார் என்பது அவரது ரசிகர்களுக்கு நன்கு தெரியும். அந்த முத்திரை இந்த விமானத்தின் நுழைவு வாயிலின் ஒரு பகுதியில் பொறிக்கப்பட்டிருக்கும். மறுபக்கம் CR7 என பொறிக்கப்பட்டிருக்கும். CR7 என்பது அவரின் செல்ல பெயர் ஆகும். CR என்பது Cristiano Ronaldo என்பதை குறிக்கிறது. 7 அவரது ஜெர்சி எண் ஆகும்.

உங்க ஃபேவரைட் விளையாட்டு வீரர்களின் தனி விமானங்கள்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வந்துருச்சு...

லயோனல் மெஸ்ஸி

அர்ஜென்டினாவை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியிடம், 125 கோடி ரூபாய் மதிப்புள்ள (16 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) தனி விமானம் உள்ளது. இந்த தனி விமானத்தின் வால் பகுதியில், அவரது ஜெர்சி எண்ணான 10 என்பது பொறிக்கப்பட்டிருக்கும். அதே சமயம் அதன் படிக்கட்டுகளில் மெஸ்ஸி குடும்பத்தினரின் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும்.

உங்க ஃபேவரைட் விளையாட்டு வீரர்களின் தனி விமானங்கள்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வந்துருச்சு...

கிறிஸ்டியானா ரொனால்டோவின் நேர் எதிர் போட்டியாளர் என வர்ணிக்கப்படும் லயோனல் மெஸ்ஸியின் தனி விமானத்தில் ஒரு கிச்சன் மற்றும் 2 பாத்ரூம்கள் இருக்கின்றன. அத்துடன் இந்த தனி விமானத்தில் 16 இருக்கைகளும் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை 8 படுக்கைகளாக மாற்றி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்க ஃபேவரைட் விளையாட்டு வீரர்களின் தனி விமானங்கள்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வந்துருச்சு...

விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2019ம் ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் சுற்று பயணம் செய்து விளையாடியது. அப்போது விராட் கோஹ்லியும், அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் ஒரு தனி விமானத்தின் முன்பு இருப்பது போன்ற புகைப்படம் வைரல் ஆனது. இந்த தனி விமானம் விராட் கோஹ்லிக்கு சொந்தமானதா? என்ற சந்தேகங்களும் எழுந்தன.

உங்க ஃபேவரைட் விளையாட்டு வீரர்களின் தனி விமானங்கள்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வந்துருச்சு...

எனினும் விராட் கோஹ்லி நியூசிலாந்தில் அந்த தனி விமானத்தை வாடகைக்கு எடுத்தார் என அதன் பின்னர் தகவல்கள் வெளிவந்தன. Cessna 680 Citation Sovereign Jet தனி விமானத்தையே விராட் கோஹ்லி வாடகைக்கு எடுத்ததாக தகவல்கள் வெளிவந்தது. இதன் மதிப்பு 125 கோடி ரூபாய்கள் ஆகும் (16 மில்லியன் அமெரிக்க டாலர்கள்).

உங்க ஃபேவரைட் விளையாட்டு வீரர்களின் தனி விமானங்கள்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வந்துருச்சு...

சச்சின் டெண்டுல்கர்

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், 260 கோடி ரூபாய் மதிப்புள்ள (34 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) தனி விமானத்தை சொந்தமாக வைத்திருப்பதாக ஒரு சமயத்தில் தகவல்கள் வெளிவந்தது. ஆனால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. பிரபல நடிகர் வருண் தவான் கடந்த 2016ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார்.

உங்க ஃபேவரைட் விளையாட்டு வீரர்களின் தனி விமானங்கள்... விலையை கேட்டதும் கிறுகிறுன்னு வந்துருச்சு...

இதில், சச்சின் டெண்டுல்கரும், அவரும் தனி விமானம் ஒன்றில் லெஸ்ஸி பானத்தை பருகி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்த தனி விமானம் சச்சின் டெண்டுல்கருக்கு சொந்தமானது என தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அது உண்மையா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் சச்சினிடம் பல விலை உயர்ந்த கார்கள் இருக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Private Jets Of Sports Stars. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X