கோவா ட்ரிப் போக ஆசையா? கேரளாவில் இருந்து புறப்படும் தனியார் ரயில்.. கட்டணம், புறப்படும் நாள் பற்றிய விபரங்கள்!
கேரளாவில் முதல் முறையாக தனியார் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. ஜூன் 4 ஆம் தேதியே கேரளாவில் அது தொடங்கப்பட இருக்கின்றது. திருவனந்தபுரத்தில் அந்த தனியார் புறப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. சுற்றுலாச் சேவையை வழங்கும் பொருட்டே இந்த தனியார் ரயில் சேவை தொடங்கப்பட்டு இருக்கின்றது.
எஸ்ஆர்எம்பிஆர் குளோபல் ரயில்வேஸ் பிரைவேட் லிமிடெட் (SRMPR Global Railways Private Limited) மற்றும் பிரின்ஸி வேர்ல்டு டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் (Princy World Travels Private Limited) ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்தே இந்த ரயில் சேவையைத் தொடங்க இருக்கின்றனர்.

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. இந்தியன் ரயில்வேஸின் பாரத் கவுரவ் யாத்ரா (Bharat Gaurav Yatra) திட்டத்தின்கீழே இவர்கள் தங்களுடைய சுற்றுலா சேவையைத் தொடங்கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்திய ரயில்வே சேவைத் தொடக்கத்தை முன்னிட்டு முதல் பயணமாக கோவாவிற்கே மேற்கொள்ளப்பட இருக்கின்றது. மும்பை மற்றும் அயோத்யாவிற்கு சுற்றுலா நிறுத்தங்கள் திட்டமிடப்பட்டு உள்ளன.
திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய நிறுத்தங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் பயணத்தைத் தொடங்கிக் கொள்ளலாம். 750 பேர் வரை இந்த பயணத்தில் பங்குக் கொள்ள முடியும். இரண்டு ஸ்லீப்பர் கிளாஸ் (sleeper class) மட்டுமே இந்த ரயிலில் வழங்கப்பட இருக்கின்றது.
அதேநேரத்தில், 11 மூன்றாம் வகுப்பு ஏசி கிளாஸ் (3rd class AC coaches) ம் மற்றும் இரண்டு 2 கிளாஸ் ஏசி கிளாஸ் கோச் (2nd class AC coaches)சுகளும் இந்த ரயிலில் இருக்கும். 60 பேர் சுற்றுலா பயணிகளுக்கு உதவும் விதமாக பணியமர்த்தப்பட இருக்கின்றனர்.
மருத்துவர், சமையல்காரர்கள் உதவியாளர்கள் என பயணிகளின் சகல தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமான பணியாளர்களே பணியமர்த்தப்பட இருக்கின்றனர். இதில், பாதுகாவலுக்கான பணியாளர்களும் அடங்குவர். மேலும், ஒய்-ஃபை, சாப்பாடு, ஜிபிஎஸ் டிராக்கிங் வசதி, சுற்றுலா தளங்களை சுற்றி பார்ப்பது போன்ற சகல வசதிகளையும் பேக்கேஜின்கீழ் வழங்கப்பட இருக்கின்றது.
மேலும், ஸ்டார் ஹோட்டலில் தங்கும் வசதியையும் பேக்கேஜிலேயே வழங்கப்பட இருக்கின்றது. ஏசி அல்லாத ஸ்லீப்பர் கோச்சில் கோவா சுற்றுலா செல்ல நான்கு நாட்களுக்கு ரூ. 13,999 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது. இது ஒரு நபருக்கான கட்டணம் ஆகும். மேலே பார்த்த அனைத்து சேவைகளும் இந்த கட்டணத்தின் கீழே வழங்கப்படும்.
அதேநேரத்தில், 3ஆம் வகுப்பு ஏசிக்கு ஒரு நபருக்கு ரூ. 15,150 கட்டணமும், 2 ஆம் வகுப்பு ஏசி கோச்சுக்கு ரூ. 16,400 கட்டணமும் வசூலிக்கப்பட இருக்கின்றது. இதேபோல், மும்பை சுற்றுலாவிற்கு ரூ. 15,050, ரூ. 16,920 மற்றும் 18,825 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது.
அயோத்யா சுற்றுலா 8 நாட்களுக்கு திட்டமிடப்பட்டு உள்ளது. அயோத்யா, வாரணாசி மற்றும் பிரக்யாராஜ் உள்ளிட்ட பகுதிகள் சுற்றிக் காட்டப்பட இருக்கின்றது. இதற்கு ரூ. 30,550, ரூ. 33,850 மற்றும் 37,150 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த சுற்றுலாவுடன் உங்களுடைய குழைந்தையை இலவசமாக அழைத்துச் செல்ல முடியும்.
அதற்கு அக்குழைந்த 5 வயதுடையதாக இருத்தல் வேண்டும். அதேவேளையில், 5 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அரைக் கட்டணம் ஆகும். உதாரணமாக நான்கு நாட்கள் கொண்ட கோவா ட்ரிப்பிற்கு 5 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களை 3ஆம் வகுப்பு ஏசி கோச் பேக்கேஜில் அழைத்துச் செல்ல வேண்டும் எனில் அவருக்கு ரூ.7,575 செலுத்தினாலே போதும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீண்ட நாட்களாக கோவா சுற்றுலா போக வேண்டும் என நினைத்துக் கொண்டிருப்பவர்கள் தனியாரின் இந்த ரயில் சேவையுடனான சுற்றுலா சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்து ஏற்பாடுகளையும் அவர்களே செய்து உங்களை பத்திரமாக அழைத்துச் சென்று மீண்டும் கேரளாவிலேயே கொண்டு வந்து விட்டுவிடுவார்கள்.


Click it and Unblock the Notifications








