காதல் மனைவி பிரியங்கா சோப்ராவுக்கு விலையுயர்ந்த லக்சுரி காரை பரிசாக வழங்கிய நிக்: எதற்காக தெரியுமா?

காதல் மனைவி பிரியங்கா சோப்ராவிற்கு அவரது கணவர் நிக் ஜோனஸ் விலையுயர்ந்த எஸ் கிளாஸ் லக்சுரி காரை பரிசாக வழங்கியுள்ளார். எதற்காக இந்த காரை நிக் அவருக்கு பரிசாக வழங்கினார் என்று தெரிந்தால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.

காதல் மனைவி பிரயங்கா சோப்ராவுக்கு விலையுயர்ந்த லக்சுரி காரை பரிசாக வழங்கிய நிக்: எதற்காக தெரியுமா...?

பாலிவுட் திரைப்பட பிரபலமாக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா, சிறந்த நடிகை, பாடகி தயாரிப்பாளர் என பல்வேறு ரோல்களில் ஒரு கலக்குகலக்கி வளம் வந்தார். தற்போது, திருமணம் செய்து கொண்டபின்னர், தனது இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கடந்த 2000-மாவது ஆண்டின் உலக அழகி பட்டத்தையும் வென்றார்.

இவரை முதன்முதலில் தமிழ் திரையுலகம்தான் திரைக்கு அறிமுகம் செய்தது. இதன்பின்னர், அவர் அசூர வளர்ச்சி அடைந்தார். அவர் தமிழில், நமது இளைய தளபதி விஜயுடன் 'தமிழன்' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதைத்தொடர்ந்து, பாலிவுட் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.

மேலும், இவர் 'குவாண்டிகா' என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்க ஆரம்பித்தார். இதில், பிரபலமடைந்த பின்னர், சில ஹாலிவுட் பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தது. இவ்வாறு பிரியங்காவின் வளர்ச்சி அசூர வேகத்தில் சென்றுக்கொண்டிருக்க, அமெரிக்கா பாப் பாடகரான நிக் ஜோனசுடன், அவர் காதல் வயப்பட்டார்.

காதல் மனைவி பிரயங்கா சோப்ராவுக்கு விலையுயர்ந்த லக்சுரி காரை பரிசாக வழங்கிய நிக்: எதற்காக தெரியுமா...?

நிக் ஜோனசைக் காட்டிலும் பிரியங்கா பத்து வயது முதியவர். இதனால், இவர்களின் காதல் விவகாரம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இருப்பினும் விமர்சனங்கள்மீது கவனத்தைச் செலுத்தாமல், பிரியங்கா-ஜோனஸ் திருமணம் கடந்த ஆண்டு நிச்சயமானது.

இதைத்தொடர்ந்து, பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருணம் ஜோத்பூரில் உள்ள பிரமாண்ட அரண்மனையில் கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி நடைபெற்றது. இந்த அரண்மனையின் ஒரு நாள் வாடைக மட்டும் இரண்டு கோடி ரூபாயாகும். திருமணத்திற்காக நிக் ஜோனசின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தனி விமானம் மூலம் இந்தியா வரவழைக்கப்பட்டு, 7 நட்சத்திர சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

இவ்வாறு பிரமாண்டத்திற்கு கடுகளவும் பஞ்சமின்றி பிரியங்கா-ஜோனஸ் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு முன்பாக நிச்சயதார்த்த பார்ட்டியின்போது, பிரியங்காவுக்கு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரத்தை ஜோனஸ் பரிசாக வழங்கினார். அந்த அளவிற்கு காதல் மனைவி பிரியங்கா மீது ஜோனஸ கொள்ளை பிரியம் வைத்திருந்தார்.

இந்த நிலையில் ஜோனஸ், பிரியங்காவிற்கு மீண்டும் ஒரு விலையுயர்ந்த பொருளை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார். அது அவரின் பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். லக்சுரி காரான மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்650 காரை தான் அவர் பரிசாக வழங்கியுள்ளார்.

MOST READ: 5 நட்சத்திரம் பெற்ற இந்தியாவின் முதல் பாதுகாப்பான காருக்கு கிடைத்த வெகுமதி: உற்சாகத்தில் டாடா!

காதல் மனைவி பிரயங்கா சோப்ராவுக்கு விலையுயர்ந்த லக்சுரி காரை பரிசாக வழங்கிய நிக்: எதற்காக தெரியுமா...?

முதலில் கார் குறித்த தகவலை கீழே பார்க்கலாம் பின்னர், எதற்காக இந்த காரை அவர் பரிசாக வழங்கினார் என்பதைப் பார்க்கலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்650 கார் சொகுசு மற்றும் பாதுகாப்பிற்கு பஞ்சமில்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன், உள் மற்றும் வெளித்தோற்றம் 5 நட்சத்திர சொகுசு விடுதிகளையே தோற்கடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, அதன் ஒவ்வொரு தயாரிப்புகளும் பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதிநவீன சொகுசு வசதிகளைக் கொண்ட இந்த கார் கடந்த 2017ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவில் விற்பனைக்காக வந்தது. பென்ட்லேவின் முல்சானே மற்றும் ரோல்ஸ் ராய்ஸின் கோஸ்ட் சொகுசு கார்களுடன் போட்டிப்போடும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த காரின் மிருதுவமான லெதர் சீட், மிகச் சிறந்த கேட்ஜெட், 26 ஸ்பீக்கர்கள் கொண்ட 3டிஎஃப் சிஸ்டம் உள்ளிட்ட அனைத்தும் அசர வைக்கின்றது.

மேற்கூறிய அம்சங்களை வாங்குபவர்களின் தேவைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம். இந்த கார் பயணிகளுக்கு சிறப்பான அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், மேஜிக் பாடி கன்ட்ரோல், சாலைக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்துக்கொள்ளும் சஸ்பென்ஷன் ஆகியவைப் பொருத்தப்பட்டுள்ளது.

காதல் மனைவி பிரயங்கா சோப்ராவுக்கு விலையுயர்ந்த லக்சுரி காரை பரிசாக வழங்கிய நிக்: எதற்காக தெரியுமா...?

இந்த எஸ்கிளாஸ் 650 செடான் காரின் நீளமானது 5 ஆயிரத்து 462 மிமீ நீளம் கொண்டது. மற்ற எஸ்கிளாஸ் கார்களை விட 207 மீட்டர் அதிகமாகும். இந்த காரில் ஒரு ஆல்டோ காரைக் கூட நிறுத்திவிடலாம். அந்த அளிவிற்கு பயணிகளுக்கு இடவசதிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் வீல்கள் 3 ஆயிரத்து 365 மிமீ பேஸைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

காரின் அதிகநீளம் அதிக இடவசதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் முன்பக்கத்தின் இடதுப்புறம் உள்ள இருக்கையை முன்பக்கம் நகர்த்திக்கொண்டால், ஃபூட் ரெஸ்ட் வைக்க இடம் தாராளமாக இருக்கும். மேலும், இதன் சீட் அமைப்பானது, அமருபவர்கள் தங்களது தலையை வைத்துக்கொள்ள ஏதுவாக ஏற்றி இறக்கி வகையில் வடிவமக்கப்பட்டுள்ளது. இது துளியளவும் அசௌகரியமான அனுபவத்தை ஏற்படுத்தாது.

இதேபோன்று, இதன் இருக்கைகளில் மசாஜ், சிறப்பம்சமாக பொருத்தப்பட்டுள்ளது. இது மற்ற எஸ் கிளாஸ் கார்களை விட, கூடுதலான மசாஜ் தீம்களைக் கொண்டு இயங்குகிறது. இதில் தேவையான தீமை தேவைக்கேற்ப தேர்வு செய்துகொள்ளலாம்.

இந்த காரின் சன் ரூஃபை கலர்ஃபுல்லாகவோ அல்லது நிறமின்றியோ மாற்றிக்கொள்ளலாம். அதற்கேற்ப எலக்ட்ரிக் சன் ஷேட்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், காரில் பயணிகளின் பாதுகாப்பிற்காக காரைச் சுற்றிலும் ஏர் பேக்குகள் நிறுவப்பட்டுள்ளது. தொடர்ந்து, டீட்ராக்கபிள் சீட் பெல்ட் உள்ளது. இது காரின் கதவைத் திறந்தாலே, சீட் பெல்ட் அணியக் கூறி எச்சரிக்கைக் கொடுக்கும். சீட் அணியாமல் உங்களைப் பயணம் செய்ய அனுமதிக்காது. அந்த அளவிற்கு அதன் சென்சார்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

MOST READ: 2 மகள்களுடன் இளம்பெண் தீயில் கருகி பலியானதற்கு காரணம் இதுதான்... திடுக்கிடும் தகவல்கள் வெளியானது...

காதல் மனைவி பிரயங்கா சோப்ராவுக்கு விலையுயர்ந்த லக்சுரி காரை பரிசாக வழங்கிய நிக்: எதற்காக தெரியுமா...?

இந்த காரின் எஞ்ஜினைப் பார்ப்போமேயானால், இதில் 6 லிட்டர் வி12 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 630 பிஎச்பி பவரை 5,000 ஆர்பிஎம்-மில் வெளிப்படுத்தும். அதேபோன்று 2,300 மற்றும் 4,200 ஆர்பிஎம்-மில் 1000 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். மேலும், இந்த எஞ்ஜினில் 7எஃப்-ட்ரானிக் பிளஸ் டிரான்மிஸன் உள்ளது. இது, 4.7 செகண்டில் காரை 0-100 கிமீ வேகத்தைத் தொடவைக்கும். இந்த காரில் பாதுகாப்பு கருதி, உச்சகட்டமாக 250 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் எலக்ட்ரானிக் டிவைஸ் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த காரில் பாதுகாப்பு அம்சமாக பிளைண்ட் ஸ்பாட் எச்சரிக்கை, அவசரகால தானியங்கி பிரேக்குகள், லேன் மாறும் எச்சரிக்கை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இதன் மேஜிக்பாடி கன்ட்ரோல்மூலம், பெரிய பள்ளங்கல் வரும்போது, காரைச் சற்று உயரமாக உயர்த்திக் கொள்ள உதவும். இதைத்தொடர்ந்து, இந்த காரில் சொகுசு, ஸ்போர்ட் மற்றும் கர்வ் மோட்கள் உள்ளன. இதில், கரவ் மோட் வளைவில் பாதுகாப்பாக வாகனம் திரும்ப உதவும்.

இத்தைகய சிறப்புகளுடை இந்த மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்650 காரின் விலையானது, இந்திய மதிப்பில் ரூ.2.73 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையாக உள்ளது. இத்தனை சிறப்புடைய இந்த எஸ்கிளாஸ் செடான் காரை, ஜோனஸ், அவரின் சகோதரர் பாடலுக்கு 'பில்போர்ட் ஹாட் 100' என்ற வெற்றியைத் தழுவியதற்காக பிரியங்காவிற்கு பரிசாக வழங்கியுள்ளார்.

பிரியங்காவிடம் ஏற்கனவே இதுபோன்று ஏராளமான சொகுசு கார்கள் இந்தியாவில் உள்ளன. அவ்வாறு அவரின் கேரேஜில், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், எம்டபிள்யூ 5 செரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ், மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் மற்றும் ஆடி க்யூ7 ஆகிய கார்கள் உள்ளன. இந்த வரிசையில் தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ்650 மாடல் காரும் சேர்ந்துள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Priyanka Chopra Get Mercedes Benz Maybach S650 Car Gift From Nick Jonas. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more