இந்த கார்களில்தான் காதலனுடன் ஜாலியாக ஊர் சுற்றுகிறார் பிரியங்கா சோப்ரா.. எல்லாமே காஸ்ட்லி ரகம்..
பாலிவுட், ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா, அமெரிக்கா பாப் பாடகர் நிக் ஜோனஸை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. சமீப காலமாக இவர்கள் இருவரும் ஒன்றாகவே வலம் வருகின்றனர்.
பாலிவுட், ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா, அமெரிக்கா பாப் பாடகர் நிக் ஜோனஸை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. சமீப காலமாக இவர்கள் இருவரும் ஒன்றாகவே வலம் வருகின்றனர். அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும், விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில், அவர்கள் பயன்படுத்தும் கார்கள் குறித்த சுவாரசிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரியங்கா சோப்ரா
பிஎம்டபிள்யூ 5 சீரிஸ்
பிரியங்கா சோப்ராவும், நிக் ஜோனசும் ஒன்றாக இணைந்து முதல் முறையாக சமீபத்தில் இந்தியாவுக்கு வந்திருந்தனர். அப்போது அவர்களை சுமந்து கொண்டு சென்ற கார் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ். இந்த காருடன் பிரியங்கா சோப்ராவை பார்த்தது அதுவே முதல் முறை.

இது லேட்டஸ்ட் ஜென்ரேஷன் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காராகும். இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களுடனும், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் கிடைக்கிறது. இதன் மிகவும் மலிவான வேரியண்ட்டின் விலை 52 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்).

இந்த காரின் பெட்ரோல் வெர்ஷன்களில், 2.0 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 249 பிஎச்பி பவர், 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இது தவிர 2 டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடனும், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் விற்பனைக்கு வருகிறது.

இதில், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் 187 பிஎச்பி பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்தது. அதே நேரத்தில் அதை விட பெரிதான 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் 261 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க் திறனையும் உருவாக்கி, சாலைகளில் சீறிப்பாயும் வல்லமை வாய்ந்தது.

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்
பிரியங்கா சோப்ராவிடம் உள்ள விலை உயர்ந்த கார்களில் ஒன்று ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட். பிரியங்கா சோப்ரா தற்போது பெரும்பாலான நேரத்தை அமெரிக்காவில்தான் செலவிடுகிறார். எனினும் அவர் எப்போது மும்பை வந்தாலும் பயன்படுத்தும் வகையில், ரோஸ்ஸ் ராய்ஸ் கோஸ்ட் எந்நேரமும் ரெடியாகவே இருக்கும்.

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருடன், பிரியங்கா சோப்ராவை பல முறை பார்க்க முடிந்திருக்கிறது. இந்த காரின் இன்டீரியர்கள் பிரகாசமான சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 6.6 லிட்டர் டிவின் டர்போ வி12 இன்ஜின், 562 பிஎச்பி பவர், 780 என்எம் டார்க் திறனை வழங்கவல்லது.

பிரியங்கா சோப்ரா பயன்படுத்தும் விலை உயர்ந்த கார்களில் ஒன்று ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்பதில் சந்கேமில்லை. ஆனால் மார்க்கெட்டில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார், கோஸ்ட்தான். இதன் விலை ஒன்றும் அதிகமில்லை. வெறும் 5.25 கோடி ரூபாய்தான்.

ஆடி க்யூ 7
லக்ஸரி எஸ்யூவி வகையை சேர்ந்த ஆடி க்யூ 7 காரில், பிரியங்கா சோப்ராவை பல முறை பார்க்க முடிந்திருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிக நீண்ட நாட்கள் தங்கியிருக்கும் நேரங்களில், பிரியங்கா சோப்ராவால் இந்த கார் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

2வது தலைமுறை காரான இது, முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஆடி க்யூ7 கார் மிகவும் பிரபலம். அதன் செக்மெண்டில் அதிகம் விற்பனை செய்யப்படும் கார்களில் ஒன்றாக இது திகழ்கிறது.

பாலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர், புதிய 2வது தலைமுறை ஆடி க்யூ 7 காரை சொந்தமாக வைத்துள்ளனர். அமெரிக்காவிலும் கூட மிக அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை இந்த கார் பெற்றுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ்
லக்ஸரி கார்களை மிகவும் விரும்புபவரான பிரியங்கா சோப்ரா, பழைய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரையும் வைத்துள்ளார். இந்த டபிள்யூ 221 எஸ் க்ளாஸ் கார், வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட் திரையுலகில் எஸ் க்ளாஸ் என்பது சற்று பொதுவான பெயர்தான். பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் குறைந்தபட்சம் ஒரு எஸ் க்ளாஸ் காரையாவது வைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பிரியங்கா சோப்ரா, இந்த காரை பெரிதாக பயன்படுத்துவது போல் தெரியவில்லை.

மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ்
பழைய தலைமுறை டபிள்யூ 211 இ க்ளாஸ் கார் ஒன்றையும் பிரியங்கா சோப்ரா வைத்துள்ளார். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் லக்ஸரி செடான் வகை கார்களில் இதுவும் ஒன்று. மிகவும் சௌகரியமான பல வசதிகளை இ கிளாஸ் வழங்குகிறது.

நிக் ஜோனஸ்
1960 ஃபோர்டு தண்டர்பேர்ட்
பிரியங்கா சோப்ராவை போல் நிக் ஜோனசும் கார்களின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்தான், 1960 ஃபோர்டு தண்டர்பேர்ட் காரை நிக் ஜோனஸ் வாங்கினார். வின்டேஜ் வாகனங்கள் குறித்து அவருக்கு உள்ள ஆழ்ந்த அறிவை இது பறைசாற்றுகிறது.

ஃபோர்டு தண்டர்பேர்ட் காரில், 5,766 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 300 பிஎச்பி பவரையும், 517 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லது. நிக் ஜோனஸிடம் உள்ள ஃபோர்டு தண்டர்பேர்ட் கன்வர்டபிள் வகையை சேர்ந்த கார் என்பது குறிப்பிடத்தக்கது.

1968 ஃபோர்டு மஸ்டங்
நிக் ஜோனஸின் கேரேஜில் உள்ள மற்றொரு கிளாசிக் கார் 1968 ஃபோர்டு மஸ்டங். பல ஹாலிவுட் படங்களில் மஸ்டங் காரை பார்த்திருக்கலாம். 1968 ஃபோர்டு மஸ்டங் கார், அதன் கிளாஸியான வடிவம் மற்றும் டெயில் செக்சனின் காரணமாகவே அதிகம் அறியப்படுகிறது.

கர்மா பிஸ்கர்
கர்மா பிஸ்கர் கார் குறித்து பலரும் பெரிதாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நிக் ஜோனஸிடம் உள்ள விலை உயர்ந்த கார்களில் இதுவும் ஒன்று. அமெரிக்க மார்க்கெட்டில் இந்த காரின் விலை, இந்திய மதிப்பில் சுமார் 70 லட்ச ரூபாய்.

செவ்ரோலெட் கேமரோ
நிக் ஜோன்ஸிடம் உள்ள மாடர்ன் டே மஸில் கார் செவ்ரோலெட் கேமரோ. இந்த 5வது தலைமுறை செவ்ரோலெட் கேமரோ எஸ்எஸ் காரை, நிக் ஜோனஸ் ரெகுலராக பயன்படுத்தி வருகிறார். இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 5.9 லிட்டர் வி8 இன்ஜின், 425 பிஎச்பி பவர், 570 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.


Click it and Unblock the Notifications








