உச்சக்கட்ட பயத்தில் எலெக்டரிக் வாகன தயாரிப்பாளர்கள்! வளைச்சு வளைச்சு விசாரணை நடத்தப்போகும் மத்திய அரசு!

மத்திய அரசு வழங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக எழுந்த புகாரின் பேரில் 12 எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த விரவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் மாற்றும் மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் ஃபேம் இந்தியா என்ற திட்டம் மூலம் மானியங்களை வழங்கி வருகிறது. இதற்கான திட்டம் வகுக்கப்படும் போது இதை ஒவ்வொரு கட்டமாக நிறைவேற்ற வேண்டும் என திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த 2019-2023ம் ஆண்டு வரை ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாவது கட்டம் நடைமுறையில் இருக்கும்.

உச்சக்கட்ட பயத்தில் எலெக்டரிக் வாகன தயாரிப்பாளர்கள்! வளைச்சு வளைச்சு விசாரணை நடத்தப்போகும் மத்திய அரசு!

முதற்கட்டமானது, ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்குபவர்களுக்கு நேரடியாக மானியம் வழங்கப்பட்டது. தற்போது இரண்டாவது கட்டத்தில் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது. இந்த 2ம் கட்ட மானியத்திற்காக மத்திய அரசு ரூ10 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது. இதில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அதன் தயாரிப்பு மற்றும் விற்பனையை வைத்து அவர்களுக்கான மானியம் வழங்கப்படுகிறது.

இப்படியாக மானியங்களைப் பெற சில குறிப்பிட்ட விதிமுறைகள் பின்பற்ற வேண்டும். இந்த மானியம் பெற்ற பணத்தை நேரடியாக மக்களுக்குப் பலனளிக்கும் வகையில் எலெக்ட்ரிக் வாகனத்தின் விலையில் பிரதிபலிப்பு செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தது. இந்நிலையில் இந்த மானியத்தை எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து 12 எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பென்லிங் இந்தியா எனர்ஜி மற்றும் டெக்னாலஜி, ஓகாயா இவி, ஜிஜேந்திரா நியூ இவி டெக், க்ரீவீஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி, ரிவோல்ட் இன்டெலிகார்ப், கைனடிக் கிரீன் எனர்ஜி மற்றும் பவர் சொல்யூசன், ஏவான் சைக்கிள்ஸ், லோஹியா ஆட்டோ இன்ட்ஸ்ட்ரீஸ், துக்ரல் எலெக்ட்ரிக் பைக்ஸ், ஹீரோ எலெக்ட்ரிக், ஓகினவா ஆட்டோ டெக் மற்றும் விக்டரி எலெக்ட்ரிக் வெஹிகில் இன்டர்நேசனல் ஆகிய நிறுவனங்கள் மீது புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து இந்த நிறுவனங்கள் மீது ஃபேஸ் திட்ட மானியத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்களா என விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனங்கள் அரசிடம் இந்த திட்டத்தின் கீழ் மானியம் பெற விண்ணப்பித்து பாக்கியுள்ள தொகை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செலுத்தப்பட்ட மானியத்தை முறையாகப் பயன்படுத்தியுள்ளார் என் விளக்கமானதற்குப் பின்பே இந்த பாக்கி பணம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ் திட்டத்தின் இரண்டாவது கட்டப்பட 10 லட்சம் எலெக்ட்ரிக் டூவீலர்கள், 5 லட்சம் எலெக்ட்ரிக் 3 வீலர்கள், 55 ஆயிரம் எலெக்ட்ரிக் பயணிகள் 4 வீலர்கள், 7090 எலெக்ட்ரிக் பஸ்களுக்கு மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதற்காக ரூ10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்த பணம் ஒவ்வொரு நிறுவனத்தின் விற்பனை மற்றும் அம்சங்களைப் பொருத்து வழங்கப்படுகிறது.

இந்தியாவில் கடந்த டிச 9ம் தேதி நிலவரப்படி மொத்தம் 64 எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் பதிவு செய்துள்ளனர். இதுவரை 7.47 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் 2024 மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் அதற்குள் மீதம் உள்ள வாகன உற்பத்தி மற்றும் இதர விஷயங்களுக்கா இந்த மானியம் செலவிடப்பட்டால் மட்டுமே இந்த திட்டம் வெற்றி பெறும். இதற்குள் இந்த மானியத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் இது குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்படும்.

இந்த விசாரணையில் இவர்கள் மானியத்தை முறையாகப் பயன்படுத்தத் தவறியிருந்தால் அந்நிறுவனங்கள் ஃபேஸ் 2 திட்டத்திலிருந்து வெளியேற்றப்படுபவர் மேலும் அவர்களுக்கான உரிமம் பறிபோகவும் வாய்ப்புகள் உள்ளது. அதே நேரம் இந்த நிறுவனம் பெற்ற மானியத்தையும் திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிடப்படும் எனத் தெரிகிறது. இந்த பிரச்சனையில் சிக்கப்போவது யார் என்பது விசாரணை முடிந்த பின்பு தான் தெரியவரும்.

More from DriveSpark

Article Published On: Monday, December 26, 2022, 16:39 [IST]
English summary
Probe orders on 12 OEMs for violation of fame subsidy guidelines
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+