கார்களை பரிசாக அள்ளி குடுத்த திரைப்பட தயாரிப்பாளர்... அவரா இது! யார்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க...
கன்னட சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு வெற்றி படங்கள் வெளியாகி வருகின்றன. அப்படி சமீபத்தில் வெளியான ஒரு மெகா ஹிட் திரைப்படம்தான் காட்டேரா (Kaatera). தர்ஷன் (Darshan) நடித்துள்ள இந்த திரைப்படத்தை, தருண் சுதீர் (Tharun Sudhir) இயக்கியுள்ளார். அதே நேரத்தில் இந்த திரைப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் (Rockline Venkatesh) தயாரித்துள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி, காட்டேரா திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் வெளியாகி 100 நாட்கள் கடந்து விட்ட நிலையில், அதை கொண்டாடும் விதமாக, திரைப்படத்தில் பணியாற்றி 3 முக்கியமான நபர்களுக்கு, கார்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. திரைக்கதை ஆசிரியர் ஜடேஷ் ஹம்பி, வசனகர்த்தா மாஸ்தி மற்றும் நடிகர் சூரஜ் ஆகியோர்தான், கார்களை பரிசாக பெற்றுள்ளனர். இந்த 3 பேருக்கும் கார்களை பரிசாக வழங்கியவர் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆவார். இவர் தமிழ் (Tamil) மொழியிலும், பல்வேறு திரைப்படங்களை தயாரித்துள்ளார். இதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நடிப்பில் உருவான லிங்கா (Lingaa) மிகவும் முக்கியமானது.

காட்டேரா திரைப்படத்தில் பணியாற்றிய 3 பேருக்கு அவர் தற்போது பரிசாக வழங்கியிருப்பது, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) ஆகும். இது அறிமுகமே தேவை இல்லை என்னும் அளவிற்கு, இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார் ஆகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப விலை 6.24 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.28 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

ஆனால் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்டேஷ், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் எந்த வேரியண்ட்டை, 3 பேருக்கு பரிசாக வழங்கியுள்ளார்? என்பது உறுதியாக தெரியவில்லை. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த காரில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன. மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் ஒரு சில நாட்களில், ஸ்விஃப்ட் காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய மாடலுக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை ஏற்கும் பணிகளை மாருதி சுஸுகி நிறுவனம் தொடங்கி விட்டது.
அத்துடன் புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், ஷோரூம்களுக்கும் வர தொடங்கி விட்டன. எனவே இன்னும் ஒரு சில நாட்களில், விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்பட்டு, புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா டியாகோ (Tata Tiago), ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios) மற்றும் சிட்ரோன் சி3 (Citroen C3) போன்ற கார்களுக்கு, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது எங்கள் கருத்து.
இது குடும்பத்துடன் பயணம் செய்வதற்கு ஏற்ற ஹேட்ச்பேக் கார் ஆகும். அப்படிப்பட்ட ஒரு காரைதான், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், காட்டேரா திரைப்படத்தின் வெற்றிக்கு உதவிய 3 பேருக்கு தற்போது பரிசாக வழங்கியுள்ளார். ஆனால் ஒரு திரைப்படத்தின் தயாரிப்பாளரோ அல்லது கதாநாயகனோ, வெற்றிக்கு உதவியவர்களுக்கு கார்களை பரிசாக வழங்குவது இது முதல் முறை கிடையாது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








