காரின் மேற்கூரையில் இருக்கும் ரூஃப் ரேக்குகளால் நன்மைகள் இருக்கு ஓகே... இப்படிப்பட்ட பிரச்னைகளும் இருக்கா?
கார்களின் மேற்கூரையில் இருக்கும் ரூஃப் ரேக்குகளின் நன்மைகள் மற்றும் தீமைகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார்களின் மேற்கூரையில் இருக்கும் ரூஃப் ரேக் (Roof Rack) உங்களுக்கு ஒரு சில விதங்களில் பயன் அளிக்கும். அளவில் பெரிய பொருட்களை இடமாற்றம் செய்ய அவை பயன்படும். சைக்கிள் போன்ற பொருட்களையும் காரில் கொண்டு செல்வதற்கு அவை பயன்படுகின்றன. ஒரு சிலர் நகரத்திற்கு வெளியே 'கேம்ப்பிங்' செய்ய திட்டமிடுவார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கும் தேவையான பொருட்களை கொண்டு செல்வதற்கு, ரூஃப் ரேக்குகள் உதவி செய்கின்றன. அத்துடன் ரூஃப் ரேக்குகள் உங்கள் காருக்கு தனித்துவமான தோற்றத்தையும் வழங்கும். குறிப்பாக எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களின் மேற்கூரையில் இருக்கும் ரூஃப் ரேக்குகள் கம்பீரமான தோற்றத்தை வழங்குகின்றன.

மேலும் தற்போது நீடித்து உழைக்க கூடிய மெட்டீரியல்கள் மூலம் ரூஃப் ரேக்குகள் தயாரிக்கப்படுகின்றன. எனவே அவை நீண்ட காலம் நீடித்து உழைப்பதுடன், எந்த வகையான வானிலையையும் எதிர்கொள்ள உகந்தவையாக இருக்கின்றன. ஒரு சில நிறுவனங்கள் காரின் மேற்கூரையில் பயன்படுத்தப்படும் ரூஃப் ரேக்குகளுக்கு, 3 முதல் 4 ஆண்டுகள் வரை உத்தரவாதம் வழங்குகின்றன.

எனவே ஒரு வேளை சேதம் அடைந்தால் கூட, அவற்றை மாற்றி கொள்வதற்கான வழிமுறைகள் சுலபமானதுதான். ரூஃப் ரேக்குகள் மூலம் இப்படி நமக்கு ஏராளமான நன்மைகள் இருக்கம் அதே நேரத்தில், ரூஃப் ரேக்குகள் காரணமாக நமக்கு பல்வேறு தீமைகளும் இருக்கவே செய்கின்றன. அவை என்னென்ன? என்பதை இந்த பின்வரும் ஸ்லைடர்களில் பார்க்கலாம்.

சத்தம்
உங்கள் கார் மேற்கூரையின் மீது ரூஃப் ரேக் இருந்தால் நீங்கள் அதிக சத்தம் என்ற பிரச்னையை எதிர்கொள்ள நேரிடும். இந்த சத்தத்தை அனுபவிக்க யாரும் விரும்ப மாட்டார்கள். நல்ல சாலையில் காரை ஓட்டும்போது எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருக்கலாம். ஆனால் கரடு முரடான சாலைகளில் காரை ஓட்டும்போது, இந்த பிரச்னையை காரில் பயணம் செய்யும் அனைவரும் எதிர்கொள்ள நேரிடும்.

மைலேஜ் குறையும்
காரின் எடை கூட கூட மைலேஜ் குறையும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். ரூஃப் ரேக்குகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல. பொதுவாக காரின் எடை அதிகமாக இருந்தால், அதிக எரிபொருள் நுகரப்படும். ரூஃப் ரேக்குகள் அதிக எடை கொண்டவை. எனவே உங்கள் காரில் ரூஃப் ரேக்குகள் இருந்தால், கார் அதிக எரிபொருளை நுகரும்.

அத்துடன் ரூஃப் ரேக்குகள் மூலம் அதிக எடையை கொண்டு செல்வதன் காரணமாக, காரின் முக்கியமான பாகங்கள் பாதிக்கப்படலாம். குறிப்பாக ஸ்டியரிங் வீல் மற்றும் சக்கரங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதிக எடை காரணமாக உங்கள் கார் அதிக எரிபொருளை நுகரும். ஒட்டுமொத்தத்தில் காரின் மைலேஜ் பாதிக்கப்படுவதுடன், செயல்திறனும் பாதிக்கப்படலாம்.

கார் தள்ளாடலாம்!
நாங்கள் ஏற்கனவே கூறியபடி உங்களின் கூடுதல் சுமையை நிர்வகிக்க ரூஃப் ரேக்குகள் பயன்படலாம்தான். ஆனால் காரை ஓட்டும்போது அவை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். அதாவது டிரைவர் காரை வளைக்கும்போது, கார் தள்ளாடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. சாதாரண சாலைகளில் கார் தள்ளாடுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். என்றாலும் வேகமாக வளைவு வேண்டிய சூழல்களில், இது பிரச்னையை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








