அவசரப்பட்டு சிக்கல்ல மாட்டிக்காதீங்க! லைட் வெயிட் பைக்குகளை வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

லைட் வெயிட் பைக்குகளை வாங்குவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

அவசரப்பட்டு சிக்கல்ல மாட்டிக்காதீங்க! லைட் வெயிட் பைக்குகளை வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

மோட்டார்சைக்கிள் இரண்டு முக்கியமான பிரிவுகளின் கீழ் வகைபடுத்தப்படுகின்றன. அவை லைட் வெயிட் மற்றும் ஹெவி வெயிட் ஆகும். இதில், லைட் வெயிட் மோட்டார்சைக்கிள்கள் குறித்த பல்வேறு தகவல்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். லைட் வெயிட் மோட்டார்சைக்கிளை வாங்குவதா? அல்லது ஹெவி வெயிட் மோட்டார்சைக்கிளை வாங்குவதா? என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது.

அவசரப்பட்டு சிக்கல்ல மாட்டிக்காதீங்க! லைட் வெயிட் பைக்குகளை வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

எனவே இந்த செய்தியில் லைட் வெயிட் மோட்டார்சைக்கிள்களின் நிறைகள் மற்றும் குறைகளை விரிவாக கூறியுள்ளோம். இந்த தகவல்கள், புதிய மோட்டார்சைக்கிள் வாங்கும்போது உங்களுக்கு உதவி செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம். உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை நீங்கள் பகிர முடியும். சரி, வாருங்கள் இனி செய்திக்குள் செல்லலாம்.

அவசரப்பட்டு சிக்கல்ல மாட்டிக்காதீங்க! லைட் வெயிட் பைக்குகளை வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

சக்தி வாய்ந்த இன்ஜின்

பொதுவாக லைட் வெயிட் பைக்குகளில் சக்தி வாய்ந்த இன்ஜின்கள் வழங்கப்படுகின்றன. இது லைட் வெயிட் பைக்குகளின் முக்கியமான குணாதிசயங்களில் ஒன்று. மிகவும் சக்தி வாய்ந்த இன்ஜின்களுடன் தயார் செய்யப்படுவது, லைட் வெயின் பைக்குகளின் முக்கியமான ப்ளஸ் பாயிண்ட். அதே சமயம் எடையும் குறைவாக இருப்பதால், அவற்றில் உங்களால் அதிவேகமாக செல்ல முடியும்.

அவசரப்பட்டு சிக்கல்ல மாட்டிக்காதீங்க! லைட் வெயிட் பைக்குகளை வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

எனவே பந்தயம் நடந்தால், ஹெவி வெயிட் பைக்குகளை, லைட் வெயிட் பைக்குகள் மூலம் மிகவும் எளிதாக வீழ்த்தி விட முடியும். லைட் வெயிட் பைக்குகள் மூலம் நீங்கள் எந்த சூழ்நிலையையும் எதிர் கொள்ளலாம். அத்துடன் லைட் வெயிட் பைக்குகளை கட்டுப்படுத்துவதும் கூட மிகவும் எளிமையான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவசரப்பட்டு சிக்கல்ல மாட்டிக்காதீங்க! லைட் வெயிட் பைக்குகளை வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

பக்காவான ரேஸிங் பைக் கிடையாது

லைட் வெயிட் பைக்குகள் மூலம் நீங்கள் பந்தயங்களில் வெற்றி பெறலாம்தான். ஆனால் உண்மையில் இவை பிரத்யேகமான ரேஸிங் பைக்குகள் கிடையாது. ரேஸிங் பைக்குகளில் இருக்கும் சிறப்பம்சங்கள் இந்த பைக்குகளில் இருக்காது. எனவே லைட் வெயிட் பைக்குகளை, ரேஸிங் பைக்குகள் என நினைத்து கொள்ளக்கூடாது.

அவசரப்பட்டு சிக்கல்ல மாட்டிக்காதீங்க! லைட் வெயிட் பைக்குகளை வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

அத்துடன் லைட் வெயிட் பைக்குகள் அனைவருக்கும் பொருந்தி போவதும் சிரமம்தான். குறிப்பாக குறைவான உயரம் கொண்டவர்கள் இந்த பைக்குகளை ஓட்டும்போது சிரமங்களை எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. லைட் வெயிட் பைக்குகளின் அதிக உயரம்தான் இதற்கு காரணம். எனவே உங்களுக்கு ஏற்ற வகையில் இருக்குமா? என்பதை பார்த்து கொள்ளுங்கள்.

அவசரப்பட்டு சிக்கல்ல மாட்டிக்காதீங்க! லைட் வெயிட் பைக்குகளை வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

திருடு போவதற்கான வாய்ப்புகள் அதிகம்

லைட் வெயிட் பைக்குகளின் வேகம் எந்த அளவிற்கு நமக்கு ப்ளஸ் பாயிண்டோ அதே அளவிற்கு மைனஸ் பாயிண்ட்டும் உள்ளது. ஆம், லைட் வெயிட் பைக்குகள் திருடு போவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். லைட் வெயிட் பைக்குகள் அதிவேகத்தில் செல்ல கூடிய திறன் வாய்ந்தவை என்பதால், யாரேனும் திருடி சென்றால், அவர்களை விரட்டி பிடிப்பது கடினம்.

அவசரப்பட்டு சிக்கல்ல மாட்டிக்காதீங்க! லைட் வெயிட் பைக்குகளை வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

எனவே லைட் வெயிட் பைக்குகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் தேவை. குறிப்பாக பாதுகாப்பற்ற ஒரு இடத்தில் நீங்கள் பைக்கை நிறுத்தி வைக்க வேண்டிய சூழல் அதிகம் இருந்தால், முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் நன்கு பைக் ஓட்ட தெரிந்த திருடர்களை விரட்டி பிடிப்பது சிரமமாகி விடும்.

அவசரப்பட்டு சிக்கல்ல மாட்டிக்காதீங்க! லைட் வெயிட் பைக்குகளை வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

குளிர் மற்றும் மழை காலங்களில் தொல்லை

லைட் வெயிட் பைக்குகள் அதிக ஹார்ஸ்பவரை வழங்க கூடியவை. அதிவேகத்தை திறமையாக தாங்க கூடிய வல்லமை அவற்றின் டயர்களுக்கு உள்ளது. ஆனால் குளிர் மற்றும் மழை காலங்களில் அவை பாதுகாப்பானது கிடையாது. ஏனெனில் மழை காலங்களில் சாலைகள் ஈரமாக இருந்தால், லைட் வெயிட் பைக்குகள் 'ஸ்லிப்' ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அவசரப்பட்டு சிக்கல்ல மாட்டிக்காதீங்க! லைட் வெயிட் பைக்குகளை வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

எனவே குளிர் மற்றும் மழை காலங்களில் லைட் வெயிட் பைக்குகள் ரைடு செல்வதற்கு அவ்வளவு ஏற்றவை கிடையாது. லைட் வெயிட் பைக்குகளின் குறைகளில் இது மிகவும் முக்கியமானது. குளிர் மற்றும் மழை காலங்களின்போது நீங்கள் பைக்கை ஓட்டியாக வேண்டிய சூழல் இருந்தால், அதிவேகத்தில் பயணம் செய்யாமல் பாதுகாப்பாக ஓட்டுவது நல்லது.

அவசரப்பட்டு சிக்கல்ல மாட்டிக்காதீங்க! லைட் வெயிட் பைக்குகளை வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

விலை

விலை மிகவும் அதிகம் என்பது லைட் வெயிட் பைக்குகளின் முக்கியமான குறைகளில் ஒன்று. அதேபோன்று லைட் வெயிட் பைக்குகளை எரிபொருளையும் அதிகமாக நுகரும். அத்துடன் டயர்களையும் அடிக்கடி மாற்ற வேண்டியதாக இருக்கும். லைட் வெயிட் பைக்குகளை நீங்கள் வாங்குவதாக இருந்தால், இந்த அம்சங்களை எல்லாம் மனதில் கொள்வது நல்லது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Pros And Cons Of Lightweight Bike. Read in Tamil
Story first published: Monday, July 26, 2021, 16:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X