லோயர் பெர்த் தான் வேணும்னு அடம்பிடிக்காதீங்க! அதுல எவ்வளவு பிரச்சனை இருக்குன்னு இங்க பாருங்க!
ரயில்களில் புக்கிங் செய்து நாம் நிச்சயம் பயணித்திருப்போம். அதுவும் புக்கிங் செய்து பயணித்தால் நமக்கென வழங்கப்பட்டுள்ள பெர்த் குறித்துத் தெரிந்து வைத்துக்கொள்வோம். இந்திய ரயில்வேயை பொருத்தவரை ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது நமக்கான சீட்/பெர்த்தை தேர்வு செய்ய முடியாது. அவர்களே தான் வார்த்தை அலாட் செய்வார்கள்.
இப்படியாக ரயில் மொத்தம் 5 வகையான பெர்த்கள் இருக்கிறது. அப்பர், மிடில், லோயர், சைடு அப்பர், சைடு லோயர் என மூன்று வகையான பெர்த்கள் இருக்கிறது. இதில் ஒவ்வொரு பெர்த்தில் இருப்பவர்களுக்கும் ஒவ்வொரு நன்மையும், ஒவ்வொரு விதமான பிரச்சனையும் இருக்கிறது. இந்த பதிவில் நாம் ஒவ்வொரு பெர்த்திலும் இருக்கும் நன்மை மற்றும் பிரச்சனைகள் குறித்துக் காணலாம்.

அப்பர் பெர்த்
அப்பர் பெர்த் கிடைத்தவர்களுக்கு பெரும் நன்மை என்றால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவர் தூங்கிக்கொண்டே செல்லலாம். ரயில்வே விதிப்படி இரவு நேரம் மட்டுமே பெர்த்தை பயன்படுத்த அனுமதியிருக்கிறது. ஆனால் அப்பர் பெர்த்தகளில் பகல் நேரத்திலும் யாருக்கும் தொந்தரவு இருக்காது என்பதால் படுத்துத் தூங்க எந்த பிரச்சனையும் இருக்காது.
அப்பர் பெர்த் இருப்பவர்களுகு்கு அசைல் சீட் தான் வழங்கப்படும். இதனால் நீங்கள் அமர்ந்திருக்கும் போதும் டீ, காபி போன்று விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்குவது எளிமையானது. மேலும் அப்பர் பெர்த் அருகே தான் ஃபேன் இருக்கும் இதனால் காற்றும் நன்றாக வரும்.
ஆனால் அப்பர் பெர்த் சீட்டில் இருக்கும் பிரச்சனை ஏற வேண்டும் என்பது தான் வயதானவர்களுக்கு ஏற முடியாது. மற்றொரு பிரச்சனை ஜன்னல் சீட் போல வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டே வர வாய்ப்பு கிடைக்காது. மேலும் பகல் நேரங்களில் அசைல் சீட்டில் அமர்ந்தால் மற்றவர்கள் அங்கும் இங்கும் நடப்பது அசௌகரியமாக இருக்கும், மேலே ஏறி பெர்த்தில் அமரவும் இடம் இருக்காது படுக்க மட்டுமே முடியும்.
மிடில் பெர்த்
மிடில் பெர்த்தில் நன்மைகள் குறைவு தான் ஆனால் இது ஒரு பிரத்தியேகமான ஒரு பெர்த் ஆகும். அதிகமான உயரத்தில் ஒருவர் ஏற பயமாக இருந்தால் அவருக்கு மிடில் பெர்த் வரப்பிரசாதம் தான். இந்த பெர்த்தில் இருக்கும் ஒரு நன்மை இதில் பயணிப்பவர்கள் அதிக நபர்கள் சுற்றி இருப்பார்கள் என்பதால் எளிதாக புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். இரவு நேரத்தில் பாதுகாப்பான உறக்கம் இங்கே கிடைக்கும்
ஆனால் மிடில் பெர்த்தில் இருப்பவர்களுக்குப் பிரச்சனைகள் அதிகம் தான். குறிப்பாக நினைத்த நேரத்தில் எல்லாம் படுக்க முடியாது. உடனிருப்பவர்களுக்கு அசௌகரியம் ஏற்படும். அதனால் பகல் நேரத்தில் படுப்பது எல்லாம் கனவு தான். இரவு நேரப் பயணமாக இருந்தால் மட்டுமே மிடில் பெர்த் சுவாரஸ்யமாக இருக்கும்.
லோயர் பெர்த்
லோயர் பெர்த்தில் உள்ள முக்கியமான அம்சம் இந்த சீட்டில் இருப்பவர்களுக்குத் தான் ஜன்னல் ஓர சீட், அதனால் பகல் நேரங்களில் இயற்கையை ரசித்துக்கொண்டே பயணிக்க முடியும். வயதானவர்களுக்கு ஏற்ற பெர்த் இது. சாப்பிடப் புத்தகம் வாசிக்க, லேப்டாப்பில் வேலை பார்க்க இந்த பெர்த் தான் சிறந்த இடமாக இருக்கும்.
ஆனால் லோயர் பெர்த்திலும் சில அசௌகரியங்கள் இருக்கிறது. பகல் நேரத்தில் உங்களால் இந்த பெர்த்தில் படுத்துக்கொண்டு பயணிக்க முடியாது. மற்ற பயணிகள் அமரும் இடம் உங்கள் பெர்த் தான். அதே நேரம் இரவில் ஜன்னலைத் திறந்து வைத்துக்கொண்டு படுக்க முடியாது பிளாட் பாரத்தில் இருப்பவர்கள் ஜன்னல் வழியாக உங்கள் பொருட்களைத் திருடக் கூட வாய்ப்பு இருக்கிறது.
சைடு லோயர்
பலர் இந்த சீட்டை தான் விரும்புவார்கள் குறிப்பாகத் தனிமை பயண விரும்பிகள் இந்த சீட்டை புக் செய்வார்கள். இதில் நீங்கள் ஒருவருடன் தான் பெர்த்தை பகிர வேண்டும். மேலும் உங்களுக்கு இரண்டு ஜன்னல்கள் கிடைக்கும். மேலும் இரவு நேரத்தில் தூக்கம் வரவில்லை என்றாலும் வசதியாக அமர்ந்து கொள்ள முடியும் மற்ற எந்த பெர்த்திலும் இரவு நேரம் அமர வசதி கிடையாது.
இந்த சீட்டிலும் ஒரு சில பிரச்சனை இருக்கிறது. குறிப்பாக 2 ஜன்னல் இருப்பதால் எளிதாக வெளியில் இருப்பவர்கள் ஜன்னல் வழியாகக் கையை விட்டு உங்கள் பொருட்களைத் திருடி விட முடியும். இரவு நேரங்களில் பயணிகள் அங்கும் இங்கும் நடந்தால் உங்களுக்குத் தொந்தரவாக இருக்கும். குறிப்பாக நீங்கள் இருக்கும் பெர்த் மற்றவர்களுக்குச் சிறிது நேரம் அமர்ந்து செல்ல வசதியாக இருக்கும். இதுவும் ஒரு பிரச்சனை தான்.
சைடு அப்பர்
இந்த சீட்டு தனிமை விருப்பிகளுக்கு ஏற்ற சீட் தான். இரவு நேரத்தில் விரைவாகப் படுக்க வேண்டும் என்றாலும் படுத்துக்கொள்ள முடியும். பகல் நேரத்திலும் படுத்துக்கொண்டு பயணிக்கலாம். கீழே இறங்கி அமர்ந்து பயணிக்க நினைத்தாலும் ஜன்னல் ஓர சீட் கிடைக்கும். இப்படியான பல நன்மை இந்த சீட்டில் இருக்கிறது.
இந்த சீட்டில் இருக்கும் ஒரே பிரச்சனை சைடு பெர்த் என்பதால் ஜன்னல் மற்றும் வெளிப்புற வியூ சிறப்பாக இருக்காது. இதனால் ரயில் எந்த ஸ்டேஷனில் நிற்கிறது என்பதைக் கீழே இறங்கி வந்துதான் தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். மேலும் காற்றோட்டமும் சைடு லோயரை ஒப்பிடும் போது குறைவாக இருக்கும்.
இது தான் இந்திய ரயில் பயணங்களில் உள்ள பெர்த்களின் அம்சங்களில் என்னென்ன பெர்த்தகளில் எந்த பிரச்சனை இருக்கிறது எனத் தெரிந்து கொண்டீர்களா? இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








