இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தின் சாதகங்களும், பாதகங்களும்!

Written By:

இந்தியர்களின் கனவாக இருக்கும் புல்லட் ரயில் திட்டத்திற்கு இன்று பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேயும் அடிக்கல் நாட்ட இருக்கின்றனர். பெரும் ஆவலைத் தூண்டி இருக்கும் இந்த திட்டம் 6 ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டு, புல்லட் ரயில் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் புல்லட் ரயில்களால் ஏற்படும் சாதக, பாதகங்களை இந்த செய்தியில் காணலாம்.

விரைவான போக்குவரத்து

விரைவான போக்குவரத்து

இந்தியா போன்ற பரந்து விரிந்த நிலபரப்பு கொண்ட நாடுகளுக்கு ரயில் போக்குவரத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. மேலும், விரைவான ரயில் போக்குவரத்து பெரு நகரங்கள் மட்டுமின்றி, சிறிய நகரங்களுக்கும் சிறந்த இணைப்பை தரும். விமான போக்குவரத்து மூலமாக சிறு நகரங்களுக்கு விரைவான போக்குவரத்து வசதியை கொடுக்க முடியாது.

வேகம்

வேகம்

அதிகபட்சமாக மணிக்கு 320 கிமீ வேகம் வரை இயக்க முடியும். இதன்மூலமாக, கடந்த 164 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க இந்திய ரயில்வேயில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையை இந்த புல்லட் ரயில்கள் கொடுக்கும்.

சொகுசு

சொகுசு

தற்போது உள்ள ரயில்களைவிட அதிர்வுகள் குறைவான மிக மிக சொகுசான பயணத்தை புல்லட் ரயில்கள் வழங்கும். சில மணிநேரத்தில் அருகருகே உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

மும்பை- ஆமதாபாத் இடையில் ஜப்பானின் சிங்கன்சென் புல்லட் ரயில்கள் அடிப்படையிலான ரயில்கள்தான் ஓடப்போகின்றன. கடந்த 1964ம் ஆண்டு ஓடத் துவங்கிய இந்த புல்லட் ரயில்கள் மூலமாக இதுவரை ஒரு உயிரிழப்பு கூட நடந்ததில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. மேலும், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களின்போது கூட பாதிப்பு ஏற்படாத வகையில் இதன் கட்டமைப்பும், தொழில்நுட்பமும் இருக்கும்.

கூட்ட நெரிசல்

கூட்ட நெரிசல்

மும்பை- ஆமதாபாத் நகரங்களுக்கு இடையே நாள் ஒன்றுக்கு இரு மார்க்கத்திலும் தலா 35 முறை வீதம் 70 முறை இயக்கப்பட உள்ளது. ஒவ்வொரு ரயிலிலும் குறைந்தது 750 பேர் வரை பயணிக்க முடியும்.

சாதக அம்சங்கள்

இதனால், பயணிகள் நெரிசல் கண்டிப்பாக குறையும். சிறு நகரங்களிலிருந்து பெருநகரங்களுக்கு செல்வோருக்கு மிகச் சிறந்த போக்குவரத்து சாதனமாக அமையும். இதனால், பஸ், ரயில் மற்றும் விமானங்களில் நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.

வசதிகள்

வசதிகள்

பொழுதுபோக்கு சாதனங்கள், மாற்றுத் திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் விதத்தில் விசாலமான கழிவறைகள், சிறுவர்கள் பயன்படுத்துவதற்கான தாழ்வாக அமைக்கப்பட்ட கழிவறைகள், தாய்ப்பால் புகட்டும் அறை, ரயில் நிலையங்கள் குறித்த அறிவிப்பு வசதி போன்றவை இந்த புல்லட் ரயில்களில் இடம்பெற்றிருக்கும்.

சுற்றுச்சூழல் நண்பன்

சுற்றுச்சூழல் நண்பன்

புகை வெளியிடும் பிரச்னை இல்லை என்பதுடன், கழிவுகளை கையாள்வதற்கு மிக நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். எனவே, சுற்றுச்சூழலுக்கு மிகச் சிறந்த போக்குவரத்து சாதனமாக அமையும்.

பெரும் பயன்

பெரும் பயன்

முதல்கட்டமாக ஜப்பானில் தயாரிக்கப்படும் புல்லட் ரயில்கள்தான் இந்தியாவில் பயன்படுத்தப்பட உள்ளன. மேக் இன் இந்தியா திட்டத்தின் அடிப்படையில், இந்தியாவுடன் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொண்டு, இந்தியாவிலேயே புல்லட் ரயில்களை உற்பத்தி செய்ய ஜப்பான் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலமாக புல்லட் ரயில் தொழில்நுட்பம் சார்ந்த அறிவை இந்திய பொறியாளர்கள் எளிதாக பெறும் வாய்ப்புள்ளது.

சாதக அம்சங்கள்

எதிர்காலத்தில் இந்தியாவிலிருந்து புல்லட் ரயில்கள் அயல் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு இருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் ப்யூஷ் கோயல் கூறி இருக்கிறார்.

பொருளாதார நிலை

பொருளாதார நிலை

புல்லட் ரயில் செல்லும் வழித்தடங்களில் இருக்கும் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்கள் விரைவான போக்குவரத்து வசதி மூலமாக பொருளாதார ஏற்றம் பெரும், தொழில்கள் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

மும்பை- ஆமதாபாத் புல்லட் ரயில் கட்டுமானப் பணியின் மூலமாக 20,000 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், புல்லட் ரயில் இயக்குதல் பணிகளிலும் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும். கட்டுமானப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் அடுத்தடுத்து இந்தியாவில் நடைபெற இருக்கும் புதிய புல்லட் ரயில் வழித்தட கட்டுமானப் பணியிலும் வேலைவாய்ப்பு பெற முடியும்.

பாதக அம்சங்கள்

மும்பை- ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டம் மட்டும் ரூ.1.10 லட்சம் கோடி முதலீட்டில் நடைபெற இருக்கிறது. புல்லட் ரயில் தடம் அமைக்க கிலோமீட்டருக்கு ரூ.100 கோடி முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இது மிகப்பெரிய முதலீடாக இருப்பதாகவும், இதில் பாதகங்கள் அதிகம் இருப்பதாகவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கட்டணம்

கட்டணம்

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களின் இரண்டடுக்கு ஏசி வகுப்பு கட்டணத்துக்கு இணையானதாக புல்லட் ரயில் கட்டணம் இருக்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் ப்யூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணத்தை பன்மடங்கு அதிகமாக இருக்கும் என்பதால், சாமானிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு விரைவு ரயில் பயணம் என்பது வெறும் கனவாகவே மாறும் நிலை இருக்கிறது. மேலும், பலர் விமான பயணத்தையே தேர்வு செய்யும் வாய்ப்பும் இருக்கிறது.

கால தாமதம்

கால தாமதம்

புல்லட் ரயில் கட்டமைப்பை உருவாக்க 6 ஆண்டுகள் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், விலைவாசி உயர்வுக்கு தக்கவாறு இந்த புல்லட் ரயில் திட்டத்திற்கான முதலீடும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதும் பாதகமான விஷயமாக இருக்கிறது.

நிலம் கையகப்படுத்துதல்

நிலம் கையகப்படுத்துதல்

புல்லட் ரயில் திட்டத்திற்கு பல நூறு ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதனால், நகரங்களில் பெரும் நெருக்கடியும், புராதன சின்னங்களை அழிக்க வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டு வருகிறது.

வெற்றி பெறுமா?

வெற்றி பெறுமா?

எந்த திட்டத்திலும் சாதக, பாதகங்கள் இருக்கும். ஆனால், இந்த திட்டத்தை முறையாக கையாண்டால் மட்டுமே வெற்றி பெற வைக்க முடியும். அரசியல் மாற்றங்கள், பொருளாதார சிக்கல்கள் போன்றவற்றை கடந்து இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், நிச்சயம் நவீன இந்தியாவின் புதிய அடையாளமாக புல்லட் ரயில் மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Pros And Cons Of India's First Bullet Train Project.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark