ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் சாதக, பாதக விஷயங்கள்!

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் சாதக, பாதக விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கம்பீரம், அதற்கு ஈடுகொடுக்கும் திறன் வாய்ந்த எஞ்சின், உருவத்திற்கு ஏற்ற தட, தடக்கும் அந்த அலாதியான சைலென்சர் சப்தம் என வாடிக்கையாளர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் மோட்டார்சைக்கிள் பிராண்டு ராயல் என்ஃபீல்டு.

 பாரம்பரியம்:

பாரம்பரியம்:

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் பாரம்பரிய டிசைன் அம்சங்களை பெற்றிருக்கிறது. நீண்ட காலமாக எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையில் இருக்கிறது. பல புதிய மோட்டார்சைக்கிள்கள் ராயல் என்ஃபீல்டு மார்க்கெட்டை குறிவைத்து நிலைநிறுத்தப்பட்டாலும், ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் பாரம்பரிய வடிவமைப்பு வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கும் விஷயமாக இருக்கிறது.

கம்பீரம்:

கம்பீரம்:

பிரம்மாண்டமான தோற்றம் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். அத்துடன் வேறு எந்த நிறுவனத்திடமும் இல்லாத வெகு நேர்த்தியான டிசைனை பெற்றிருக்கிறது. வலிமையான கட்டமைப்பும் வாடிக்கையாளர்களை வசியப்படுத்துகிறது.

சொகுசு:

சொகுசு:

மிக நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில், சவுகரியமான இருக்கை அமைப்பும், கைப்பிடி அமைப்பும் ஓட்டுபவருக்கும், பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் உற்சாகமான பயண அனுபவத்தை வழங்குகிறது. உயரமானவர்களுக்கு ஓர் சிறந்த தேர்வாக ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் அமைந்துள்ளது.

ஸ்போக் வீல்:

ஸ்போக் வீல்:

ஸ்போக்ஸ் சக்கரம் இருப்பது மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்டாக கருதப்படுகிறது. கரடுமுரடான சாலைகள் மற்றும் கடினமான பயன்பாட்டின்போது இந்த ஸ்போக் வீல்கள்தான் சிறந்ததாக இருக்கும்.

ரீசேல் மதிப்பு:

ரீசேல் மதிப்பு:

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு ரீசேல் மதிப்பு அதிகம் இருப்பதும் வாடிக்கையாளர்களை கவர்ந்த விஷயமாக இருக்கிறது. அர்த பழைய புல்லட்டுகள் கூட இன்று நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

நவீன வசதிகள் இல்லை:

நவீன வசதிகள் இல்லை:

தற்போது வரும் நவீன யுக மோட்டார்சைக்கிள்களுடன் ஒப்பிடும்போது விலை மிக அதிகம் என்ற அபிப்ராயம் உள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இல்லை.

விலை நிர்ணயம்:

விலை நிர்ணயம்:

நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இல்லாமலேயே இந்த மோட்டார்சைக்கிள்களின் விலை மிக கணிசமாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கருத்து உண்டு.

தரம்:

தரம்:

பாரம்பரியம், வலிமையான கட்டமைப்பு போன்றவற்றை பெற்றிருந்தாலும், உதிரிபாகங்கள் தரம் மிக மோசமாக இருப்பதாக சமூக வலைத்தளங்கள் மூலமாக வரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. பல வாடிக்கையாளர்கள் சமூக வலைத்தளங்களில் புலம்பும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. குறிப்பாக, ஹிமாலயன் உள்ளிட்ட புதிய மாடல்கள் எதிர்பார்த்த அளவு இல்லை.

பிரேக் சிஸ்டம்:

பிரேக் சிஸ்டம்:

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு அம்சம் இல்லை என்பதுடன், அதன் பிரேக்குகள் எதிர்பார்த்த அளவு செயல்திறன் கொண்டவை இல்லை என்பது மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட்டாக வாடிக்கையாளர்களால் குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறது.

மந்தம்:

மந்தம்:

பஜாஜ் பல்சர் 180 உள்ளிட்ட விலை குறைவான இன்றைய யுக பைக்குகளுடன் ஒப்பிடும்போது ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் வேகம் குறைவானதாகவே இருக்கின்றன.

கையாளுமை:

கையாளுமை:

நீண்ட தூர பயணத்திற்கு சிறப்பானது என்றாலும், நகர்ப்புறத்தில் தினசரி பயன்பாட்டிற்கு லாயக்கில்லை என்பதும் பல உரிமையாளர்களின் கருத்தாக உள்ளது. ஓட்டுவதற்கு சிறப்பான கையாளுமை கொண்ட பைக் இல்லை என்பதும் பலரும் அங்கலாய்க்கும் விஷயமாக இருக்கிறது. சட்டுபுட்டுனு வளைந்து நெளிந்து செல்வதற்கு ஏற்ற மாடலாக இல்லை என்பதும் பல வாடிக்கையாளரின் குறையாக இருக்கிறது.

அதிர்வுகள்

அதிர்வுகள்

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளின் எஞ்சின் அதிர்வுகள் அதிகம் என்ற பிரச்னையும் வாடிக்கையாளர்களால் ஜீரணிக்க முடியாத விஷயமாக இருக்கிறது. நாளடைவில் சிலருக்கு உடல் பிரச்னைகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

மைலேஜ்:

மைலேஜ்:

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் உரிமையாளர்கள் மைலேஜை பற்றி பேசக்கூடாது என்ற எழுதப்படாத சட்டம் உண்டு. ஆனாலும், நீண்ட கால பயன்பாட்டில் மிக குறைவான மைலேஜ் தரும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது.

எடை

எடை

வண்டி ஓட்டும்போது மிக சுகமானதாக இருக்கிறது. அதேநேரத்தில், வண்டியை தள்ளுவது அல்லது பழுது ஏற்பட்டால் சாலையில் ஓரம் கட்டுவது உள்ளிட்டவை பலருக்கும் சவாலான விஷயமாக மாறி விடுவதும் உரிமையாளர்களின் மனக் குறையாக உள்ளது.

ஆயிரம் இருந்தாலும்...

ஆயிரம் இருந்தாலும்...

ஆயிரம் இருந்தாலும் அந்த கெத்து வேறு எந்த மோட்டார்சைக்கிளிலும் வருவதில்லை. எனவே, விலை ஒரு பொருட்டல்ல என்பது எமது கருத்து.

Article Published On: Thursday, March 15, 2018, 15:09 [IST]
English summary
Pros and cons for royal-enfield Motorcycles.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+