அம்பானி வைத்திருக்கும் ரோல்ஸ் ராய்ஸைவிட விலை அதிகம்! யாருங்க இந்த மனுசன் காருக்காக பணத்தை வாரி இறைச்சிருக்காரு
சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் பாஷ்யம் யுவராஜ் இந்தியாவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரோ (Rolls Royce Spectre) காரை வாங்கி ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்தார். ஏனெனில், இந்தியாவிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆசியாவிற்குமே இதுதான் முதல் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்ட்ரே ஆகும்.
மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, அதானி போன்றவர்களிடத்தில்கூட இந்த கார் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அத்தகைய அரிய மற்றும் சிறப்புமிக்க காரையே சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சமீபத்தில் வாங்கினார். இந்த காரின் விலை ரூ. 11 கோடிக்கும் அதிகம் ஆகும்.

இதனால் தான் இந்த கார் கொள்முதல் சம்பவம் மிகப் பெரிய அதிர்வலையை இந்தியாவில் ஏற்படுத்தியது. இதன் தாக்கமே இன்னும் ஓயாத நிலையில், அதற்குள்ளாக மற்றும் ஒரு மாபெரும் தொகைக் கொண்ட கார் கொள்முதல் சம்பவம் இந்தியாவில் அரங்கேறி இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
உலகின் விலை உயர்ந்த கார் மாடல்களில் ஒன்றாக அறியப்படும் பென்ட்லீ முஸ்லேன் இடபிள்யூ சென்டனரி எடிசன் (Bentley Mulsanne EWB Centenary Edition) எனும் கார் மாடலையே இந்தியர் ஒருவர் வாங்கி இருக்கின்றார். இந்தியர் என்ற உடன் அவர் முகேஷ் அம்பானி அல்லது அவருடைய சார்ந்த குடும்பத்தினராக இருப்பார்களோ என எண்ணிக் கொள்ள வேண்டும்.

ஏன், நம்மில் பலர் அறியப்படாத ஓர் தொழிலதிபரே இந்த காரை வாங்கி இருக்கின்றார். கர்நாடகாவைச் சேர்ந்த விஎஸ் ரெட்டி என்பவரே இந்த காரை வாங்கியவர் ஆவர். பிரிட்டிஷ் பயோலாஜிக்கல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் இவரே ஆவார். இவருக்கு புரோட்டீன் மேன் ஆஃப் இந்தியா என்கிற புனைப் பெயர் உண்டு.
முன்னணி ஊட்டச்சத்து மருந்து தயாரிப்பு நிறுவனமே இது ஆகும். இதுவரை 52க்கும் மேற்பட்ட நேஷனல் மற்றும் இன்டர்நேஷனல் விருதுகளை அவர் வென்றிருக்கின்றார். இவர் ஓர் மிக சிறந்த கார் காதலரும் ஆவார். நாட்டில் விற்கப்படும் அனைத்து கார்களும் தன் கார் கலெக்ஷனில் இருக்க வேண்டும் என்பது விஎஸ் ரெட்டியின் சிறு வயது கனவு ஆகும்.
இத்தகைய ஓர் கார் காதலரே தற்போது இந்தியாவின் மிக மிக விலை உயர்ந்த காரை வாங்கி இருக்கின்றார். அவர் வாங்கி இருக்கும் பென்ட்லீ முஸ்லேன் இடபிள்யூ சென்டனரி எடிசன் காரின் இந்திய மதிப்பு ரூ. 14 கோடிகள் என கூறப்படுகின்றுது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
இது இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி வைத்திருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் காரைவிட அதிக விலை ஆகும். விஎஸ் ரெட்டி வாங்கி இருக்கும் இந்தியாவின் விலை உயர்ந்த பென்ட்லீ கார் ரோஸ் கோல்டு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த காரை அழுகப்படுத்தும் விதமாக அதன் 21 அங்குல அலாய் வீல் இருக்கின்றது.
இத்துடன், இந்த காரில் பிரீமியம் லுக்கை வழங்கும் விதமாக லெதர் அப்ஹோல்டரி, ரியர் குவார்டர் வேனிட்டி மிர்ரர்கள் மற்றும் காரின் தரை பகுதியில் ஆடு கம்பளியால் ரெடி செய்யப்பட்ட விரிப்பான் ஆகியவைக் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த கார் பென்ட்லீயின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் விதமாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட சிறப்பு பதிப்பு ஆகும்.
இது சிறப்பு பதிப்பு என்பதாலேயே வெறும் 100 யூனிட்டுகள் மட்டுமே தயார் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. மூன்று விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. சென்டினெரி கோல்டு, சென்டினரி பிளாக் மற்றும் சென்டினரி ஒயிட் ஆகியவையே அவை ஆகும். இந்த காரில் கூடுதல் பிரீமியம் அம்சங்களாக ரெக்லைனிங் இருக்கை கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த இருக்கை கூலிங் மற்றும் ஹீட்டிங் வசதிக் கொண்டதும்கூட. இத்துடன், டைமண்ட் தோற்றம் கொண்ட போர்வையே இந்த இருக்கையை அலங்கரிக்கும் விதமாக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, இந்த இருக்கையால் மசாஜ்கூட செய்ய முடியும். இதுபோன்ற ஏகப்பட்ட சிறப்பு வசதிகளைத் தாங்கியதாகவே இந்த கார் இருக்கின்றது.
இதனால்தான் பணக்காரர்களின் விருப்பமான கார் மாடலாக பென்ட்லீயின் முஸ்லேன் காட்சிளிக்கின்றது. இந்த கார் திறனை வெளிப்படுத்துவதிலும் கை தேர்ந்ததாகக் காட்சியளிக்கின்றது. இதற்காக 6.75 லிட்டர் வி8 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 506 குதிரை திறனையும், 1020 என்எம் டார்க்கையும் வெளியேற்ற முடியும்.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 296 கிமீ ஆகும். மேலும், வெறும் 5.5 செகண்டுகளிலேயே இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும். 8 ஸ்பீடு இசட்எஃப் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்தகைய சூப்பரான காரையே இந்திய தொழிலதிபர் வாங்கி இருக்கின்றார். இந்த கார் கொள்முதலானது கடந்த சில வாரங்களுக்கு முன்னரே அரங்கேறிவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் முன்பெல்லாம் மிகவும் அரிய வகை கார் என்று கருதப்பட்டவை அனைத்தும் இப்போது மிகவும் சாதாரணமாக தென்படத் தொடங்கி இருக்கின்றன. அந்தவகையிலேயே இந்த பென்ட்லீ காரும் இனி இந்தியாவில் தென்பட இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல அரிய வகை கார்கள் விரைவில் இந்தியாவில் தென்பட ஆரம்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








