செக் வெச்சுட்டாங்க... இனிமேல் இது இல்லேனா வீட்டை விட்டு கூட வண்டிய வெளிய எடுக்க முடியாது! அரசு அதிரடி உத்தரவு!
வாகன ஓட்டிகளை கலக்கத்தில் ஆழ்த்தும் வகையிலான உத்தரவு ஒன்றை அரசு தற்போது பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை மிகவும் அதிகமாக காணப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்றாலும் கூட, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று அரசும், நீதிமன்றங்களும் உத்தரவிடும் அளவிற்கு காற்று மாசுபாடு பிரச்னை மிகவும் தீவிரமாக இருக்கிறது. இந்த பிரச்னையை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக தற்போது வாகனங்களை அரசு குறி வைத்துள்ளது. இந்தியாவின் காற்று மாசுபாடு பிரச்னைக்கு பெட்ரோல், டீசலில் இயங்க கூடிய வாகனங்களும் மிக முக்கியமான காரணமாக இருந்து வருகின்றன. எனவே பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு பதில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அரசு ஊக்குவித்து வருகிறது.

அத்துடன் பெட்ரோல், டீசல் வாகனங்கள் வெளியிடும் புகையை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளும் மிக தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், பெட்ரோல் பங்க் நிர்வாகங்களுக்கு அரசு தற்போது அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் மூலமாக காற்று மாசுபாடு பிரச்னை குறையும் என அரசு எதிர்பார்க்கிறது.

இந்த புதிய உத்தரவின்படி, முறையான மாசு கட்டுப்பாடு சான்றிதழ் (PUCC - Pollution Under Control Certificate) இருக்கும் வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் நிரப்பப்படும். மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய கூடாது என பெட்ரோல் பங்க் நிர்வாகங்களுக்கு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

வரும் அக்டோபர் 25ம் (October 25) தேதியில் இருந்து இந்த உத்தரவு நடைமுறைக்கு வருகிறது. ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் விற்பனை செய்ய கூடாது என்று பெட்ரோல் பங்க் நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்ட செய்திகளை கடந்த காலங்களில் நீங்கள் படித்திருக்கலாம். இதே பாணியில் மாசு கட்டுப்பாடு சான்றிதழும் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

டெல்லி மாநில அரசுதான் தற்போது பெட்ரோல் பங்க் நிர்வாகங்களுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை மிகவும் கடுமையாக உள்ளது. அதை கட்டுப்படுத்துவதற்காக, மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்க கூடாது என்ற உத்தரவை அரசு பிறப்பிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தன.

டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூட இது தொடர்பாக பேசியிருந்தார். இந்த சூழலில்தான் பெட்ரோல் பங்க் நிர்வாகங்களுக்கு டெல்லி அரசு தற்போது அதிகாரப்பூர்வமான உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக டெல்லி போக்குவரத்து துறை தற்போது வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பது பின்வருமாறு:

''வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனத்திற்கு முறையான மாசு கட்டுப்பாடு சான்றிதழை பெற்று கொள்ள வேண்டும். மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாமல் வாகனங்களை ஓட்டினால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். அல்லது இந்த 2 தண்டனைகளும் சேர்த்தும் வழங்கப்படலாம்''

மேலே குறிப்பிட்டுள்ளவாறு, டெல்லி போக்குவரத்து துறையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆர்சி எனப்படும் வாகனங்களின் பதிவு சான்றிதழ் (RC - Registration Certificate) சஸ்பெண்ட் செய்யப்பட்டு விடும் எனவும் வாகன உரிமையாளர்களை டெல்லி போக்குவரத்து துறை அதிரடியாக எச்சரித்துள்ளது.

எனவே அசௌகரியம் மற்றும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டுமென்றால், வரும் அக்டோபர் 25ம் தேதிக்கு முன்பு முறையான மாசு கட்டுப்பாடு சான்றிதழை பெற்று கொள்ளும்படி வாகன உரிமையாளர்களை டெல்லி போக்குவரத்து துறை வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காற்று மாசுபாடு பிரச்னை மிகவும் அதிகமாக உள்ளதால், வரும் காலங்களில் இன்னும் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியை பின்பற்றி மற்ற மாநில அரசுகளும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








