இனி லைசென்ஸ், ஆர்சிபுக், இன்சூரன்ஸ் மட்டுமில்ல இதையும் எடுத்துட்டு போங்க! மத்திய அரசு புது ரூல்ஸ்

இனி வாகனத்திற்கான புகை சான்று பெற சோதனை நடக்கும் போது வீடியோ எடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த வீடியோவை அப்லோடு செய்தால் தான் வாகனங்களுக்கான புகை சான்று வழங்கப்படும் எனவும் அரசு புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது. புகை சான்று வழங்குவதில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்க இப்படியான நடவடிக்கைகளை அரசு கையில் எடுத்துள்ளது இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் ஓடும் அனைத்து வாகனங்களும் குறிப்பிட்டு அளவு புகை மட்டுமே வெளியேற்ற அனுமதி உள்ளது. அதிகமான மாசு வெளியேற்றும் வாகனங்களை சாலையில் பயன்படுத்தக்கூடாது. இது இந்தியாவிற்கு காற்று மாசுவை அதிகரிக்கும் ஒரு விஷயமாக மாறிவிடும் என்பதால் இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் புகை சான்று என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

puc certificate video verification

புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு புகை சான்று என்பது தேவையில்லை, குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வாகனம் தொடர்ந்து பயன்படுத்தப்பட வேண்டும் என்றால் புகை சான்று என்பது எடுக்கப்பட வேண்டும். இப்படியாக புகை சான்று வழங்க ஆங்காங்கே சில சென்டர்களை வைத்து அங்கு வாகனங்களை பரிசோதனை செய்து வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசுவை கணக்கீடு செய்து குறிப்பிட்ட அளவை விட குறைவான மாசு வெளியேறும் வாகனங்களுக்கு புகைச்சான்று வழங்கப்பட்டு வருகிறது.

இப்படியாக வழங்கப்படும் புகை சான்றுகள் எல்லாம் மத்திய அரசின் வாகன் தளத்தில் தான் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில் சமீப காலமாக வாகனங்களுக்கு வழங்கப்படும் புகை சான்று வழங்கும் நடவடிக்கையில் பல முறைகேடுகள் நடப்பதாக அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. பல சென்டர்கள் வாகனங்களை பரிசோதனை செய்யாமலேயே அவர்களுக்கு புகை சான்றுகளை வழங்கி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

puc certificate video verification

இந்நிலையில் மத்திய அரசு இந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதற்கா புகை சான்று வழங்கும் போது செய்யப்படும் சோதனையை முழுமையாக வீடியோ ரெக்கார்டு செய்து அதை வாகன் தளத்தில் அப்லோடு செய்தால் தான் புகை சான்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக வீடியோ அப்லோடு செய்தால் அதன் மூலம் கண்காணிக்கப்பட்டு மோசடிகள் தவிர்க்கப்படும் என்பதால் இப்படியான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் தற்போது புகை சான்று வழங்கும் மையங்களில் வீடியோ பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இனி புகைச் சான்று வழங்கும் நபர்கள் புகை சான்று சோதனையின் போது முழு சோதனையையும் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும். அந்த வீடியோவை அப்லோடு செய்தால் தான் இனி வாகனங்களுக்கான புகை சான்று கிடைக்கும்.

puc certificate video verification

மேலும் அந்த வீடியோவில் வாகனங்களில் இருந்து எவ்வளவு மாசு வெளியேறுகிறது என கணக்கிடும் கருவியை நன்கு தெரியும்படி காட்ட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி அதிக அளவு மாசு வெளியேறும் வாகனங்களுக்கு புகை சான்று வழங்கப்படாமல் தவிர்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அளவில் காற்று மாசு என்பது பாதுகாக்கப்படும் என நம்பப்படுகிறது.

ஒரு வேலை உங்கள் வாகனம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான மாசுவை வெளியேற்றினால் நீங்கள் உடனடியாக உங்கள் வாகனத்தை நம்பகமான மெக்கானிக்கிடம் கொண்டு செல்ல வேண்டும். அவரிடம் பிரச்சனையை கூறி உங்கள் வாகனத்திலிருந்து அதிகமான புகை வெளியேறுவதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். முறையான பராமரிப்பு இல்லாத வாகனங்களில் அதிகமான மாசு வெளியேறும் வாய்ப்பு உள்ளது.

அதனால் சரியான காரணத்தை கண்டறிந்து அதை சரி செய்தால் உங்கள் வாகனம் மீண்டும் புகை சான்று பெற தகுதி பெற்ற வாகனமாக மாறிவிடும். புகை சான்று பெற்ற வாகனங்கள் மட்டுமே இந்தியா முழுவதும் சாலைகளில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட வாகனங்களாக உள்ளன. இதனால் உங்கள் வாகனத்திற்கு புகை சான்று சரியாக இருக்கிறதா என்ன ஒரு முறை செக் செய்து கொள்ளுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா மட்டுமல்ல உலக அளவில் மாசு என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது இதை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதற்கு இந்தியா எடுத்து வரும் முக்கியமான நடவடிக்கையாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இனி வாகனங்களில் லைசென்ஸ், ஆர்சி புக், இன்சூரன்ஸ் போக இந்த புகைச்சான்றும் தேவைப்படும் ஆவணமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 28, 2023, 7:00 [IST]
English summary
Puc certificate video verification government mandate for testing
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X