நின்னு விளையாட போறாங்க! வாகன உரிமையாளர்களின் அடி வயிற்றில் புளியை கரைக்கும் புதிய சட்டம்! அரசு திடீர் முடிவு!

வாகன உரிமையாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள புதிய சட்டம் தொடர்பாக அரசு திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நின்னு விளையாட போறாங்க! வாகன உரிமையாளர்களின் அடி வயிற்றில் புளியை கரைக்கும் புதிய சட்டம்! அரசு திடீர் முடிவு!

இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக தலை நகர் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை மிகவும் தீவிரமாக உள்ளது. இதை கட்டுப்படுத்துவதற்காக டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டெல்லியை பொறுத்தவரை, காற்று மாசுபாடு பிரச்னைக்கு வாகனங்கள் மிகவும் முக்கியமான காரணமாக உள்ளன.

நின்னு விளையாட போறாங்க! வாகன உரிமையாளர்களின் அடி வயிற்றில் புளியை கரைக்கும் புதிய சட்டம்! அரசு திடீர் முடிவு!

டெல்லியில் பிஎம் 2.5 உமிழ்வுகளுக்கு போக்குவரத்து துறைதான் 28 சதவீதம் காரணமாக இருப்பதாக அரசு மதிப்பிட்டுள்ளது. எனவே வாகனங்கள், பியூசிசி எனப்படும் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் (PUCC - Pollution Under Control Certificate) பெறுவது அவசியமான ஒன்றாக உள்ளது. முறையான மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

நின்னு விளையாட போறாங்க! வாகன உரிமையாளர்களின் அடி வயிற்றில் புளியை கரைக்கும் புதிய சட்டம்! அரசு திடீர் முடிவு!

இதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. முறையான மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு மோட்டார் வாகன சட்டம், 1993-ன் பிரிவு 190(2)-ன் கீழ், 10 ஆயிரம் ரூபாய் அல்லது 6 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். அல்லது இந்த இரண்டு தண்டனைகளும் சேர்த்தே விதிக்கப்படலாம்.

நின்னு விளையாட போறாங்க! வாகன உரிமையாளர்களின் அடி வயிற்றில் புளியை கரைக்கும் புதிய சட்டம்! அரசு திடீர் முடிவு!

ஆனால் சட்டங்கள் இவ்வளவு கடுமையாக இருந்தும், டெல்லியில் 17 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு முறையான மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லை என தரவுகள் தெரிவிக்கின்றன. இது டெல்லி போக்குவரத்து துறையின் அதிகாரப்பூர்வமான புள்ளி விபரங்கள் ஆகும். எனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரடியான உத்தரவு ஒன்றை டெல்லி அரசு பிறப்பித்தது.

நின்னு விளையாட போறாங்க! வாகன உரிமையாளர்களின் அடி வயிற்றில் புளியை கரைக்கும் புதிய சட்டம்! அரசு திடீர் முடிவு!

இந்த உத்தரவின்படி முறையான மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படாது. அதாவது முறையான மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இருந்தால் மட்டுமே பெட்ரோல் பங்க்குகளில் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பப்படும். இந்த உத்தரவு வரும் அக்டோபர் 25ம் தேதியில் இருந்து (நாளை) அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நின்னு விளையாட போறாங்க! வாகன உரிமையாளர்களின் அடி வயிற்றில் புளியை கரைக்கும் புதிய சட்டம்! அரசு திடீர் முடிவு!

ஆனால் தற்போது திடீரென இந்த உத்தரவை டெல்லி அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதுகுறித்து டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறுகையில், ''இந்த சட்டம் தொடர்பாக பெட்ரோல் மற்றும் டீசல் டீலர்கள் சங்கம் ஒரு சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளது. இது குறித்து முதல் அமைச்சருடன் கலந்துரையாடுவோம். அதன் பிறகு முடிவு செய்யப்படும்'' என்றார்.

நின்னு விளையாட போறாங்க! வாகன உரிமையாளர்களின் அடி வயிற்றில் புளியை கரைக்கும் புதிய சட்டம்! அரசு திடீர் முடிவு!

எனவே நாளை முதல் இந்த சட்டம் அமலுக்கு வராது என டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறியுள்ளார். எனினும் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை மிகவும் தீவிரமாக உள்ளதால், கூடிய விரைவிலேயே இந்த சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டு விடும் டெல்லி அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நின்னு விளையாட போறாங்க! வாகன உரிமையாளர்களின் அடி வயிற்றில் புளியை கரைக்கும் புதிய சட்டம்! அரசு திடீர் முடிவு!

இந்த சட்டம் தற்போதைக்கு தற்காலிகமாக மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை வாகன உரிமையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களுக்கு முறையான மாசு கட்டுப்பாடு சான்றிதழை வைத்து கொள்வதுதான் நல்லது.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Monday, October 24, 2022, 12:23 [IST]
English summary
Pucc mandatory for buying petrol diesel at put on hold
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+