டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...

தனக்கெதிராக புகாராளிக்கும் வகையில் புகைப்படத்தை வெளியிட்ட துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு, முதலமைச்சர் நாராயணசாமி டுவிட்டரில் பதிலடி கொடுக்கும் வகையில் ஓர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் இருவருக்கிடையேயான வாய்மொழி போர் சூடிபிடித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...!

புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டம் நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இது அமலுக்கு வந்த நாளிலிருந்து பல்வேறு சுவாரஷ்ய சம்பவங்கள் நாட்டில் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றது.

புதிய மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் விதிக்கப்படும் அபராதங்கள் வாகனத்தின் விலையைக் காட்டிலும் அதிகமாக அமைவதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...!

இதுமட்டுமின்றி, பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலரும் இந்த புதிய சட்டத்தின்கீழ் சிக்கி வருகின்றனர். தொடர்ந்து, சில பிரபலங்களும் இதில் சிக்கி, அந்நாளின் தலைப்பு செய்திகளில் இடம்பிடிக்கின்றனர்.

டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...!

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தின் முதலைச்சர் வி. நாராயணசாமி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி அம்மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி டுவிட்டர் பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக, புதுவை முதலைச்சரும் ஆளுநர் கிரண்பேடியின் போக்குவரத்து விதிமீறல்குறித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...!

இதனால், இருவர்களுக்கிடையே வாய்மொழி போர் தற்போது டுவிட்டரில் வாயிலாக தொடங்கியுள்ளது. இருவரின் இந்த மோதல் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறுபக்கம் மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களுக்கு வேலையில்லாமல் இவர்கள் செய்துவிட்டதாக புலம்புகின்றனர்.

டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...!

புதுச்சேரி, காம்ராஜ் நகர் தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்த வைத்திலிங்கம், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நின்று வெற்றிப் பெற்றார். இதையடுத்து, எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார். ஆகையால், காலியான அத்தொகுதிக்கு நேற்றைய (திங்கள்கிழமை) தினம் இடைத்தேர்தல் நடைபெற்றது.

டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...!

இதற்காக, காங்கிரஸ் சார்பில் ஜான்குமார் என்பவர் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். அவரை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் விதமாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) பைக் ரேலியில் ஈடுபட்டார். அப்போது அவர் அவர் ஹெல்மட் அணியவில்லை. இதுகுறித்த புகைப்படம் தி இந்து நாளிதழில் வெளியாகியது.

MOST READ: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் செக்வே ஸ்கூட்டரில் ரோந்து!

டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...!

இதனை ஆதாரமாக எடுத்துக்கொண்டு கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி போக்குவரத்து விதிமீறலை ஈடுபட்டதாகக் கூறி டுவிட்டரில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் டிஜிபி பாலாஜி ஸ்ரீவஸ்தவா ஆகியோரை டேக் (TAG) செய்தவாறு புகாரை பதிவிட்டிருந்தார். மேலும், நாராயாணசாமி, உச்ச மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்களின் உத்தரவுகளை மீறியிருப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு சான்றாக தி இந்து நாளிதழில் வெளியாகிய புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

MOST READ: 2 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை பெற்ற நடிகை ஸ்ரீதேவி மகள்! விலையை விடுங்க... இந்த கனெக்ஸன்தான் ஹைலைட்

டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...!

இதையடுத்து துணைநிலை ஆளுநரின் இந்த புகாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், முன்னதாக கிரண்பேடி இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஹெல்மட் அணியாமல் சென்ற புகைப்படத்தை முதலமைச்சர் நாராயணசாமி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும், "மற்றவரை குறை கூறுவதற்கு முன்னர் நீங்கள் அதனை கடைபிடியுங்கள்" என கூறியுள்ளார்.

MOST READ: புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக் அறிமுகம்... ராயல் என்ஃபீல்டுக்கு அடுத்த நெருக்கடி

டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...!

இதுபோன்று, புதுச்சேரி முதலைச்சர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு மோதல் ஏற்படுவது முதல் முறையல்ல. ஏற்கனவே பலமுறை இதுபோன்ற பல மோதல்கள் இவர்களுக்கிடையில் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இம்முறை டுவிட்டரில் காரசாரமான வாக்குவாதம் தொடங்கியுள்ளது.

டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...!

இதைத்தொடர்ந்து, அண்மையில் இந்தியா டுடே பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி,

"தேர்தல்கள் நடைபெறுகின்றன என்பதை கிரண் பேடி உணர வேண்டும். தேர்தல்கள் குறித்த நடத்தைகளை ஆராய்வதற்கான சரியான அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே தற்போது உண்டு. நேற்று (20ம் தேதி) பிரச்சாரத்திற்கான கடைசி நாள். ஆகையால் வாக்கு சேகரிக்க நாங்கள் பைக் ஊர்வலத்தில் புறப்பட்டோம். என்னுடன் தொண்டர்களும் வந்தனர். அப்போது, நான் ஹெல்மெட் அணிந்தால், முதலமைச்சர் வருகிறாரா..., இல்லையா..., என்பதை மக்கள் எப்படி உணர்வர். இதன்காரணமாகவே ஹெல்மட் தவிர்க்கப்பட்டது" என விளக்கமளித்தார்.

டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...!

மேலும் பேசிய அவர் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிமீது குற்றம் சுமத்தும் வகையில், "இந்த தகவலை டிஜிபி-க்கு ட்வீட் செய்வது மெட்ராஸ் ஐகோர்ட்டின் தீர்ப்பிற்கு எதிரானது என்பதை துணைநிலை ஆளநருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். சென்னை உயர்நீதி மன்றம், முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் போன்ற பிற அதிகாரிகள் சமூக வலைதளத்தை இதுபோன்று புகராளிக்க பயன்படுத்துவது தவறு என தெளிவாக கூறியிருப்பதாக" அவர் தெரிவித்தார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Puducherry Governor Accuses CM Not Wearing Helmet CM Hits Back. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X