வாகனங்கள் விற்பனை பட்டாசு கௌப்ப போகுது... காசு கொட்ட போகுது... ஜாலி மூடில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளன.

வாகனங்கள் விற்பனை பட்டாசு கௌப்ப போகுது... காசு கொட்ட போகுது... ஜாலி மூடில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல், முழு ஊரடங்கை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது. எனவே அன்றைய தினத்தில் இருந்து இந்தியா முழுவதுமாக முடங்கியது. இதனால் பாதிக்கப்பட்ட துறைகளில் ஆட்டோமொபைல் துறை முக்கியமானது.

வாகனங்கள் விற்பனை பட்டாசு கௌப்ப போகுது... காசு கொட்ட போகுது... ஜாலி மூடில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

மார்ச் 24ம் தேதியில் இருந்து இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் வாகன உற்பத்தி நடைபெறவில்லை. அத்துடன் டீலர்ஷிப்களும் தற்காலிகமாக இழுத்து மூடப்பட்டன. இதனால் வாகன விற்பனை அடியோடு முடங்கி போனது. இது ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது, அரசுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது.

வாகனங்கள் விற்பனை பட்டாசு கௌப்ப போகுது... காசு கொட்ட போகுது... ஜாலி மூடில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

ஆர்டிஓ அலுவலக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால், புதிய வாகனங்கள் விற்பனையின் மூலமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் முற்றிலுமாக தடைபட்டு போனது. ஆனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டதால், கடந்த மே 4ம் தேதியில் இருந்து இந்தியாவில் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை மீண்டும் தொடங்கியது.

வாகனங்கள் விற்பனை பட்டாசு கௌப்ப போகுது... காசு கொட்ட போகுது... ஜாலி மூடில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

இதன் காரணமாக ஆர்டிஓ அலுவலகங்களும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இதன்படி மஹாராஷ்டிரா மாநிலம் புனே மற்றும் பிம்ப்ரி சின்ச்வாத் ஆகிய போக்குவரத்து அலுவலகங்களில், கடந்த மே 18ம் தேதியில் இருந்து ஜூன் 8ம் தேதி வரை சுமார் 3,400 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வாகனங்கள் விற்பனை பட்டாசு கௌப்ப போகுது... காசு கொட்ட போகுது... ஜாலி மூடில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

புனே ஆர்டிஓ அலுவலக தரவுகளின்படி, கடந்த மே 18ம் தேதியில் இருந்து ஜூன் 8ம் தேதி வரை, 904 இரு சக்கர வாகனங்களும், 690 கார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர 58 ஆட்டோ ரிக்ஸாக்கள், 27 சரக்கு போக்குவரத்து வாகனங்கள் மற்றும் இதர வகையில் 5 வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 1,684 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வாகனங்கள் விற்பனை பட்டாசு கௌப்ப போகுது... காசு கொட்ட போகுது... ஜாலி மூடில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

அதே சமயம் பிம்ப்ரி சின்ச்வாத் ஆர்டிஓ அலுவலகத்தில், சுமார் 1,000 இரு சக்கர வாகனங்களும், 700 நான்கு சக்கர வாகனங்களும் என 1,700 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புனே, பிம்ப்ரி சின்ச்வாத் ஆர்டிஓ அலுவலகங்களில், 22 நாட்களில் ஒட்டுமொத்தமாக சுமார் 3,400 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வாகனங்கள் விற்பனை பட்டாசு கௌப்ப போகுது... காசு கொட்ட போகுது... ஜாலி மூடில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

பதிவு செய்யப்படும் புதிய வாகனங்களின் எண்ணிக்கை, வரும் நாட்களில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பஸ், ஆட்டோ மற்றும் டாக்ஸி உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களின் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய மக்கள் அஞ்சுகின்றனர்.

வாகனங்கள் விற்பனை பட்டாசு கௌப்ப போகுது... காசு கொட்ட போகுது... ஜாலி மூடில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

உண்மையில் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணித்தால், கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே கார், டூவீலர் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் பயணம் செய்வதைதான் பொதுமக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். இதன் காரணமாக வரும் மாதங்களில், புதிய வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாகனங்கள் விற்பனை பட்டாசு கௌப்ப போகுது... காசு கொட்ட போகுது... ஜாலி மூடில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இது மகிழ்ச்சி அளிக்க கூடிய விஷயம்தான். இதனால் தேவை உயரும் பட்சத்தில், வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. கொரோனா அச்சம் காரணமாக புதிய வாகனம் வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், அதனை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Monday, June 29, 2020, 18:25 [IST]
English summary
Pune: 3,400 New Vehicles Registered Within 22 Days. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+