இந்திய நிறுவனம் கண்டுப்பிடிச்ச கருவிக்கு அமெரிக்காவில் அங்கீகாரம் - நம்ம மத்திய அரசும் கொஞ்சம் கவனிக்கனும்!!
டிஜிட்டல் முறையில் தீர்வுகளை வழங்கும் புனேவை சேர்ந்த ஒரு தொழிற்கூடத்தின் கண்டுப்பிடிப்புக்கு அமெரிக்காவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த தொழில் நிறுவனம் அப்படி எத்தகைய கருவியை கண்டுப்பிடித்துள்ளது? அதன் பயன்கள் என்னென்ன? என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
புதிய புதிய தொழிற்நுட்ப கருவிகளை கண்டுப்பிடிப்பதில் இந்தியாவை விட அமெரிக்கா ஒரு படி மேல் உள்ளதை நாம் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். ஆனால் அத்தகைய அமெரிக்கா நாடே நம் நாட்டை சேர்ந்தவர்கள் கண்டுப்பிடித்த தொழிற்நுட்ப கருவிக்கு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது எனும்போது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இந்த புனே நிறுவனத்தின் பெயர் இண்டாங்கிள்ஸ் லேப் (Intangles Lab).

வாகனங்களில் எரிபொருள் டேங்கில் எரிபொருளின் அளவை அளக்க புதிய வழிமுறையையும், சென்சார்ஸ் உள்பட சில கருவிகள் அடங்கிய செட்-அப்பையும் இண்டாங்கிள்ஸ் கண்டுப்பிடித்துள்ளது. இந்த புதிய கண்டுப்பிடிப்பின் முக்கிய நோக்கம், வாகனத்தில் எரிபொருள் திருட்டை தவிர்ப்பது ஆகும். ஏற்கனவே கூறியதுபோல், சென்சார்ஸ் உடன் செயல்படும் இந்த தொழிற்நுட்பம் எரிபொருள் டேங்கில் இருக்கும் எரிபொருள் அளவை மிகவும் துல்லியமாக காட்டும்.
தற்போதைய காலத்தில் எந்த பெட்ரோல் & டீசல் நிலையத்தில் எரிபொருள் திருடப்படுகிறது என்பதை கண்டுப்பிடிப்பது கஷ்டமாக உள்ளது. 2 லிட்டர்கள் நிரப்ப சொன்னால், 1.97 அல்லது 1.98 லிட்டர்கள் நிரப்பிவிட்டு அனுப்பிவிடுவது. 20, 30 சென்டி லிட்டர்கள் தானே என நாம் பெரிதுப்படுத்துவது இல்லை. ஆனால் இதே 20 - 30 செ.லி எரிபொருளை பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் இருந்து எடுக்கும்போது அதுவே பெரிய தொகையாகி விடுகிறது.

இந்த தொழிற்நுட்பத்தின் மற்றொரு முக்கிய சிறப்பம்சம் எரிபொருள் டேங்கில் எரிபொருளை துல்லியமாக கண்டறிய கூடுதலாக எந்தவொரு சென்சார்ஸையும் கொண்டிருக்கவில்லை என்பதாகும். தற்போதைக்கு பெரிய, சிறிய லாரிகளில் மட்டுமே இண்டாங்கிள்ஸ் நிறுவனம் இந்த தொழிற்நுட்பத்தை பொருத்தி சோதித்துள்ளது. தற்போதைய சூழலில், இந்த தொழிற்நுட்பத்தின் உதவியுடன் மாதந்தோறும் 2 இலட்சத்திற்கும் அதிக லிட்டர்களில் எரிபொருள் திருட்டுகள் கண்டுப்படிக்கப்பட்டு வருகிறது.
வருடத்திற்கு மில்லியன் லிட்டர்களில் திருடப்படும் எரிபொருளை இந்த தொழிற்நுட்பத்தின் மூலமாக வாகன ஓட்டிகள் பெற முடியும். முக்கியமாக இதற்கும் சேர்த்து வசூலிக்கப்படும் தொகையை சேமிக்கலாம். இந்த தொழிற்நுட்ப கருவி குறித்து இண்டாங்கிள்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனரும், பகுப்பாய்வு பிரிவின் முதன்மை அதிகாரியுமான அமன் சிங் தனியார் ஊடக நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், "பெரிய பெரிய 40-டன் & 50-டன் லாரிகளின் மைலேஜ் 2 அல்லது 3kmpl தான்.

அப்போது நினைத்து பாருங்கள், எரிபொருள் திருட்டினால் பணம் எந்த அளவிற்கு வீணாகிறது என்று" என நம் அனைவரையும் சிந்திக்க வைத்தவுடன், இந்த பிரச்சனை உலகளவில் இருப்பதாகவும் உண்மையை போட்டு உடைத்துள்ளார். மேலும் பேசிய அமன் சிங், "காப்புரிமை பெற்ற தீர்வை வழங்கும் எங்களது கருவியை பொருத்துவதன் மூலம் நிரப்பப்பட்ட எரிபொருள் அளவை வாகன ஓட்டிகள் துல்லியமாக பெற முடியும்" என்றார்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
எரிபொருள் சிறு திருட்டு கண்காணிப்பு அமைப்பு என்ற பெயரில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள இந்த தொழிற்நுட்பத்தின் செயல்பாடு சிலருக்கு எளிமையானதாக தோன்றலாம். இது போன்றதான தொழிற்நுட்பங்களை இப்போதுதான் கண்டுப்பிடிக்கிறார்களா? என குழம்பிட வேண்டும். அமெரிக்க அரசாங்கமே தனது காப்புரிமையை வழங்கியுள்ளதால் நிச்சயமாக இந்த தொழிற்நுட்பத்தின் செயல்பாட்டில் தனி சிறப்பு இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications