ரயில்வே ஸ்டேஷன்ல இந்த விஷயத்தை மட்டும் செய்யாதீங்க! மீறி செஞ்சவருக்கு ஏற்பட்ட நிலைமைய பாத்தீங்களா?
புனே ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்றவர் கைதவறி கீழே விழுந்து மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ரயில் என்பது மிக அவசியமான போக்குவரத்து வாகனமாக இருக்கிறது. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணம் செய்து வருகிறார்கள். ரயில்களில் பயணம் செய்வது மிகவும் பாதுகாப்பானதாக ஒரு பக்கம் இருந்தாலும் அதே நேரத்தில் சில ஆபத்துகளும் அதில் இருக்கின்றன. பலர் இந்த ஆபத்தை உணராமல் ஆபத்தான விஷயங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இப்படியான ஆபத்தான விஷயங்களில் ஒன்று ஓடும் ரயிலில் ஏறுவது என்னதான் ரயில்வே நிர்வாகம் ஓடும் ரயிலில் யாரும் ஏற முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தினாலும், இன்றும் பலர் ஓடும் ரயிலில் ஏறும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். ஓடும் ரயிலில் ஏறும்போது சிறிது கை தவறினால் கூட விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இப்படியாக பலர் ஓடும் ரயிலில் ஏறி உயிரை இழந்து சம்பவங்களும் பல நடந்துள்ளன.
இப்படியாக ஓடும் ரயிலில் ஒருவர் ஏறி மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் புனே ரயில் நிலையத்தில் உதயன் எக்ஸ்பிரஸ் ரயில் பிளாட்ஃபாரத்தில் நின்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் பயணிகள் எல்லாம் ஏறி கொண்டு இருந்தார்கள். இந்த ரயில் புறப்பட தயாராகி அதற்கான சூழ்நிலைகள் எல்லாம் வழங்கப்பட்டது. ரயிலும் பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டது.

அப்பொழுது இறுதி நேரத்தில் வந்த பயணி ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயற்சி செய்து உள்ளார். அப்பொழுது அவர் ரயிலில் ஏற முயன்று கைவழுகி கீழே விழுந்துள்ளார். இதனால் அவரை ரயில் பிளாட்பாரத்தில் இழுத்துச் சென்றது. இதை அருகில் இருந்த ரயில்வே ஊழியர் சுதாரித்து கவனித்ததால் குறிப்பிட்ட நபரை உடனடியாக ரயில் பக்கத்தில் இருந்து வெளியே இழுத்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளார்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் அப்பகுதியில் இருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக ரயிலில் ஏற முயன்றவர், தவறி கீழே விழுந்து உயிரிழக்க வேண்டிய அபாயம் இருந்த நிலையில், அருகில் இருந்த ரயில்வே ஊழியரால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய ரயில்வே நிர்வாகத்தின் துணை பிரிவு சார்பில் எக்ஸ் தள பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பயணியின் உயிரை காப்பாற்றிய ரயில்வே ஊழியர் திகாம்பர் தேசாய் என்பவருக்கு பாராட்டு தெரிவித்து புனே ரயில் நிர்வாகம் இந்த பதிவை வெளியிட்டுள்ளது. மேலும் இப்படியாக யாரும் ஓடும் ரயிலில் ஏற முயற்சி செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பலர் இந்த வீடியோவை பகிர்ந்து யாரும் இனி ஓடும் ரயிலில் ஏற வேண்டாம் என விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள். இதனால் ஏற்படும் ஆபத்துக்கள் உயிரை பறிக்க கூட வாய்ப்பிருக்கிறது என்பதால் இதை யாரும் எக்காரணம் கொண்டும் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த அறிவுறுத்தலை ரயில்வே நிர்வாகம் நீண்ட ஆண்டுகளாக செய்து வருகிறது.
ரயிலில் தொடர்ந்து பயணிப்பவர்களுக்கு ரயிலில் உள்ள ஆபத்துக்கள் குறித்து அதிகம் தெரியும். இருந்தாலும் சிலர் இந்த ஆபத்தை உணராமல் இது போன்ற சாகசங்களிலும் அவசர நிலையில் ஓடும் ரயிலில் ஏற முயற்சிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றார்கள். இது அவர்களது உயிரை பறிப்பதற்கான பெரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இனி இதில் கவனமாக இருக்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரயில் நிலையங்களில் பல்வேறு ஆபத்தான விஷயங்களை பயணிகள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இது குறித்த விழிப்புணர்வை பயணிகள் மத்தியில் ரயில்வே நிர்வாகம் இன்னும் அதிகமாக ஏற்படுத்த வேண்டும். இது போன்ற சம்பவங்களை மக்களுக்கு வீடியோவாக காட்டினால் நிச்சயம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் என்பதற்காக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









