யாராவது பயன்படுத்திய அதே கார் மாடலை மீண்டும் வாங்குவாங்களா! இவரு வாங்கி இருக்காரு! தெய்வமாவே நினைச்சுட்டாரு!

டாடா ஹாரியர் (Tata Harrier) காரை பயன்படுத்திய நபர் மீண்டும் அதே கார் மாடலை வாங்கி இருக்கின்றனர். இவ்வாறு செய்வதற்கான காரணம் என்ன என்பதையும் அவர் வெளியுலகிற்கு தெரியப்படுத்தி இருக்கின்றார். எதற்காக அவர் ஏற்கனவே பயன்படுத்தி வந்த அதே கார் மாடலை மீண்டும் வாங்கினார் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் கவர்ச்சிகரமான கார் மாடலாக ஹாரியர் (Harrier) இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடலாகும். இப்போது சந்தையில் இதன் ஃபேஸ்லிஃப்ட் (புதுப்பிக்கப்பட்ட) வெர்ஷனே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

Harrier suv car

இந்த புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனையே அந்த நபர் வாங்கி இருக்கின்றார். அவர், புதுப்பிக்கப்பட்ட ஹாரியர் காரை வாங்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காக அந்த காரை அவர் வாங்கவில்லை. இதற்கு பின்னால் வேறொரு காரணம் இருக்கின்றது. சமீபத்தில் இவர் இதற்கு முன்னதாக வைத்திருந்த ஹாரியர் விபத்தைச் சந்தித்து இருக்கின்றது.

இந்த விபத்தில் கார் மீண்டும் பயன்படுத்த முடியாத அளவிற்கு மிக மோசமான சேதங்களுக்கு ஆளாகி இருக்கின்றது. இந்த நிலையிலேயே அதை புறம் தள்ளிவிட்டு புதிய வெர்ஷன் ஹாரியர் காரை பயன்பாட்டிற்காக அந்த நபர் வாங்கி இருக்கின்றார். விபத்தில் மிக மிக மோசமான சேதங்களைச் சந்தித்த போதிலும் ஹாரியர் எஸ்யூவி இரும்பு அரணாக இருந்து தன்னையும், தன் குடும்பத்தினரையும் காப்பாற்றியதாகக் கூறியே அந்த காரை அவர் மீண்டும் வாங்கி இருக்கின்றார்.

Harrier accident

ஆமாங்க, டாடா தயாரிப்புகள் அதிக பாதுகாப்பிற்கு பெயர்போனதாக உள்ளன. இதற்கு சான்றாக பல்வேறு டாடா கார் விபத்து சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. பெரும்பாலான விபத்துகளில் இந்த கார் பயணிகளை உயிரோடு மட்டுமல்ல சிறு காயங்கள்கூட இல்லாமலேயே மீட்டிருக்கின்றது. இதன் விளைவாகவே இந்தியர்கள் பலர் டாடா கார்களை அதிகம் விரும்பி வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையிலேயே பெரும் விபத்தில் தங்களை டாடா ஹாரியர் காப்பாற்றியதாகக் கூறி மீண்டும அதே கார் மாடலை வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றார். டாடா ஹாரியர் ஓர் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடல் ஆகும். பாரத் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்விலேயே இந்த உச்சபட்ச பாதுகாப்பு ரேட்டிங்கை அது பெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Harrier crashed

இத்தகைய திறனையே நிஜ விபத்து சம்பவத்திலும் செய்துக் காட்டி இருக்கின்றது டாடா ஹாரியர் கார். விபத்தைச் சந்தித்த டாடா ஹாரியர் மூன்று மாதங்கள் மட்டுமே ஆன புதிய கார் மாடல் ஆகும். மேலும், வெறும் 5 ஆயிரம் கிமீ தூரம் மட்டுமே அது பயணித்திருக்கின்றது.

இந்த நிலையிலேயே மாருதி சுஸுகி பிரெஸ்ஸா எஸ்யூவி காருடன் அது விபத்தைச் சந்தித்து இருக்கின்றது. இந்த விபத்தில் காரின் முன் மற்றும் பின் பக்கம் முழுவதும் உருக்குலைந்து போயிருக்கின்றது. இருப்பினும், அந்த காரில் இருந்து ஏர் பேக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் தக்க சமயத்தில் வேலையை செய்ததால் ஹாரியர் காரில் பயணித்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Harrier owner buys facelifted

அதேவேளையில், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரில் இருந்த பயணிகள் மிகுந்த ஆபத்தான சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த நிலையிலேயே ஹாரியர் கார் உரிமையாளர் மீண்டும் அதே கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வாங்க முடிவு செய்திருக்கின்றார்.

டாடா மோட்டார்ஸ் இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக 6 ஏர் பேக்குகள் மற்றும் ஏழு ஏர் பேக்குகள் ஆப்ஷனையும், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் அம்சத்தை ஸ்டாண்டர்டு அம்சமாகவும், இதுதவிர, 3 பாயிண்ட் சீல் பெல்ட், சீட் பெல்ட் ரிமைண்டர், ஐசோஃபிக்ஸ் ஆங்கர்கள், சீட் பெல்ட் ரெட்ரேக்டர், சீட் பெல்டை தானாக நெறுக்கும் அம்சம், லோடை லிமிட் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்ப்டடு இருக்கின்றன.

இதுபோன்று இன்னும் பல பாதுகாப்பு அம்சங்களை இந்த காரில் டாடா மோட்டார்ஸ் வழங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்து. அதுவே, விபத்துகளில் இருந்து உயிர்களைக் காத்துக் கொண்டிருக்கின்றது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த காரை ஒமெகாஆர்க் எனும் ஆர்கிடெக்சரைப் பயன்படுத்தியே ஹாரியர் காரை வடிவமைத்திருக்கின்றது. இந்த தளம் லேண்ட் ரோவரின் டி8 பிளாட்பாரத்தை தழுவி உருவாக்கப்பட்டு என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுவே ஹாரியர் காரை சொகுசானதாகவும், பாதுகாப்பு தரமிக்கதாகவும் தயாராக காரணமாக அமைந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பாதுகாப்பு தரம்மிக்க கார் மாடல்களில் ஒன்றாக டாடா ஹாரியர் இருக்கின்றது. இதனால்தான் இந்த காரை இந்தியர்கள் அதிகளவில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையிலேயே வாங்கிய நபர்களே மீண்டும் மீண்டும் இந்த காரை வாங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதும் தற்போது தெரிய வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, April 12, 2024, 15:41 [IST]
English summary
Pune man bought again harrier suv car after saving it from an accident
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X