சுங்க சாவடியில் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்தியவரிடம் ரூ.87,000 திருட்டு... எச்சரிக்கை..!!

எச்சரிக்கை: சுங்க சாவடியில் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்தியவரிடம் ரூ.87,000 திருட்டு..!!

By Azhagar

சுங்க சாவடியில் டெபிட் கார்ட் மூலம் கட்டணம் செலுத்தப்பட்ட சில மணி நேரங்களில், அதில் இருந்து ரூ.87 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் இந்தியளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுங்க சாவடியில் டெபிட் கார்டு பயனாளிகளிடம் நூதன திருட்டு..!!

மஹாராஷ்டிராவின் ஒரு பகுதியில் இருந்து பூனேவிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார் தர்ஷன் படேல். இடையில் கலாபூர் என்ற இடத்தில் சுங்க சாவடிக்காக கட்டணம் செலுத்த டெபிட் கார்டை பயன்படுத்தியுள்ளார்.

சுங்க சாவடியில் டெபிட் கார்டு பயனாளிகளிடம் நூதன திருட்டு..!!

ரூ.230 சுங்க கட்டணத்தை டெபிட் கார்டு மூலம் செலுத்தி விட்ட அவர் அங்கு இருந்து புறப்பட்டு மீண்டும் பூனேவை நோக்கி காரை ஓட்டி சென்றார்.

சுங்க சாவடியில் டெபிட் கார்டு பயனாளிகளிடம் நூதன திருட்டு..!!

இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு அவரது கைப்பேசியில் குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில் டெபிட் கார்டு மூலம் ரூ.20,000 எடுக்கப்பட்டதாக தகவல் வந்திருந்தது.

சுங்க சாவடியில் டெபிட் கார்டு பயனாளிகளிடம் நூதன திருட்டு..!!

இதை படித்து அதிர்ச்சியில் உறைந்த போன தர்ஷன் பட்டேலுக்கு தொடர்ந்து மேலும் 6 குறுந்தகவல்கள், அனைத்து பண பரிமாற்றம் சம்பந்தப்பட்ட தகவல்கள்.

சுங்க சாவடியில் டெபிட் கார்டு பயனாளிகளிடம் நூதன திருட்டு..!!

கலாபூர் சுங்கச் சாவடியில் மாலை 6.23 மணிக்கு பணம் செலுத்திய பிறகு, தர்ஷன் படேல் அந்த டெபிட் கார்டை எங்கும் பயன்படுத்த இல்லை.

ஆனால் அதே நாளில் இரவு 8.34 மணிக்குள் ரூ.87,000 வரை டெபிட் கார்டு மூலம் பயன்படுத்தியதாக தகவல்கள் வந்துள்ளன.

சுங்க சாவடியில் டெபிட் கார்டு பயனாளிகளிடம் நூதன திருட்டு..!!

அதிர்ச்சியில் மூழ்கிப்போன தர்ஷன் படேல், தனது வங்கி கிளையை அணுகி, இந்த சம்பவம் குறித்த அதிகாரிகளுக்கு தெரிவித்தார். அதை தொடர்ந்து இந்த மோசடி பற்றி காவல்நிலையத்தில் எழுத்துபூர்வமாக புகார் கொடுத்தார்.

சுங்க சாவடியில் டெபிட் கார்டு பயனாளிகளிடம் நூதன திருட்டு..!!

தர்ஷன் படேல் தனது புகாரில் "எனது டெபிட் கார்டு கடவு எண்ணை எப்போதும் நானே தான் பயன்படுத்துவேன். அதையும் தாண்டி என்னுடைய கடவு எண் திருடப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

சுங்க சாவடியில் டெபிட் கார்டு பயனாளிகளிடம் நூதன திருட்டு..!!

மேலும் அந்த புகாரில், கலாபூரில் படேல் சுங்க கட்டணம் செலுத்திய சாவடி, சாலையில் இருந்து கட்டணம் செலுத்தும் பகுதி சிறிது உயரமாக இருந்தள்ளது.

அந்த இடத்தின் மேல் சிசிடிவி கேமராவும் இருந்துள்ளது. அதன் மூலம் தனது கடவு எண் திருடப்பட்டு இருக்கலாம் என படேல் சந்தேகிக்கிறார்.

சுங்க சாவடியில் டெபிட் கார்டு பயனாளிகளிடம் நூதன திருட்டு..!!

செப்டம்பர் 9ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு 11ம் தேதி தான் பண பரிமாற்றம் குறித்த மின்னஞ்சல் வந்துள்ளது.

சுங்க சாவடியில் டெபிட் கார்டு பயனாளிகளிடம் நூதன திருட்டு..!!

இதற்கிடையில் கார்டு பயன்படுத்திய நாட்களில் எந்தவிதமான OTP கேட்டு குறுந்தகவல் வரவில்லை. அதனால் இந்த மோசடியில் OTP பயன்படுத்தப்பட்டு பண பரிமாற்றம் நடக்கவில்லை என்று தெரியவருகிறது.

சுங்க சாவடியில் டெபிட் கார்டு பயனாளிகளிடம் நூதன திருட்டு..!!

இந்த வழக்கை விசாரித்து வரும் பூனே நகர காவலர்கள், சம்பவம் நடைபெற்ற தினத்தில் சிசிடிவி மூலம் தான் கடவு எண் திருடப்பட்டு இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.

சுங்க சாவடியில் டெபிட் கார்டு பயனாளிகளிடம் நூதன திருட்டு..!!

இதுதவிர டெபிட் கார்டு கடவு எண்களை திருட ஸ்கிம்மிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற ரீதியிலும் இதற்கான விசாரணையை பூனே போலீசார் தொடங்கியுள்ளனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Pune Man Loses Rs 87000 After Swiping At Pune Mumbai Toll Plaza. Click for Details...
Story first published: Thursday, September 14, 2017, 11:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X