லிட்டர் ரூ120க்கு வித்தாலும் சரி இந்த ஊரு மக்கள் பெட்ரோல் காரை தான் விரும்பி வாங்குறாங்க... ஏன் தெரியுமா?

பெட்ரோல் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில் நாடு முழுவதும் சிஎன்ஜி, டீசல் கார்களுக்கான மவுசு அதிகமாகி வரும் நிலையில் குறிப்பிட்ட ஒரு நகரில் மட்டும் பெட்ரோல் கார்களை மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். இது குறித்து விரிவாகக் காணலாம்.

லிட்டர் ரூ120க்கு வித்தாலும் சரி இந்த ஊரு மக்கள் பெட்ரோல் காரை தான் விரும்பி வாங்குறாங்க . . . ஏன் தெரியுமா ?

இந்தியாவில் பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் எல்லாம் பெட்ரோல் போடுவதற்கே திண்டாடி வருகின்றனர். பலர் வாகனம் வாங்கும் போதே பெட்ரோல் விலை உயர்ந்ததால் டீசல், சிஎன்ஜி வாகனங்களை வாங்குவதை நாம் பார்த்திருப்போம். இதுமட்டுமல்ல சில எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதைக் கூட நாம் பார்த்திருப்போம்.

லிட்டர் ரூ120க்கு வித்தாலும் சரி இந்த ஊரு மக்கள் பெட்ரோல் காரை தான் விரும்பி வாங்குறாங்க . . . ஏன் தெரியுமா ?

ஆனால் இந்தியாவில் உள்ள ஒரு நகரத்தில் டீசல், சிஎன்ஜி, எலெக்ட்ரிக் கார்களை விட பெட்ரோல் கார்களை தான் மக்கள் விரும்புகிறார்கள் எனச் சொன்னால் நம்ப முடிகிறதா? பெட்ரோல் விலை உச்சத்தில் இருப்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் துணிந்து அந்த நகரில் உள்ள மக்கள் எல்லாம் பெட்ரோல் கார்களை தேர்வு செய்கிறார்கள்.

லிட்டர் ரூ120க்கு வித்தாலும் சரி இந்த ஊரு மக்கள் பெட்ரோல் காரை தான் விரும்பி வாங்குறாங்க . . . ஏன் தெரியுமா ?

இது எப்படி நடக்கும் அந்த நகரில் மட்டும் பெட்ரோல் விலை குறைவா? என நீங்கள் கேட்கலாம். அது தான் இல்லை. இது இந்தியாவில் உள்ள முக்கியமான பெரிய நகரம்தான் புனே நகரில் தான் மக்கள் பெட்ரோல் கார்களை விரும்பி வாங்குகின்றனர். நாடு முழுவதும் டீசல், சிஎன்ஜி கார்கள் தான் அதிகமாக விற்பனையாகும் நிலையில் புனேவில் பெட்ரோல்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளது.

லிட்டர் ரூ120க்கு வித்தாலும் சரி இந்த ஊரு மக்கள் பெட்ரோல் காரை தான் விரும்பி வாங்குறாங்க . . . ஏன் தெரியுமா ?

புனே போக்குவரத்து அலுவலகத்தில் இந்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 25ம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் தரவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி மொத்தம் 21,285 பெட்ரோல் வானங்கள் விற்பனையாகியுள்ளது. இதே காலகட்டத்தில் மொத்தம் 10,274 சிஎன்ஜி வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது.

லிட்டர் ரூ120க்கு வித்தாலும் சரி இந்த ஊரு மக்கள் பெட்ரோல் காரை தான் விரும்பி வாங்குறாங்க . . . ஏன் தெரியுமா ?

டீசல் வாகனங்களைப் பொருத்தவரை மொத்தம் 7574 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. எலெக்ட்ரிக் கார்களை பொருத்தவரை மொத்தம் 1164 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகியுள்ளது. கார்கள் மட்டுமல்ல டூவீலர்களிலும் இதே டிரெண்டே நீடிக்கிறது. மொத்தம் 78,591 பெட்ரோல் பைக்குகள் பதிவாகியுள்ளது. 11681 எலெக்ட்ரிக் பைக்குகள் பதிவாகியுள்ளது.

லிட்டர் ரூ120க்கு வித்தாலும் சரி இந்த ஊரு மக்கள் பெட்ரோல் காரை தான் விரும்பி வாங்குறாங்க . . . ஏன் தெரியுமா ?

இதில் இருசக்கர வாகன தரவு நாடு முழுவதும் உள்ள டிரெண்ட் தான் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தற்போது தான் டிரெண்டாகி வருவதால் விற்பனை மெல்லமெல்லவே அதிகமாகியுள்ளது. ஆனால் கார்களின் டிரெண்ட் வித்தியாசமாக உள்ளது. அதிகமாக சிஎன்ஜி, டீசல் கார்கள் பதிவாகும் நிலையில் இங்கு நேர்மாறாக பெட்ரோல் கார்கள் அதிகம் பதிவாகியுள்ளது.

லிட்டர் ரூ120க்கு வித்தாலும் சரி இந்த ஊரு மக்கள் பெட்ரோல் காரை தான் விரும்பி வாங்குறாங்க . . . ஏன் தெரியுமா ?

இது குறித்து விசாரித்த போது கொரோனாவிற்கு பிறகு மக்கள் பலர் தங்களுக்கு எனச் சொந்தமாக கார் ஒன்று வேண்டும் என நினைக்கத் துவங்கிவிட்டனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் அவசரத்திற்கு ஊர்விட்டு ஊர் செல்ல முடியாமல் தவித்தபோது கார் வாங்கியிருக்கலாம் என்ற எண்ணம் பலருக்கு வருகிறது. இதனால் முதல் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.

லிட்டர் ரூ120க்கு வித்தாலும் சரி இந்த ஊரு மக்கள் பெட்ரோல் காரை தான் விரும்பி வாங்குறாங்க . . . ஏன் தெரியுமா ?

இவர்கள் கார்களை தேர்வு செய்யும் போது பெட்ரோல், டீசல், சிஎன்ஜி, எலெக்ட்ரிக் ஆகிய வாகனங்களை ஒப்பீடு செய்கின்றனர். அதில் ஒவ்வொரு வாகனத்திற்கும் அதன் விலை, பராமரிப்பு செலவு, எரிபொருள் செலவுகளை ஒப்பீடு செய்கின்றனர். இன்று பெட்ரோல், டீசல், சிஎன்ஜிகளின் விலையில் பெரிய அளவில் மாறுதல் இல்லை என்பதால் ஒப்பீட்டில் பெட்ரோல் வாகனங்களுக்கே செலவு குறைவு என்ற முடிவிற்கு வருகின்றனர்.

லிட்டர் ரூ120க்கு வித்தாலும் சரி இந்த ஊரு மக்கள் பெட்ரோல் காரை தான் விரும்பி வாங்குறாங்க . . . ஏன் தெரியுமா ?

இதனால் மக்கள் பெட்ரோல் விலை உச்சத்திலிருந்தாலும் அந்த ரக வாகனங்களையே விரும்பி வாங்குகின்றனர். இதனால் கடந்த 8 மாதங்களில் புனேவில் பதிவான வாகனங்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது சிஎன்ஜிவாகனங்கைள விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாக பெட்ரோல் வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. பெட்ரோல்விலையை விட டீசல் மற்றும் சிஎன்ஜின ஆகியவற்றின் விலையேற்றம் தான் இதற்குக் காரணம்.

லிட்டர் ரூ120க்கு வித்தாலும் சரி இந்த ஊரு மக்கள் பெட்ரோல் காரை தான் விரும்பி வாங்குறாங்க . . . ஏன் தெரியுமா ?

பெட்ரோல் விலையைப் பொருத்தவரை கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு விலை விண்ணைத் தொட்டு வருகிறது. அரசு வரிகளைக் குறைத்தாலும் பெட்ரோல் விலையில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் பல மடங்கு ஏறிவிட்டது. நீங்கள் கார் வைத்திருக்கிறீர்களா பெட்ரோல் காரா? டீசல் காரா? ஏன் அந்த காரை வாங்கினீர்கள் உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்

Article Published On: Wednesday, August 31, 2022, 12:43 [IST]
English summary
Pune people choose petrol cars over diesel CNG and electric know why
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+