ஒரே பாலத்தில் வரிசையாக 48 வாகனங்கள் விபத்து... சிறிய தவறால் ஏற்பட்ட கோரச் சம்பவம்! இதற்கெல்லாம் காரணம்
புனேவில் நிகழ்ந்த விபத்தில் டேங்கர் லாரியில் பிரேக் ஃபெயிலியர் ஆனதால் ஒரே பாலத்தின் சென்ற 48 வாகனங்கள் விபத்தில் சிக்கியது. இதில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
நேற்று (டிச.20ம் தேதி) தேதி இரவு புனே, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை முழுவதும் கடும் போக்குவரத்து நெருக்கடியாகக் காணப்பட்டது. இந்த சாலையில் உள்ள நேவல் பாலம் அருகே டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

நேவல் பாலம் என்பது புனே எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ளது. இந்த டேங்கர் லாரி பாலத்தின் பயணித்துக்கொண்டிருந்தது. இந்நேரம் யாரும் எதிர்பாராத வகையில் இந்த லாரியின் பிரேக் ஃபெயிலியர் ஆனது. இதனால் இந்த லாரி வாகனங்கள் மீது மோதத் துவங்கியது. பாலம் செங்குத்தான இறக்கமாக இருந்ததால் உடனடியாக விபத்தைத் தடுக்க முடியவில்லை. புவி ஈர்ப்பு விசையில் லாரி அடுத்தடுத்த வாகனம் மீது மோதுவது, லாரி மோதிய இம்பேக்டில் அந்த வாகனம் அடுத்த வாகனம் மீது மோதுவது என இந்த விபத்தில் மொத்தம் 48 வாகனங்கள் சேதமடைந்தனர்.
இந்த விபத்தில் 30 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். 15 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்குச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் புனே ஃபயர் பிரிகேட் குழுவினர் மற்றும் புனே மெட்ரோபொலிடன் ரீஜியன் டெவலப்மெண்ட் அத்தாரி ஆகிய அமைப்பினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்து காரணமாக அந்த சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதிகாரிகள் வந்து வாகனங்கள் சாலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த விபத்தில் பெரும்பாலும் புதிய ரக கார்களே சிக்கியதால் அந்த கார்களில்எல்லாம் விபத்து நிகழ்ந்ததும் ஏர் பேக் திறந்துவிட்டதால் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டது. இந்த நேவல் பாலம் அதிகமான விபத்து நடக்கும் இடமாக இருக்கிறது. இந்த இடத்தில் கடந்த வாரம் கூட இதே போல ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து ஒரு பெண் மீது மோதியதில் அந்த பெண் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்த பாலம் மிகவும் செங்குத்தாக இருப்பதால் வாகனங்கள் பல நேரங்களில் இந்த பாலத்தில் கட்டுப்பாட்டை இழப்பதாகக் கூறப்படுகிறது. இந்த பகுதியில் அதிக விபத்து நடப்பதற்கு இதான் முக்கியமான காரணமாகக் கூறப்படுகிறது. இந்த மாதிரியான பிரச்சனைகளைத் தவிர்க்க நாம் வாகனங்களைச் சரியாகப் பராமரிக்க வேண்டும். விபத்து ஏற்படக் காரணமாக இருந்த லாரியில் பிரேக் ஃபெயிலியர் ஏற்பட்டதே இந்த விபத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இதனால் நீங்கள் உங்கள் வாகனத்தின் பிரேக்கை குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு செய்யுங்கள். அதே போல இறக்கமான பகுதிகளில் பயணிக்கும் போது வாகனத்தை நியூட்டரிலில் போட்டு இறக்காதீர்கள். வாகனத்தை கியரிலேயே இயங்குங்கள். இந்த சம்பவம் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








