போலீஸ் உங்கள் நண்பன் என்பதை தப்பா புரிஞ்சிக்கிட்டார் போல!! ஹெல்மெட் அணியாததால் இணையத்தில் வைரலான வாகன ஓட்டி...

ஹெல்மெட் அணியுங்கள்... ஹெல்மெட் அணியுங்கள் என்று நாடு முழுவதும் போலீஸார் கடந்த பல வருடங்களாக கூக்குரலிட்டு வருகின்றனர். அத்துடன் அபராதங்கள் விதிப்பதற்கும் அவர்கள் மறப்பதில்லை. சமீபத்தில் நமது சென்னையில் கூட 2-வீலர்களில் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் எனவும், லிஃப்ட் கொடுப்பவர்கள் அவர்களுக்கும் ஹெல்மெட்டை கொடுக்க வேண்டும் அல்லது அவர்களுக்கும் சேர்த்து அபராதம் விதிக்கப்படும் எனவும் சில கடுமையான விதிமுறைகளை கொண்டுவந்தது.

இதன் விளைவாக ஹெல்மெட் அணிந்து பயணம் செய்யும் இருசக்கர வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை சமீப காலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. என்றாலும், ஹெல்மெட்டை புறக்கணிப்பவர்கள் இப்போதும் இருக்க தான் செய்கின்றனர். அத்தகைய விதி மீறுபவர்களை அடையாளம் காணவே ஒவ்வொரு சிக்னலுக்கும் சிசிடிவி கேமிராக்களை போலீஸார் பொருத்தியுள்ளனர். இந்த கேமிராக்கள் போக்குவரத்து போலீஸாரின் வேலையை மிகவும் எளியதாக்கி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

போலீஸ் உங்கள் நண்பன் என்பதை தப்பா புரிஞ்சிக்கிட்டார் போல!!

ஹெல்மெட் அணியாதது மட்டுமின்றி, அதிவேகமாக பயணம் செய்வது, நோ எண்ட்ரியில் நுழைவது உள்பட சாலை போக்குவரத்து விதிகளை மீறிவோரை அடையாளம் காணுவதற்கு பயன்படுத்தப்படுகின்ற இந்த கேமிராக்கள் மூலமாக வாகன ஓட்டிகளுடன் எந்தவொரு நேரடி தொடர்புமின்றி, நேரடியாக மெயிலின் மூலமாக அபராத செல்லானை போலீஸார் அனுப்பி விடுகின்றனர். அதாவது போலீஸாரின் இந்த நடவடிக்கை மற்றும் அபராத பண பரிவர்த்தனை அனைத்தும் இணையத்திலேயே நடந்து முடிந்துவிடுகின்றன.

சில விதிமீறல்களை, மற்றவர்களும் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதற்காக சமூக வலைத்தளங்களிலும் சில நேரங்களில் போலீஸார் பதிவிடுகின்றன. இவ்வாறு பதிவிடப்படும் பதிவுகள் சுவாரஸ்யமான விஷயங்களால் சில சமயங்களில் வைரலாகி உள்ள நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. சமீபத்தில் கூட ஹெல்மெட் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டியின் பைக்கை மட்டும் ஸூம் செய்து போலீஸார் சமூக வலைத்தளங்களில் பதிவிட, அதனை கண்ட சம்மந்தப்பட்ட வாகன ஓட்டி "முகத்தை காட்டவில்லையே... நான் ஹெல்மெட் அணியவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்?" என திருப்பி கேள்வி எழுப்பினார்.

அதற்கு உடனே அந்த போலீஸார் ஹெல்மெட் அணியாத அவரது முழு படத்தையும் வெளியிட, அந்த நிகழ்வு அந்த சமயத்தில் இணையத்தில் வைரலானது. அதேபோன்று தான் தற்போது புனேவில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ராயல் என்பீல்டு பைக்கில் சென்ற ஓர் வாகன ஓட்டி ஹெல்மெட் அணியாமல் இருந்துள்ளார். கேமிரா மூலம் அவரை அடையாளம் கண்ட போலீஸார் வழக்கம்போல் அபராத செல்லானை அனுப்பி வைத்துள்ளனர். அதனை கண்ட மெல்வீன் செரியன் என பெயர் கொண்ட அந்த வாகன ஓட்டி டுவிட்டரில் புனே போலீஸாரை டேக் செய்து நன்றி தெரிவித்து ஓர் பதிவு போட்டுள்ளார்.

போலீஸ் உங்கள் நண்பன் என்பதை தப்பா புரிஞ்சிக்கிட்டார் போல!!

நன்றி எதற்கென்றால்... போலீஸார் அனுப்பிய சிசிடிவி கேமிரா படத்தில் தான் அழகாக தெரிவதாக மெல்வீன் செரியன் குறிப்பிட்டுள்ளார். மேலும், அபராத தொகையை செலுத்துவதாகவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இந்த டுவிட்டர் பதிவினை பின்னர் கண்ட புனே போலீஸார் மெல்வீனின் நன்றியை ஏற்று கொண்டதுடன், "நீங்கள் அணிந்திருக்கும் கருப்பு நிற ஜாக்கெட்டிற்கு கருப்பு நிற ஹெல்மெட் சூப்பராக இருக்கும்" என்று தங்களது பரிந்துரையையும் தெரிவித்துள்ளனர்.

புனே போலீஸாரின் இந்த பதிவிற்கு பின்னர் பதிலளித்த மெல்வீன் செரியன் ரூ.500 அபராதம் செலுத்தப்பட்டதை தெரியப்படுத்தும் படத்துடன், நீங்கள் பரிந்துரைத்தது போல் சிறப்பான கருப்பு நிற ஹெல்மெட் ஒன்றை வாங்குவேன் என்று உறுதியளிக்கிறேன் என கூறியுள்ளார். அத்துடன், சமூக வலைத்தளங்கள் என்னை பிரபலமாக்கி உள்ளன என்றும், உடற்பயிற்சி ஆலோசகரான தன்னை நேற்றில் இருந்து மட்டும் 5-6 வாடிக்கையாளர்கள் இந்த பதிவுகளின் வாயிலாக சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மெல்வீன் செரியன் & புனே போலீஸார் இடையேயான இந்த உரையாடலுக்கு நெட்டிசன்கள் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, பலர், "அழகிற்காக பார்க்காதீர்கள்... ஹெல்மெட் என்பது உயிர் கவசம்" என தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆகையால் சாலை விதிகளை மீறி இவ்வாறு அபராதங்களை செலுத்துவதற்கு பதிலாக, சாலை விதிகளை முறையாக பின்பற்றுவது சிறந்தது. அதையே போலீஸாரும், அரசாங்கமும் வேண்டுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Pune police conversation with man on twitter goes viral
Story first published: Friday, December 9, 2022, 15:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X