இப்படிலாம் பண்ணா ஏன் கொரோனா வராது... புனேவில் நடைபெற்றுள்ள அதிர்ச்சிகர சம்பவம்!!

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் சிக்கி சின்னாபின்னமாகி வரும் மாநிலங்களுள் மஹாராஷ்டிராவும் ஒன்று. இருப்பினும் இப்போதும் அந்த மாநிலத்தில் பலர் கொரோனா தடுப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றுவதில்லை.

இப்படிலாம் பண்ணா ஏன் கொரோனா வராது... புனேவில் நடைபெற்றுள்ள அதிர்ச்சிகர சம்பவம்!!

இதற்கு ஒரு எடுத்துக்காட்டே குற்றவாளியின் இந்த இறுதி ஊர்வலமாகும். மஹாராஷ்டிராவின் முக்கிய நகரங்களுள் ஒன்றான புனேவில் நடைபெற்றுள்ள இந்த இறுதி ஊர்வலத்தில் சுமார் 200 பேர், 125 மோட்டார்சைக்கிள்களுடன் கலந்து கொண்டுள்ளனர்.

இது தொடர்பான வீடியோவினை தான் மேலே பார்க்கிறீர்கள். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியதை அடுத்து, போலீஸார் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இப்படிலாம் பண்ணா ஏன் கொரோனா வராது... புனேவில் நடைபெற்றுள்ள அதிர்ச்சிகர சம்பவம்!!

இதற்காக போலீஸார் 15 குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையில் மொத்தம் 80 பேர் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் துணை கமிஷ்னர் சாகர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

இப்படிலாம் பண்ணா ஏன் கொரோனா வராது... புனேவில் நடைபெற்றுள்ள அதிர்ச்சிகர சம்பவம்!!

கொலை செய்யப்பட்ட 28 வயதான மாதவ் வாகடே என்ற குற்றாளியின் இறுதி ஊர்வலத்தில் தான் இத்தனை பேர் கலந்து கொண்டுள்ளனர் என போலீஸார் தெரிவித்துள்ளனர். மாதவ் வாகடே கடந்த மே 15ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இப்படிலாம் பண்ணா ஏன் கொரோனா வராது... புனேவில் நடைபெற்றுள்ள அதிர்ச்சிகர சம்பவம்!!

அதன்பின் மாதவ்வின் இறுதி ஊர்வலம் மதியம் 1 மணியளவில் நடைபெற்றுள்ளது. புனேவில் தங்காவாடியில் துவங்கிய இந்த ஊர்வலம் கட்ராஜ் கல்லறையில் நிறைவு பெற்றுள்ளது. அனுமதியின்றி இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட மொத்த 200 பேர்களில் 150 பேர் மீது சாகாகர் நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படிலாம் பண்ணா ஏன் கொரோனா வராது... புனேவில் நடைபெற்றுள்ள அதிர்ச்சிகர சம்பவம்!!

புனேவில் ஊரடங்கு உத்தரவுகள் கடந்த சில வாரங்களாக அமலில் உள்ளன. இருப்பினும் மக்களின் இவ்வாறான செயல்களினால் தொடர்ந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரவே, ஊரடங்கை ஜூன் 1ஆம் தேதி வரையில் நீட்டித்து கொள்வதாக மஹாராஷ்டிரா அரசாங்கம் சமீபத்தில் அறிவித்திருந்தது.

இப்படிலாம் பண்ணா ஏன் கொரோனா வராது... புனேவில் நடைபெற்றுள்ள அதிர்ச்சிகர சம்பவம்!!

இதனால் இந்த மாநிலத்திற்குள் நுழைவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மிகவும் முக்கியமானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடைகள் காலை 7 மணியில் இருந்து மதியம் 11 மணி வரையில் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இப்படிலாம் பண்ணா ஏன் கொரோனா வராது... புனேவில் நடைபெற்றுள்ள அதிர்ச்சிகர சம்பவம்!!

உணவு பொருட்களை டெலிவிரி செய்வது இரவு 8 மணி வரையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. பேருந்து, டாக்ஸி மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா 50 சதவீத பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் பயணம் செய்பவர்கள் பயணத்திற்கான சரியான காரணத்தை வைத்திருக்க வேண்டும்.

இப்படிலாம் பண்ணா ஏன் கொரோனா வராது... புனேவில் நடைபெற்றுள்ள அதிர்ச்சிகர சம்பவம்!!

பொது வாகனங்களில் மட்டுமின்றி சொந்த வாகனங்களில் செல்வோரும் கட்டாயம் நியாயமான காரணத்திற்காகவே பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அரசாங்கங்கள் கடுமையான சட்டங்களை கொண்டுவந்து கொண்டிருக்கும் நேரத்தில், பெரும்பான்மையானவர்கள் முக மூடி கூட அணியாமல் இந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Pune Police seizes 40 vehicles, arrests 80 for participating in a criminal’s funeral bike rally [Video].
Story first published: Monday, May 17, 2021, 19:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X