போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளை பிடிக்க வீடு தேடி வரும் போலீசார்.. வாசலில் அரங்கேறும் அசிங்கம்

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை பிடிப்பதற்காக, அவர்களின் வீடுகளுக்கே போலீசார் நேரடியாக வர தொடங்கியுள்ளனர். இந்த அதிரடியான நடவடிக்கை குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 2016-17ம் நிதியாண்டில் 30,47,582 உள்நாட்டு பயணிகளும் வாகனங்களும், 2017-18ம் நிதியாண்டில் 32,87,965 உள்நாட்டு பயணிகள் வாகனங்களும் விற்பனையாகியிருப்பதே அதற்கு சாட்சி.

போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளை பிடிக்க வீடு தேடி வரும் போலீசார்.. வாசலில் அரங்கேறும் அசிங்கம்

இதில் துரதிருஷ்டவசமான விஷயம் என்னவென்றால், பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் சராசரியாக ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களின் காரணமாக உயிரிழக்கின்றனர்.

போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளை பிடிக்க வீடு தேடி வரும் போலீசார்.. வாசலில் அரங்கேறும் அசிங்கம்

அதிக அளவிலான உயிர்களை, சாலை விபத்துக்களில் பரிதாபமாக பறிகொடுக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதுதவிர பல லட்சக்கணக்கானோர் விபத்துக்களினால் படுகாயம் அடைகின்றனர். எனவே சாலை விபத்துக்களை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளை பிடிக்க வீடு தேடி வரும் போலீசார்.. வாசலில் அரங்கேறும் அசிங்கம்

ஆனாலும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தகுந்த அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா? என்பது கேள்விக்குறியே. வாகன ஓட்டிகள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும், விபத்துக்களின் எண்ணிக்கை சொல்லிக்கொள்ளும்படி குறைந்தபாடில்லை.

போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளை பிடிக்க வீடு தேடி வரும் போலீசார்.. வாசலில் அரங்கேறும் அசிங்கம்

குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசி கொண்டே வாகனம் ஓட்டுவது என போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே சாலை விபத்துக்களின் எண்ணிக்கை மற்றும் சாலை விபத்துக்களின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க மிக முக்கிய காரணமாக உள்ளது.

போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளை பிடிக்க வீடு தேடி வரும் போலீசார்.. வாசலில் அரங்கேறும் அசிங்கம்

சட்ட புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போக்குவரத்து விதிமுறைகளை பெரும்பாலான வாகன ஓட்டிகள் கடைபிடிப்பதே இல்லை. எதனையும் பொருட்படுத்தாமல் மிக எளிதாக போக்குவரத்து விதிமுறைகளை அவர்கள் மீறுகின்றனர்.

போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளை பிடிக்க வீடு தேடி வரும் போலீசார்.. வாசலில் அரங்கேறும் அசிங்கம்

எனவே விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்காணிக்க, முக்கியமான நகரங்களில் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளை பிடிக்க வீடு தேடி வரும் போலீசார்.. வாசலில் அரங்கேறும் அசிங்கம்

இந்த கேமரா கண்களில் சிக்கும் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு, போலீசார் விதித்து வருகின்றனர். ஆனாலும் குறிப்பிட்ட காலத்திற்குள்ளாக அபராத தொகையை கட்ட சில வாகன ஓட்டிகள் தவறி விடுகின்றனர்.

போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளை பிடிக்க வீடு தேடி வரும் போலீசார்.. வாசலில் அரங்கேறும் அசிங்கம்

எனவே அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று ஸ்பாட்டிலேயே அபராத தொகையை வசூலிக்கும் அதிரடி நடவடிக்கையை போலீசார் எடுக்க தொடங்கியுள்ளனர். அபராத தொகையை வசூலிப்பதற்கு வசதியாக பிஓஎஸ் இயந்திரங்களையும் போலீசார் எடுத்து செல்கின்றனர்.

போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளை பிடிக்க வீடு தேடி வரும் போலீசார்.. வாசலில் அரங்கேறும் அசிங்கம்

ஒருவேளை அபராத தொகையை ஏற்கனவே செலுத்தியிருந்தால், அதற்கான ரசீதை போலீசாரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியின் வீட்டு வாசலில் நின்று, கண்டிப்பாக போலீசார் அபராத தொகையை வசூலிப்பார்கள்.

போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளை பிடிக்க வீடு தேடி வரும் போலீசார்.. வாசலில் அரங்கேறும் அசிங்கம்

இந்த நடவடிக்கையின் மூலமாக, சாலை விதிமுறைகளை வாகன ஓட்டிகள் பின்பற்ற தொடங்குவார்கள் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனவே விபத்துக்களின் எண்ணிக்கையும், விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்படும் என்பது போலீசாரின் நம்பிக்கை.

போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளை பிடிக்க வீடு தேடி வரும் போலீசார்.. வாசலில் அரங்கேறும் அசிங்கம்

வீட்டிற்கே வந்து அபராதம் வசூலிக்கும் அதிரடி நடவடிக்கையை புனே போலீசார்தான் தற்போது எடுக்க தொடங்கியுள்ளனர். இதுதவிர போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளின் பெயர்களை சமூக வலை தளங்களிலும் போலீசார் வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மராஸ்ஸோ காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட்
English summary
Pune Police Visits Traffic Offenders Home and Collects Fine. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X