கால் போயிடுச்சே, இப்போ திரும்ப வருமா!! மஹிந்திரா காரிலா இப்படியெல்லாம் நடக்கனும்... உண்மையான காரணம் என்ன?

மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio-N) காரில் சென்றுக் கொண்டிருந்த போது நடந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக தனது ஒரு பக்க காலை இழந்துள்ளார். இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனம் இதுகுறித்த தனது அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை விபத்துகள் தினந்தோறும் நூற்றுக்கணக்கில் நடைபெறுகின்றன. நாட்டில், எதாவது ஒரு மூலையில் ஒரு சாலை விபத்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதன் காரணமாகவே, நிறைய உயிரிழப்புகள் நிகழ்வதற்கு முக்கியமான காரணங்களுள் ஒன்றாக சாலை விபத்துகள் உள்ளன. விபத்தில் இருந்து உயிர் பிழைத்தாலும், பலரது வாழ்க்கை அதன்பின் மொத்தமாக மாறியுள்ளது.

pune incident mahindra official statement

அதாவது, அந்த அளவிற்கு விபத்தில் படுகாயத்தை பாதிக்கப் படுவர்கள் அடைகின்றனர். அவ்வாறு, புனேவில் சமீபத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரில் விபத்தில் சிக்கிய ஒருவரது கால் துண்டாகி உள்ளது. ஆரம்ப கட்ட விசாரணையில், இந்த விபத்திற்கு காரணம் மெக்கானிக்கல் ஃபெயிலியர் என கூறப்பட்டது.

சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதியதினால் இந்த விபத்து நடந்துள்ளது. தடுப்பு சுவரில் மோதிய வேகத்தில், காரின் முன்பக்கம் முற்றிலுமாக பலத்த சேதமடைந்துள்ளது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், அவ்வளவு பெரிய டிஸ்க் பிரேக் உடன் முன் சக்கரங்கள் அப்பளம் போல் நசுங்கிப்போய் உள்ளன.

pune incident mahindra official statement

இதில் இருந்து விபத்தின்போது கார் எவ்வளவு வேகமாக தடுப்பு சுவரில் மோதியுள்ளது என்பதை அறிய முடிகிறது. இந்த விபத்தில் ஒரு பக்க காலை இழந்துள்ள நபர் சம்பவத்தின்போது காரை ஓட்டிக் கொண்டுவந்துள்ளார். மேலும், இவர்தான் இந்த ஸ்கார்பியோ-என் காருக்கு உரிமையாளரும் கூட. விசித்திரமான வகையில், விபத்து நடந்து 6 மணிநேரத்திற்கு பிறகு கார் தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரிந்துள்ளது.

இந்த நிலையில், இந்த விபத்து குறித்து மஹிந்திரா தனது அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், தாங்கள் எப்போதும் பயணிகளின் பாதுகாப்பிற்கு கூடுதல் முக்கியத்துவம் தருகிறோம் என கூறியுள்ள மஹிந்திரா, இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்திற்கு பிறகு கடந்த 1 மாத காலத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் உடன் தொடர்பில் இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளது.

pune incident mahindra official statement

அவருக்கு தேவையான உதவிகளை செய்வதோடு, விசாரணைகளுக்கும் எந்தவொரு ஒளிவு மறைவின்றி பதில் அளித்து வருகிறோம் எனவும் கூறியுள்ள மஹிந்திரா, காரில் பொருத்தப்பட்டு இருந்த சர்வர் டேடாவை ஆராய்ந்து, விபத்தின்போது கார் மணிக்கு 105கிமீ வேகத்தில் இருந்து 122கிமீ வேகத்தில் இயங்கிக் இருக்கும் என அதிவேகத்தை இந்த விபத்துக்கு முக்கிய காரணமாக கூறியுள்ளது.

120kmph வேகத்தில் இயங்கும் ஸ்கார்பியோ-என் கார் ஏதேனும் ஒரு பொருள் மீது மோதினால், சுமார் 1350 கிலோ ஜூல் ஆற்றலில் மோதலை ஏற்படுத்தும் என புள்ளி விபரங்கள் உடன் மஹிந்திரா எடுத்துரைத்துள்ளது. மோதலின்போது உருவாகும் விசையை தடுக்க, ஸ்டீல் பாதுகாப்பன்கள் காரில் பொருத்தப்படுவதாகவும், ஆனால் இந்த கார் அதிவேகமாக மோதியதால் முன் சக்கர ஜாயிண்ட்கள் உடைந்துள்ளதாகவும் மஹிந்திரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

pune incident mahindra official statement

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விபத்து நடந்து 1 மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது. ஆரம்பத்தில், காரில் ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறினால் இந்த விபத்து நடந்ததாக நம்பப்பட்டது. ஆனால், தற்போது மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் பல்வேறு சோதனைகளையும், விசாரணைகளையும் நடத்தி இந்த விபத்துக்கு காரில் ஏற்பட்ட எந்த பிரச்சனையும் காரணமில்லை என்பதை தெரிவித்தத்தோடு, அதிவேக பயணமே காரணம் என தெளிவுப்படுத்தி உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 30, 2023, 13:37 [IST]
English summary
Pune scorpio n car accident mahindra released official statement
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X