ரோட்டில் போகும் ஒவ்வொருத்தரும் ஒரு நிமிஷம் நின்னு பார்த்துட்டு போறாங்க! கார் ஷோரூம்ஸ் பின்பற்றும் அதே டெக்னிக்
மஹிந்திரா (Mahindra) கார்களில் பிரபலமானவைகளில் ஒன்று, ஸ்கார்பியோ (Scorpio) என சொன்னால் அது மிகையில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக மார்க்கெட்டில் விற்பனையில் இருக்கும் இந்த மஹிந்திரா எஸ்யூவி காரை இலட்சக்கணக்கிலான மக்கள் வாங்கியுள்ளனர்; தொடர்ந்து வாங்கியும் வருகின்றனர். அந்த வகையில், ஸ்கார்பியோ காரை வாங்கி பயன்படுத்தி வரும் நபர் ஒருவர், அந்த காருக்கு தான் புதியதாக கட்டிய வீட்டின் மேல் தளத்தில் தனியாக ஒரு அறை ஒதுக்கி பார்க் செய்து நிறுத்தி இருப்பது பார்ப்போரை கவர்ந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் கடந்த காலங்களில் இருந்து பல விதங்களில் பரிணாம வளர்ச்சியை கண்டுள்ளன. அந்த வகையில், கடந்த 2022ஆம் ஆண்டில் ஸ்கார்பியோ-என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் (Classic) என இரு வெர்சன்களில் ஸ்கார்பியோ கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் ஸ்கார்பியோ-என் ஆனது அடுத்த தலைமுறைக்கான ஸ்கார்பியோ காராக அட்வான்ஸான தோற்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், ஸ்கார்பியோ கிளாசிக் ஆனது பெயருக்கேற்ப ஸ்கார்பியோ காருக்கே உண்டான கிளாசிக்கான தோற்றத்தை கொண்டதாக, பெட்டகம் வடிவில் உருவாக்கப்படுகிறது. இதற்கேற்ப, முந்தைய ஸ்கார்பியோ காரின் 2ஆம் தலைமுறை பிளாட்ஃபாரத்தில் ஸ்கார்பியோ கிளாசிக் வடிவமைக்கப்படுகிறது. 2022இல் அறிமுகத்தின்போது ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை ரூ.11.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.
ஸ்கார்பியோ கிளாசிக் காரில் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் என்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. அதேபோல், என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. அட்வான்ஸான தோற்றத்தில் ஸ்கார்பியோ-என் கார் உருவாக்கப்பட்டாலும், ஒரு சிலர் பழமை மாறாத ஸ்கார்பியோ காரை வாங்கும் முயற்சியாக ஸ்கார்பியோ கிளாசிக் காரை வாங்குகின்றனர்.

குறிப்பாக, பஞ்சாப் மக்களிடையே மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் மீதான ஈர்ப்பு அதிகமாக உள்ளதால், அங்குதான் ஸ்கார்பியோ கிளாசிக் கார்களை வாங்குபவர்களும் அதிகமாக இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு, பஞ்சாப் மாநிலத்தில் ஸ்கார்பியோ கிளாசிக் காரை வாங்கி பயன்படுத்தி வருபவர், தனது வீட்டில் ஸ்கார்பியோ கிளாசிக் காரை நிறுத்துவதற்கு என்றே பிரத்யேகமான ஒரு அறையை மேல் தளத்தில் உருவாக்கி உள்ளார்.
அந்த அறையின் வெளிப்பக்கம் கண்ணாடியால் செய்யப்பட்டுள்ளதால், வீட்டிற்கு வெளியே சாலையில் இருந்து பார்த்தாலும் அவரது வெள்ளை நிற ஸ்கார்பியோ காரை பார்க்க முடிகிறது. முதல் மேல் தளத்திற்கு காரை கொண்டு செல்லும் அளவிற்கு புதிய வீட்டை நன்கு பிரம்மாண்டமாகவும், நன்கு விசாலமாகவும் இந்த பஞ்சாப் நபர் கட்டியெழுப்பி உள்ளார். இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், காரை நிறுத்தி இருக்கும் பார்க்கிங் பகுதிக்கு அருகே சில அறைகள் இருப்பதை காணலாம்.

மேலும், வீட்டிற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்கார்பியோ கிளாசிக் காரில் மத்திய பிரதேச மாநில நம்பர் பிளேட் இருப்பதையும் காணலாம். அதாவது, இந்த வீடு கட்டப்பட்டது பஞ்சாப் மாநிலமாக இருப்பினும், இந்த ஸ்கார்பியோ கிளாசிக் கார் வாங்கப்பட்டது மத்திய பிரதேசத்தில் ஆகும். மற்றப்படி, இந்த ஸ்கார்பியோ கிளாசிக் கார் குறித்த விபரங்கள் எதுவும் கிடைக்க பெறவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தனக்கு பிடித்த காரை வீட்டில் அழகு பொருளாக நிறுத்தி வைப்பது உண்மையில் அருமையான யோசனை ஆகும். இதேபோன்றதான யுக்தியை சமீப காலமாக பலர் பின்பற்றுவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக, வட இந்தியாவில் இவ்வாறு தனது ஊர் உலகத்திற்கே காட்டும்படி நிறுத்துவது ஃபேஷனாகி வருகிறது. இவ்வாறு காரை ஒரே இடத்தில் நிறுத்தி வைப்பது நல்ல விஷயம் ஆகும். ஆனால், அடிக்கடி எடுத்து பயன்படுத்திய பின்னர் நிறுத்துவதினால், காருக்குள் இருந்து கார்பன் மோனாக்சைடு வாயுவை வீட்டிற்குள் இருப்பவர்கள் சுவாசிக்க நேரிடும்.


Click it and Unblock the Notifications









