மொத்தமா நாட்டை விட்டு போகும்போது பைக்கை கூட விடல... எத்தனை இடத்துல பணத்தை தண்ணி போல செலவு செய்தாரோ!!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக் ஒன்றை வாங்க வேண்டும் என்பது நம்மில் நிறைய பேரது கனவாக இருக்கும். மற்ற பைக்குகளை வாங்குபவர்களை காட்டிலும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளை வாங்குபவர்கள் தான் தங்களது பைக் மீது அளவுக்கடந்த பாசத்துடன் இருப்பதை பார்க்க முடியும். அந்த அளவிற்கு ராயல் என்ஃபீல்டு பைக்குகள் அவற்றின் ஓனர்களை என்னமோ செய்து எப்போதுமே தங்களது பாசப்பிணைப்பில் வைத்திருக்கின்றன. ராயல் என்ஃபீல்டு பைக்கை வாங்கிய புதியதில் பைக்கை படுக்கை அறையில் நிறுத்தி, அதனை பார்த்தப்படியே தூங்குபவர்கள் கூட உள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அப்படியிருக்க, இங்கு ஒருவர் ஒருபடி மேலே சென்று இந்தியாவில் வாங்கிய ராயல் என்ஃபீல்டு பைக்கை இங்கிலாந்துக்கு கடல் வழியாக கப்பலில் கொண்டு சென்று பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். இதற்கு அவர் செலவு செய்த தொகை எவ்வளவு என தெரிந்தால் உங்களுக்கு தூக்கி வாரி போடும். சுமார் ரூ.4.5 லட்சத்தை செலவு செய்து இந்தியாவில் இருந்து யுகே-வுக்கு பைக்கை கொண்டு சென்றுள்ளார்.

punjab man shipped his bike

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவரான இவர் டிக்டாக் செயலில் 'ராஜ்குரு' என்கிற பெயரில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். ஆதலால், இதுதான் இவரது பெயராக இருக்க கூடும். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் கர்த்தார்பூர் நகரத்தை சேர்ந்த இவர், குடும்பத்துடன் இங்கிலாந்தின் வால்வர்ஹாம்டன் பகுதிக்கு குடிபெயர்ந்து உள்ளார்.

பொதுவாக, இவ்வாறு வெளிநாட்டிற்கு குடிபெயர்பவர்கள் தங்களது வாகனத்தை அந்த நாட்டிற்கு கொண்டு செல்ல விரும்ப மாட்டார்கள். ஏனெனில், பெரிய தொகையை செலவு செய்து அதனை அந்த நாட்டிற்கு கொண்டு செல்வதை காட்டிலும், அந்த வாகனத்தை இங்கேயே விற்று புதிய ஒன்றை புதியதாக குடிபெயரும் நாட்டில் வாங்கி பயன்படுத்தவே விரும்புவர்.

punjab man shipped his bike

ஏனெனில், இந்த விஷயத்தில் அதிக பணம் செலவாகும் என்பது மட்டுமின்றி, அந்த வாகனத்தை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்து இங்கிலாந்தில் இறக்குமதி செய்ய பல்வேறு அனுமதிகளை வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஆனால், பஞ்சாப்பில் இருந்து இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்து உள்ள இந்த இளைஞர் தனது ராயல் என்ஃபீல்டு பைக் மட்டுமின்றி, பஞ்சாப்பில் தாங்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் மூட்டி கட்டி இங்கிலாந்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள இந்த நபரது ராயல் என்ஃபீல்டு புல்லட் (Bullet) பைக்கில் பஞ்சாப் மாநில நம்பர் பிளேட் இருப்பதை காணலாம். இங்கிலாந்து நாட்டின் சாலையில் பஞ்சாப் மாநில நம்பர் பிளேட் (Number Plate) கொண்ட வாகனத்தை பார்ப்பதற்கே புதுமையானதாக உள்ளது. ஆனால், இந்த நம்பர் பிளேட் உடன் இந்த நபரால் பைக்கை அங்கு ஓட்ட முடியாது.

இங்கிலாந்து நாட்டின் வாகன பதிவெண்ணை வாங்க வேண்டும். இந்தியாவில் வாகன பதிவை செய்வதுபோல், இங்கிலாந்தில் வாகனத்தை பதிவு செய்வதற்கும் பைக்கை வாங்கிய ரசீதுகளை காண்பிக்க வேண்டியிருக்கும். குடும்பத்துடன் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்துள்ள இந்த இளைஞரிடம் இருப்பது கருப்பு நிறத்திலான பழைய தலைமுறை ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக் ஆகும்.

பழைய தலைமுறை புல்லட் பைக்காக இருப்பினும், இது தற்போதைய புல்லட் பைக்கை காட்டிலும் வட இந்தியாவில் மிகவும் பிரபலமானதாக உள்ளது. குறிப்பாக, பஞ்சாப்பில் இதேபோன்றதான கருப்பு நிறத்திலான புல்லட் பைக்கை வைத்திருப்பதை நிறைய பேர் கௌரவமாக பார்க்கின்றனர். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்கின் தற்போதைய தலைமுறை மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.74 லட்சத்தில் இருந்து ரூ.2.15 லட்சம் வரையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பைக்கை வாங்கியதை காட்டிலும் மூன்று மடங்கு அதிக தொகையை செலவு செய்து இந்த இளைஞர் பைக்கை இங்கிலாந்துக்கு கொண்டு சென்றுள்ளார். ரூ.4.5 லட்சம் செலவு என்பது பைக் உள்பட இந்த பஞ்சாப் குடும்பத்தின் ஒட்டுமொத்த பொருட்களை இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு கொண்டு செல்வதற்காக செலவு செய்யப்பட்ட தொகையாக இருக்கலாம். அதாவது, பைக்கிற்கு மட்டும் என இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 14, 2025, 5:00 [IST]
English summary
Punjab man shipped his old royal enfield bullet bike to uk check all details here
மேலும்... #england
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+