யாருப்பா நீங்க எல்லாம்... 52 ஸ்பீக்கர்களுடன் டிராக்டர்!! போலீஸ் விதித்துள்ள அபராதம் எவ்ளோ தெரியுமா?
பஞ்சாப்பில், சுமார் 52 ஸ்பீக்கர்களுடன் சாலைகளை அதிர விட்டு வந்த டிராக்டர் உரிமையாளருக்கு போலீஸார் அதிரடியாக ரூ.1.5 லட்சத்தை அபராதமாக விதித்துள்ளனர். சிறிது கூட பொது அறிவு இல்லாமல் இத்தகைய செயலில் ஈடுப்பட்டுள்ளவர் யார்? என்ற கேள்விக்கு பதிலாக இந்த மாடிஃபை டிராக்டரை பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
நம்ம தமிழ்நாட்டு போலீஸை போலவே, உழைப்புக்கு பெயர்போன பஞ்சாப் மாநில போலீஸாரும் குற்றத்தை கண்டால், உடனே பொங்கி எழுந்துவிடுவார்கள். அதற்கு சாட்சியாகவே சமீபத்தில் ஓர் சிறப்பான சம்பவத்தை பஞ்சாப் போலீஸார் செய்துள்ளனர். ஒரு சமயத்தில் சாலைகளில் வித்தியாசமான ஹார்ன் சத்தங்கள் கொண்ட வாகனங்களை பரவலாக பார்க்க முடிந்தது.

குறிப்பாக, மாடிஃபை பைக் வைத்திருப்பவர்கள் தான் பெரும்பாலும் மிகுந்த இரைச்சலான ஹார்ன் சத்தங்களை வைத்திருப்பர். ஆனால் சமீப காலமாக அத்தகைய வாகன ஓட்டிகளை பரவலாக பார்க்க முடியவில்லையே என எப்போதாவது யோசித்துள்ளீர்களா? போலீஸார் அத்தகைய வாகன ஓட்டிகளை விரட்டி விரட்டி அபராதம் விதித்து வருவதே அதற்கு காரணம். இந்த வரிசையில், 52 ஸ்பீக்கர்களுடன் இயங்கிவந்த டிராக்டர் ஒன்றிற்கு பஞ்சாப் போலீஸார் பெரிய தொகையை அபராதமாக விதித்துள்ளனர்.
52 ஸ்பீக்கர்கள் என்பது மிக அதிகம். இதனால்தான் இந்த செயலில் ஈடுப்பட்டவருக்கு அதிரடியாக சுமார் ரூ.1.5 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. சிறிய மற்றும் பெரிய ஸ்பீக்கர்கள் என 52 ஸ்பீக்கர்களுடன் சட்ட விரோதமான முறையில் சாலையில் ஒலி இரைச்சலை ஏற்படுத்தியவாறு இந்த டிராக்டர் இயக்கப்பட்டு வந்துள்ளது. அத்துடன், பின்பக்கத்தில் 52 ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளதால், டிராக்டரின் உயரம் சுமார் 10 - 12 அடி ஆக உயர்ந்துள்ளது.
பஞ்சாப் போலீஸாரின் இந்த சம்பவம் நடந்திருப்பது கன்னா என்ற கிராமத்தில் ஆகும். 52 ஸ்பீக்கர்களை பொருத்தியது மட்டுமின்றி, டிராக்டரில் வேறு சில மாற்றங்களையும் செய்துள்ளனர். ஆனால் இதில் ஹைலைட் ஒன்றல்ல, இரண்டல்ல 52 ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டதுதான். ஸ்பீக்கர்களுக்கான ஆம்பிளிஃபையர்ஸ் டிராக்டரின் பின்பக்கத்தில் இருந்ததை போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

அபராதத்திற்கு உள்ளாகியுள்ள இளைஞர் இந்த டிராக்டரை பள்ளி, கல்லூரி போன்ற இடங்களுக்கு கொண்டு சென்று இரைச்சலை ஏற்படுத்தி வந்துள்ளார். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, அபாரதம் விதித்தது மட்டுமின்றி இந்த மாடிஃபை டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன், இதே குற்றத்திற்காக 7வது முறையாக பிடிப்பட்டு உள்ளதால், சம்மந்தப்பட்ட இளைஞரை போலீஸார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஒலி இரைச்சலை ஏற்படுத்தியவாறு, டிராக்டரை மிக அதிவேகத்தில் இயக்கியது உள்ளிட்ட குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி, பறிமுதல் செய்துள்ள டிராக்டருக்கு முறையான காப்பீடு இல்லை என்பதையும், மாசு உமிழ்வு & ஆர்டிஓ சான்றிதழ்கள் கூட இல்லை என்பதையும் போலீஸார் தங்களது அடுத்தடுத்த விசாரணையில் கண்டறிந்துள்ளனர். இந்த இளைஞர் மீதான வழக்கு லோக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் விரைவில் நடக்கவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியா, மாடிஃபிகேஷன் விஷயங்களில் மிக கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டிருக்கும் நாடு. உங்களால் டிராக்டர் போன்ற வாகனங்களில் பெயிண்ட் & காஸ்மெட்டிக் பொருட்களை தவிர்த்து வேறு எதையும் மாற்ற முடியாது/ கூடாது. கட்டுப்பாடுகள் நம் நாட்டில் ஏன் இவ்வளவு கடுமையான இருக்கின்றன என்பதற்கு மிக சிறந்த காரணம் இந்த மாடிஃபை டிராக்டர் ஆகும்.


Click it and Unblock the Notifications








