அம்மாவுக்கு இப்படி ஒரு பரிசா!! பாடகரோட அம்மா மட்டுமல்ல நம்ம ஆளுங்களே ஆச்சரியத்தலுதான் மூழ்கி கெடக்குறாங்க!

பாடகர் ஒருவர் தன்னுடைய அம்மாவிற்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கி அவரை ஆச்சரியப்படுத்தி இருக்கின்றார். அவர் என்ன காரை பரிசாக வழங்கினார்? அந்த காரின் விலை எவ்வளவு? மற்றும் சிறப்புகள் என்ன? என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

புகழ்பெற்ற பஞ்சாபி பாடகர் சிங்கர் பர்மிஷ் வெர்மா. இவரே அவரது அம்மாவிற்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கி அசத்தியவர் ஆவார். அவர் ஜீப் நிறுவனத்தின் புகழ் பெற்ற சொகுசு கார் மாடல்களில் ஒன்றான கிராண்ட் செரோக்கி-யையே பரிசாக வழங்கி இருக்கின்றார்.

Singer parmish verma gifted car to mom

இந்த காரின் விலை ரூ. 90 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இத்தகைய விலையை உயர்ந்த காரையே பாடகர் அவரது அம்மாவிற்கு பரிசாக வழங்கி உள்ளார். அம்மா-க்களின் தினம் கூட இல்லையே ஏன் திடீரென இந்த விலை உயர்ந்த காரை பாடகர் அவருடைய அம்மாவிற்கு பரிசாக வழங்கினார் என்கிற சந்தேகம் உங்களுக்கு எழும்பி இருக்கலாம்.

ஒருவேளை அவருக்கு பிறந்தநாளாக இருக்கலாம் என்றுகூட நினைக்கலாம். ஆனால், இது எதுவுமே இல்லை. தன்னுடைய அம்மாவின் பணி ஓய்வு நாளை முன்னிட்டே பாடகர் விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கி இருக்கின்றார். ஆமாங்க, பஞ்சாபி பாடகர் பர்மிஷ் வெர்மா பல லட்சங்களை வருமானமாக ஈட்டிக் கொண்டிருக்கும் சூழலிலும் அவர் தனியாக பணியாற்றி வந்திருக்கின்றார்.

Singer parmish verma

இந்த நிலையிலேயே அவர் சமீபத்தில் பணி ஓய்வைப் பெற்றிருக்கின்றார். இந்த நாளை அவருக்கு மறக்க முடியாத நாளாக மாற்றும் பொருட்டே ஜீப் கிராண்ட செரோக்கி சொகுசு கார் பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. ஜீப் நிறுவனம் சென்ற ஆண்டிலேயே அதன் ஐந்தாம் தலைமுறை கிராண்ட் செரோக்கி கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இந்த கார் மாடலையே அம்மாவிற்கு பரிசாக வழங்கி இருக்கின்றார் பாடகர். இது சொகுசு மற்றும் பிரீமியம் தர அம்சங்களுக்கு பெயர்போன கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது. மிக முக்கியமாக இதில் பயணிக்கும்போது மிகுந்த ஆடம்பரமான பயண அனுபவத்தைப் பெற்றுக் கொல்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Jeep grand cherokke

மிக முக்கியமாக பழைய தலைமுறை போன்றில்லாமல் இது இந்தியாவிலேயே வைத்து தயாரிக்கப்படுகின்றது. இதன் உற்பத்தி உள்ளூரிலேயே மேற்கொள்ளப்படுவதால் விலையும் சற்றுக் குறைவாக உள்ளது. வட அமெரிக்காவைத் தாண்டி ஜீப் நிறுவனம் இந்த காரை அசெம்பிள் செய்யும் முதல் நாடு நம் இந்தியா ஆகும்.

இந்த காரில் கவர்ச்சியான தோற்றத்திற்காக எல்இடி ஹெட்லேம்ப், பெரிய ஏர் இன்டேக் துளைகள் மற்றும் பம்பர் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, சதுர வடிவ ஆர்ச்சுகள் கொண்ட வீல்கள், கருப்பு நிறத்தாலான மேற்கூரை ஆகியவையும் இந்த ஜீப் காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இவை மட்டுமே கிராண்ட் செரோக்கி காரின் ஸ்பெஷல் இல்லைங்க. இன்னும் பல இருக்கின்றன. அந்தவகையில், இந்த காரில் பெரிய 10.1 அங்குல டச் வசதிக் கொண்ட திரை வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த திரை வாயிலாக பலவித செயல்களைச் செய்துக் கொள்ள முடியும்.

இத்துடன், 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 10 அங்குல ஹெட்ஸ்-அப் திரை, ஒயர்லெஸ் சார்ஜிங் பேட், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகியவையும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, பொழுதுபோக்கு திரை, பனோரமிக் சன்ரூஃப், லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள், வென்டிலேட் வசதிக் கொண்ட முன் இருக்கைகள் மற்றும் பவர்டு டெயில்கேட் ஆகியவையும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 272 எச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 8 ஸ்பீடு கியர்பாக்ஸ் இந்த காரில் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகின்றது.

பாடகர் பர்மிஷ் வெர்மா இடம் ஏற்கனவே ஏகப்பட்ட அரிய வகை கார் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், மிக மிக விலை உயர்ந்த கார்களும் அவரிடத்தில் பயன்பாட்டில் உள்ளன. மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் (Mercedes-Benz G-Wagen), மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 (Mercedes-Maybach S650) மற்றும் மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 (Mercedes-Maybach GLS600) ஆகிய கார் மாடல்கள்கூட அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுதவிர ரோல்ஸ் ராய்ஸ் விரைத் (Rolls Royce Wraith), டாடா சஃபாரி (Tata Safari) போன்ற கார்களையும் அவர் வைத்துள்ளார். இதில், ரோல்ஸ் ராய்ஸ் விரைத் காரே பர்மிஷ் வெர்மாவிடம் இருக்கும் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்று விலை உயர்ந்த கார்கள் பரிசாக வழங்கப்படுவது முதல் முறையல்ல. சமீபத்தில்கூட ரூ. 10 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை அம்பானி அவருடைய மனைவி நீதா அம்பானிக்கு வழங்கினார். இதேபோல், ரூ. 3 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ்600 லக்சூரி எஸ்யூவி-யை விக்னேஷ் சிவன் அவருடைய மனைவி நயன்தாராவிற்கு வழங்கி ஆச்சரியப்படுத்தினார். இந்த நிலையிலேயே பாடகர் அவருடைய அம்மாவிற்கு பரிசாக வழங்கியுள்ளார்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 14, 2023, 16:14 [IST]
English summary
Punjabi singer parmish verma gifted jeep grand cherokee to his mother
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X