அம்பானிக்கே இன்னும் கிடைக்கல! 5 கோடி ரூபாய் காரை தட்டி தூக்கியது இவரா! இந்தியாவையே திரும்பி பாக்க வெச்சுட்டாரு

இந்தியாவின் பேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் துறையில் சாதித்து வரும் பிரபல நிறுவனங்களில் ஒன்று பர்ப்பிள் ஸ்டைல் லேப்ஸ் (Purple Style Labs). இதன் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் (CEO - Chief Executive Officer) அபிஷேக் அகர்வால் (Abhishek Agarwal).

இவர் பத்திரிக்கைகளில் தற்போது தலைப்பு செய்தியாக மாறியுள்ளார். மெக்லாரன் அரூட்ரா (McLaren Artura) காரை அபிஷேக் அகர்வால் வாங்கியிருப்பதுதான் இதற்கு மிக முக்கியமான காரணம். இந்தியாவில் மெக்லாரன் அரூட்ரா காரை வாங்கியிருக்கும் முதல் நபர் என்ற பெருமையை இதன் மூலமாக அபிஷேக் அகர்வால் பெற்றுள்ளார்.

Abhishek Agarwal Buys McLaren Artura

மெக்லாரன் அரூட்ரா காருடன் அபிஷேக் அகர்வால் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் தற்போது மிகவும் வேகமாக பரவி வருகின்றன. பலருக்கும் நன்கு பரிட்சயமான செலிபிரிட்டி போட்டோகிராபர் (பிரபல மனிதர்களை புகைப்படம் எடுக்க கூடியவர்) ஆன வைரல்பயாணி இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார்.

அபிஷேக் அகர்வால் வாங்கியுள்ள மெக்லாரன் அரூட்ரா காரானது, ஹை-பெர்ஃபார்மென்ஸ் ஹைப்ரிட் (HPH - High-Performance Hybrid) ரகத்தை சேர்ந்தது ஆகும். இது ஹைப்ரிட் கார் என்பதால், லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு மற்றும் எலெக்ட்ரிக் மோட்டாருடன் கூடிய 3.0 லிட்டர் வி6 ட்வின் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) வழங்கப்பட்டுள்ளது.

Abhishek Agarwal McLaren Artura

இதன் ஒருங்கிணைந்த பவர் அவுட்புட் 671 பிஹெச்பி மற்றும் 720 என்எம் ஆகும். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டி விடும் திறனை மெக்லாரன் அரூட்ரா பெற்றுள்ளது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் வாய்ந்த மெக்லாரன் அரூட்ரா காரின் விலை 5.09 கோடி ரூபாயில் (Price) இருந்து தொடங்குகிறது.

இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இவ்வளவு விலை உயர்ந்த காரை இந்தியாவில் முதல் நபர் என்ற பெருமையை அபிஷேக் அகர்வால் பெற்றிருப்பது உண்மையிலேயே சிறப்பான ஒரு விஷயம்தான். செயல்திறன், டிசைன் (Design) மற்றும் வசதிகள் (Features) என அனைத்து அம்சங்களிலும் வாடிக்கையாளர்களை கவரக்கூடிய காராக மெக்லாரன் அரூட்ரா களமிறக்கப்பட்டுள்ளது.

இது ஹைப்ரிட் கார் என்பதால், சிறப்பான மைலேஜ் (Mileage) கிடைக்கும் என்பதும் உறுதி. மெக்லாரன் அரூட்ரா கார் ஒரு லிட்டருக்கு 20-22 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. ஒரு சூப்பர் கார் எப்படி இவ்வளவு மைலேஜ் வழங்கும்? என நீங்கள் நினைப்பது புரிகிறது. இது ஹைப்ரிட் ரகத்தை சேர்ந்த கார் என்பதால், இவ்வளவு மைலேஜ் கிடைப்பது சாத்தியம்தான்.

அத்துடன் இந்த காரின் எடையும் கூட 1,489 கிலோ மட்டுமே. பொதுவாக எடை குறைவான கார்கள் சிறப்பான செயல்திறனை வழங்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இ-மோடு, கம்ஃபோர்ட் மோடு, ஸ்போர்ட் மோடு மற்றும் ட்ராக் மோடு என மெக்லாரன் அரூட்ரா காரில் மொத்தம் 4 டிரைவிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலை மற்றும் நிறுவனங்களை பொருட்படுத்தாமல், ஒரு புதிய காரை டெலிவரி எடுப்பது என்பதே மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்த கூடிய ஒரு விஷயம்தான். அதிலும் மெக்லாரன் அரூட்ரா போன்ற மிகவும் விலை உயர்ந்த ஒரு காரை, நாட்டிலேயே முதல் ஆளாக டெலிவரி எடுத்திருப்பது என்பதெல்லாம் சாதாரண விஷயம் அல்ல.

இதற்காக பர்ப்பிள் ஸ்டைல் லேப்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அபிஷேக் அகர்வாலுக்கு பாராட்டுக்கள். மெக்லாரன் அரூட்ரா காரை அபிஷேக் அகர்வால் தேர்வு செய்திருப்பது, அவரது ரசனையை எடுத்துக்காட்டும் விஷயமாகவும் இருக்கிறது. வரும் காலங்களில் அபிஷேக் அகர்வால் இன்னும் நிறைய சூப்பர் கார்களை வாங்கி குவிக்க எங்களது வாழ்த்துக்கள்.

Article Published On: Wednesday, July 12, 2023, 14:32 [IST]
English summary
Purple style labs ceo abhishek agarwal buys mclaren artura worth rs 5 09 crore all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+