2013இல் இருந்து நடிகராக இருப்பவருக்கு இப்போதுதான் காலம் அமைஞ்சி இருக்கு!! பல சொகுசு கார்களுக்கு ஓனர்!!

புஷ்பா (Pushpa) திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது. 2021ஆம் ஆண்டில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் நடிப்பில் 'புஷ்பா: தி ரைஸ்' திரைப்படம் திரைக்கு வந்தது. வழக்கம்போல், திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே படத்தின் சில பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகின. இருப்பினும், இது பெரும்பாலான திரைப்படங்களுக்கு நடப்பதுதான் என்பதால், புஷ்பா படத்தின் மீது இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் உருவாகவில்லை. ஆனால், திரைப்படம் திரைக்கு வந்த பிறகு, இந்த படத்தை பற்றி பேசாதவர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு இந்திய அளவில் திரைப்படம் பெரிய ஹிட்.

எந்த அளவிற்கு என்றால், விரைவில் திரைக்குவர உள்ள புஷ்பா திரைப்படத்தின் 2ஆம் பாகத்திற்கு அனைவரும் ஆவலாக காத்திருக்கின்றனர். ஏற்கனவே படத்தின் டிரைலர் மற்றும் சில பாடல்கள் வெளியாகிவிட்ட நிலையில், திரைப்படம் வெகு விமர்சையாக வருகிற டிசம்பர் 5ஆம் தேதி திரைக்குவர உள்ளது. புஷ்பா திரைப்படம் இந்த அளவிற்கு வரவேற்பு பெற்றதற்கு, இதில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் காரணம் ஆகும்.

actor dhananjaya owns luxury cars

குறிப்பாக, 'ஜாலி ரெட்டி' கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். பார்த்தாலே எரிச்சலூட்டும் கதாபாத்திரம். இருப்பினும், அதனை நேர்த்தியாக கையாண்டு இருப்பார் நடிகர் தனஞ்ஜெயா. கன்னட நடிகரான இவரை டாலி என்றும் அழைக்கின்றனர். புஷ்பா திரைப்படத்தில் நடிப்பதற்கு முன் 2013ஆம் ஆண்டில் இருந்து தனஞ்ஜெயா பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இருப்பினும், புஷ்பா திரைப்படம் தான் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான திருப்பமாக அமைந்தது. புஷ்பாவின் வெற்றிக்கு பிறகு 2022ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 7 திரைப்பட வாய்ப்புகள் நடிகர் தனஞ்ஜெயாவை தேடி வந்தன. தமிழிலும் பாயும் ஒளி நீ எனக்கு, மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், பாடல்களுக்கு வரிகளை எழுதிக் கொடுப்பது உள்பட சில திரைப்படங்களை பணம் போட்டு தயாரித்தும் உள்ளார்.

actor dhananjaya owns luxury cars

இவ்வாறு பன்முக திறன் கொண்ட டாலி எனப்படும் தனஞ்ஜெயாவுக்கு 39 வயதாகிறது. ஆனால், இன்னும் திருமணம் நடைபெறாமல் இருந்த நிலையில், தனஞ்ஜெயாவுக்கு திருமணம் முடிவாகி உள்ளது. தன்யதா என்கிற மருத்துவரை திருமணம் செய்ய உள்ளார். நடிகர் தனஞ்ஜெயாவும், தன்யதாவும் நீண்ட கால நண்பர்களாவர். அவர்களது நீண்ட கால நட்பு திருமணத்தில் வந்து முடியவுள்ளது. கன்னட நடிகை அம்ருதா ஐயங்கார் உடன் நடிகர் தனஞ்ஜெயாவை இணைத்து வைத்து வதந்திகள் வந்துக் கொண்டிருந்த நிலையில், இந்த திருமணம் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

கன்னட நடிகர் தனஞ்ஜெயாவிடம் பல்வேறு விலையுயர்ந்த கார்கள் உள்ளன. அவற்றுள், டொயோட்டா வெல்ஃபையர் மற்றும் ரேஞ்ச் ரோவர் கார்கள் முக்கியமானவை ஆகும். இதில், டொயோட்டா வெல்ஃபையர் காரை கடந்த ஆண்டில் நடிகர் தனஞ்ஜெயா நடித்த ஹோய்சாலா திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் தயாரிப்பாளர் பரிசாக வழங்கி இருந்தார். இந்த லக்சரியான எம்பிவி காரை வைத்திருக்கும் மிகவும் சில கன்னட நடிகர், நடிகைகளுள் தனஞ்ஜெயாவும் ஒருவர் ஆவார்.

actor dhananjaya owns luxury cars

டொயோட்டா வெல்ஃபையர் கார் ஒன்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.22 கோடியில் இருந்து ரூ.1.32 கோடி வரையில் உள்ளன. நடிகர் தனஞ்ஜெயாவிடம் சிவப்பு நிறத்தில் ரேஞ்ச் ரோவர் கார் ஒன்று உள்ளது. இவரிடம் இருப்பது ஓல்டு ஜெனரேஷன் ரேஞ்ச் ரோவர் எவோக் கார் ஆகும். லேண்ட் ரோவர் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.67.90 லட்சமாக உள்ளது.

நடிகர் தனஞ்ஜெயா தனது தந்தை ஆசையாக சிறு வயதில் வழங்கிய டிவிஎஸ் எக்ஸ்.எல் சூப்பர் பைக்கையும் இப்போதும் பத்திரமாக வைத்துள்ளார். சமீபத்தில், ஆயுத பூஜையின் போது மற்ற லக்சரி கார்களுடன் சேர்த்து அந்த டிவிஎஸ் எக்ஸ்.எல் சூப்பர் பைக்கையும் நிற்க வைத்து தனஞ்ஜெயா பூஜை போட்டது கவனத்தை ஈர்த்தது. டிவிஎஸ் எக்ஸ்.எல் சூப்பர் பைக்கின் விற்பனை 2009ஆம் ஆண்டில் நிறுத்திக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புஷ்பா போன்ற பிரபலமான திரைப்படத்தில் நடித்த நடிகரிடம் சில ரேஞ்ச் ரோவர் கார்கள் மற்றும் ஒரு டொயோட்டா வெல்ஃபையர் கார் மட்டுமே இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. புஷ்பா திரைப்பட வெற்றியின் மூலமாக கன்னட நடிகர் தனஞ்ஜெயாவுக்கு படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளதால், இனி வரும் காலங்களில் நிறைய சொகுசு கார்களை வாங்குவார் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Sunday, November 3, 2024, 16:51 [IST]
English summary
Pushpa actor dhananjaya who owns luxury cars getting marriage check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X