கார் கதவு திறந்ததும் உள்ளே இருந்தவரை பார்த்து யாராலும் நம்ப முடியல! பென்ஸ் கார்களிலேயே இது தனி ரகம்
நேஷ்னல் கிரஷ் (National Crush) என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் ராஷ்மிகா மந்தனா விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் காரில் காட்சி தந்துள்ளார். சமீபத்தில்தான் 'புஷ்பா' (Pushpa) என்கிற 2000 கோடி ரூபாய் வசூலித்த திரைப்படத்தில் நடித்து நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்த நடிகை ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் மும்பை (Mumbai) விமான நிலையத்திற்கு வந்துள்ளார். விமான நிலையத்திற்கு அட்டக்காசமான பென்ஸ் காரில் நடிகை ராஷ்மிகா மந்தனா வந்திறங்கியது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது. அப்படி என்ன மாதிரியான பென்ஸ் காரில் ராஷ்மிகா மந்தனா பயணம் செய்துள்ளார் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு புஷ்பா திரைப்படங்களின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக விளங்குகிறார். ஆரம்பத்தில் கன்னட நடிகையாக சினிமாவில் நுழைந்தவர், அதன்பின் தெலுங்கு சினிமா துறைக்குள் நுழைந்தார். பாலிவுட்டிற்கு அடுத்து மிக பெரும் சினிமா துறையான டோலிவுட்டிற்குள் நுழைந்துவிட்டதால், கோலிவுட்டில் பட வாய்ப்பு பெறுவது ராஷ்மிகா மந்தனாவுக்கு சிரமமாக இல்லை.

'அனிமல்' (Animal) உள்பட சில இந்தி திரைப்படங்களிலும் நடித்திருப்பினும், தெலுங்கில் உருவான புஷ்பா 1 மற்றும் 2ஆம் பாக திரைப்படங்கள் தான் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவை கொண்டு சென்றது. அடுத்ததாக, பிரபல இந்தி நடிகர் சல்மான் கானின் 'சிக்கந்தர்' (Sikandar) திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். சிக்கந்தர் படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்குகிறார் என்பது கூடுதல் தகவல்.
இவ்வாறு பல்வேறு மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று (மார்ச் 6) மதிய வேளையில் மும்பை தனி விமான நிலையத்திற்கு பென்ஸ் காரில் வந்தார். அநேகமாக, சிக்கந்தர் திரைப்பட ஷூட்டிங் அல்லது அதுதொடர்பான ஏதேனும் பணிகளுக்காக மும்பைக்கு ராஷ்மிகா மந்தனா வந்திருக்கலாம். அந்த பணிகளை முடித்துக் கொண்டு திரும்பி செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு வந்திருக்கலாம். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த வீடியோவில், நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு இணையாக நம்மை வசீகரிப்பது அவர் பயணம் செய்து விமான நிலையத்திற்கு வந்த மெர்சிடிஸ்-பென்ஸ் கார் ஆகும். இது, மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் எஸ்-கிளாஸ் என்கிற லக்சரியான செடான் ரக கார் ஆகும். இந்த கார் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு சொந்தமானது கிடையாது என கூறப்படுகிறது. படக்குழுவினர் சார்பில் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்ட காராக இது இருக்கலாம்.
மும்பை விமான நிலையத்திற்கு ராஷ்மிகா மந்தனா அவராக காரை ஓட்டி வரவில்லை. அவர், காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார். நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு நன்றாகவே கார் டிரைவிங் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. சிலமுறை ராஷ்மிகா கார் ஓட்டும் வீடியோக்களை கூட இணையத்தில் பார்த்துள்ளோம். ஆனால், விமான நிலையத்திற்கு அமைதியாக பென்ஸ் காரின் பின் இருக்கையில் அமர்ந்து வந்துள்ளார்.

மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் தற்சமயம் இந்த கார் டீசல் மற்றும் ஹைப்ரீட் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் டீசல் என்ஜின் ஆப்ஷனில் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.79 கோடியாகவும், ஹைப்ரீட் ஆப்ஷனில் ரூ.1.90 கோடியாகவும் உள்ளது.
ஹைப்ரீட் ஆப்ஷனில், காரில் பெட்ரோல் என்ஜின் கிடைக்கும். இந்த ஆப்ஷனில் பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் என இரண்டிலும் காரை ஓட்டலாம். டைமண்ட் வொயிட் பிரைட், ஆனிக்ஸ் பிளாக், நாடிக் ப்ளூ, ஹை டெக் சில்வர் என மொத்தம் 4 விதமான கலர் ஆப்ஷன்களில் எஸ்-கிளாஸ் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா பயணம் செய்திருப்பது ஆனிக்ஸ் கருப்பு நிறத்திலான எஸ்-கிளாஸ் காரில் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பார்ப்பதற்கு மட்டுமல்ல, ஓட்டுவதற்கும் எஸ்-கிளாஸ் ஆனது மிகவும் அருமையான கார் ஆகும். முன்னணி நடிகை ஆகிவிட்டாலே எங்கு செல்வதாக இருந்தாலும் பென்ஸ் போன்ற விலையுயர்ந்த காரில் தான் செல்ல வேண்டியிருக்கும் என்பதற்கு நடிகை ராஷ்மிகா மந்தனா சிறந்த உதாரணம் ஆகும். நிச்சயமாக, இதேபோன்றதான ஒரு லக்சரி கார் ராஷ்மிகாவிடமும் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









