புஷ்பா பட ஹீரோவுக்காகவே உருவாக்கப்பட்ட கேரவனை பற்றி தெரியுமா? இதுக்கு அப்புறம் வேற லெவலுக்கு போய்டுவாரு!!
புஷ்பா 2 (Pushpa 2) திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (டிசம்பர் 5) திரைக்கு வந்துள்ளது. தெலுங்கு படமாக இருப்பினும், இந்தியா முழுவதும் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு காரணமான புஷ்பா முதல் பாக வெற்றியில் நடிகர் அல்லு அர்ஜூனின் பங்களிப்பு மிக முக்கியமானது. புஷ்பா படத்திற்கு முன்பே வட இந்தியாவிலும் பிரபலமான நடிகராக அல்லு அர்ஜூன் இருந்தார். தமிழ் நடிகாராக இருப்பினும் சூர்யாவுக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கணிசமான ரசிகர்கள் இருப்பதை போல.
புஷ்பா திரைப்படத்தின் வெற்றி அல்லு அர்ஜூனை மேலும் பிரபலமாக்கி உள்ளது. இவரது நடிப்பில் திரைக்கு வந்துள்ள புஷ்பா 2 திரைப்படம் இதுவரையில் எந்த இந்திய திரைப்படமும் ஈட்டாத அளவிற்கு வசூலை அள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடிகரிடம் உள்ள விலையுயர்ந்த கார்களை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் (Rolls-Royce Cullinan): நடிகர் அல்லு அர்ஜூனிடம் உள்ள விலையுயர்ந்த கார், ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் ஆகும். இந்த அல்ட்ரா-லக்சரி எஸ்யூவி காருக்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு உள்ளது. பெரும் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியிடன் 3க்கும் மேற்பட்ட கல்லீனன் கார்கள் உள்ளன. ரூ.6.95 கோடியில் எக்ஸ்-ஷோரூம் விலையை கொண்ட கல்லீனன் காரில் 6.8 லிட்டர் வி12 என்ஜின் பொருத்தப்படுகிறது.

ஹம்மர் எச்2 (Hummer H2): இந்தியாவில் விற்பனையில் இல்லாத இந்த காரையும் நடிகர் அல்லு அர்ஜூன் வைத்துள்ளார். அதாவது, வெளிநாட்டில் வாங்கி கூடுதல் கட்டணங்களுடன் இந்தியாவிற்கு கொண்டுவந்து பயன்படுத்தி வருகிறார். கிளாசிக் கருப்பு மற்றும் க்ரோம் நிறத்தில் ஹம்மர் எச்2 கார் இவரிடம் உள்ளது. இருப்பினும், ஹம்மர் எச்2 வாகனத்தின் எந்த வேரியண்ட்டை அல்லு அர்ஜூன் வைத்துள்ளார் என்பது தெரியவில்லை.

ஜாகுவார் எக்ஸ்.ஜே.எல் (Jaguar XJL): இந்தியாவில் இருந்து விற்பனை நிறுத்தப்படுவதற்கு முன்னர் இந்த ஜாகுவாரை நடிகர் அல்லு அர்ஜூன் வாங்கினார். ஜாகுவாரின் நீளமான லக்சரி செடான் காரான எக்ஸ்.ஜே.எல்-இன் எக்ஸ்-ஷோரூம் விலை கிட்டத்தட்ட ரூ.1 கோடியாக உள்ளது. இந்த காரில் பொருத்தப்படும் 5.0 லிட்டர் வி8 என்ஜின் அதிகப்பட்சமாக 470 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue): ரேஞ்ச் ரோவர் கார் இல்லாத சினிமா பிரபலத்தை பார்ப்பதே அரிதானது. நடிகர் அல்லு அர்ஜூனிடமும் ரேஞ்ச் ரோவர் வோக் கார் உள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.78 கோடியாக உள்ளது. இந்த எஸ்யூவி காரில் பல்வேறு விதமான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. டாப் வேரியண்ட்டில் ஆற்றல்மிக்க 5.0 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது.

வால்வோ எக்ஸ்சி90 டி8 எக்ஸ்செலென்ஸ் (Volvo XC90 T8 Excellence): நடிகர் அல்லு அர்ஜூனிடம் உள்ள மற்றொரு லக்சரி எஸ்யூவி கார் எக்ஸ்சி90 டி8 எக்ஸ்செலென்ஸ் ஆகும். 4 இருக்கைகளை கொண்ட காரான இது இந்தியாவில் 2015இல் இருந்து 2021 வரையில் விற்பனையில் இருந்தது. இந்த காரில் பொருத்தப்பட்ட 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 401 பிஎச்பி மற்றும் 640 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

ஃபல்கன் வேனிடி வேன் ('Falcon' Vanity van): நடிகரிடம் சொகுசு கேரவன் ஒன்று இருப்பதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. ஃபல்கன் என்கிற பெயரில் அல்லு அர்ஜூனிடம் உள்ள கேரவன் பிரத்யேகமாக அவரது விருப்பத்திற்கு மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்ப உருவாக்கப்பட்டது ஆகும். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த கேரவனின் மதிப்பு ஏறக்குறைய ரூ.7 கோடி ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ளவை எல்லாம் நடிகர் அல்லு அர்ஜூனிடம் சொகுசு கார்கள் மட்டுமே ஆகும். இன்னும் சாதாரணமான கார்களையும் சேர்த்தால், லிஸ்ட் நீண்டுக்கொண்டே போகும். புஷ்பா திரைப்படங்கள் மூலமாக இந்திய அளவில் கவனிக்கத்தக்க நடிகராக உருவெடுத்து இருப்பதால், வருங்காலங்களில் மேலும் பல சொகுசு கார்களை அல்லு அர்ஜூன் வாங்குவார் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









