ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் ரஷ்ய அதிபரின் கார்...!

பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில் மீண்டும் ரஷ்ய அதிபராக பதவியேற்றுள்ள விளாடிமிர் புதினுக்காக புதிய சொகுசு கார் உருவாக்கப்பட்டுள்ளது.

By Arun

பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில் மீண்டும் ரஷ்ய அதிபராக பதவியேற்றுள்ள விளாடிமிர் புதினுக்காக புதிய சொகுசு கார் உருவாக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் பாண்ட் பட பாணியிலான பாதுகாப்பு வசதிகளை கொண்ட அந்த காரின் சிறப்பம்சங்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் ரஷ்ய அதிபரின் கார்...!

பரபரப்பான சூழல்

ரஷ்ய அதிபர் தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில், சுமார் 75 சதவீத வாக்குகளை பெற்று விளாடிமிர் புதின் வெற்றி பெற்றார். ஆனால் அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், விளாடிமிர் புதின் சர்வாதிகாரியாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த பரபரப்புகளுக்கும், சர்ச்சைகளுக்கும் மத்தியில் ரஷ்ய அதிபராக கடந்த திங்கள் கிழமை பதவியேற்று கொண்டார் விளாடிமிர் புதின். அவர் ரஷ்ய அதிபராக பதவியேற்பது இது 4வது முறை.

ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் ரஷ்ய அதிபரின் கார்...!

லிமோசைன் சொகுசு கார்

மாஸ்கோ நகரில் உள்ள ஆண்ட்ரீவ்ஸ்கை ஹாலில்தான் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதற்காக கிரெம்ளின் மாளிகையில் இருந்து புறப்பட்ட விளாடிமிர் புதின், புதிதாக தயாரிக்கப்பட்ட சொகுசு காரில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வந்து சேர்ந்தார். இந்த கார் முழுக்க முழுக்க ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது. 1990களுக்கு பிறகு, ரஷ்ய அதிபர் ஒருவர் முழுக்க முழுக்க உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட காரில் பயணிப்பது கிட்டத்தட்ட இதுதான் முதல் முறை.

ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் ரஷ்ய அதிபரின் கார்...!

மெர்சிடெசுக்கு பதிலாக

விளாடிமிர் புதின் இதற்கு முன்பாக பயன்படுத்தி வந்த மெர்சிடெஸ் எஸ் 600 புல்மேன் காருக்கு பதிலாக இந்த புதிய லிமோசைன் (லிமோ) சொகுசு கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரஷ்ய அரசாங்கத்தால் நடத்தப்படும் ஆட்டோமொபைல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகமான நாமி மற்றும் சோலர்ஸ் ஜேஎஸ்சி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த காரை தயாரித்துள்ளன.

ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் ரஷ்ய அதிபரின் கார்...!

ஒரு கார்தான் டெலிவரி

விளாடிமிர் புதின் அதிபராக பதவியேற்கும் நிகழ்வில்தான் முதன் முதலாக இந்த லிமோசைன் சொகுசு காரை அறிமுகம் செய்ய வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென ஏற்பட்ட கால தாமதத்தால், அதில் சந்தேகம் எழுந்தது. ஆனால் நாமி மற்றும் சோலர்ஸ் ஜேஎஸ்சி ஆகியவை பதவியேற்பு விழாவிற்காக குறைந்தபட்சம் ஒரு காரையாவது டெலிவரி செய்து விட்டன.

போர்சேவின் பங்களிப்பு

முழக்க முழுக்க ரஷ்யாவிலேயே தயாரிக்கப்பட்டிருந்தாலும், ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனங்களான போர்சே மற்றும் ராபர்ட் போர்சே ஆகிய நிறுவனங்களின் பங்களிப்பும் இதில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த காரில் 600 குதிரை திறன் கொண்ட டர்போசார்ஜ்டு வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் டேஸ் போர்டு, ஆன்போர்டு மல்டி மீடியா சிஸ்டம் ஆகிய வசதிகளும் உள்ளன.

ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் ரஷ்ய அதிபரின் கார்...!

உச்சகட்ட பாதுகாப்பு அம்சங்கள்

எந்த விதமான கடின சூழ்நிலையிலும் விளாடிமிர் புதினுக்கு உதவும் வகையில் உச்சகட்ட பாதுகாப்பு அம்சங்கள் காரில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு கவசங்கள், பாதுகாப்பான தகவல் தொடர்பு உபகரணங்கள், சுய பாதுகாப்பு வசதிகள் மற்றும் இதர அவசர கால வசதிகள் காரில் செய்யப்பட்டுள்ளன. அவசர கால தேவைக்காக விளாடிமிர் புதினின் ரத்தம் மற்றும் மெடிக்கல் கிட் வைக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் எண்ணெய் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் வசதியும் இந்த காரில் இருப்பதாக கூறப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Putin Arrives At Fourth Inauguration In New Russian-Made Armored Limousine. read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X