"இந்தியா வந்திறங்கிய அசூரன்" துப்பாக்கி என்ன ஏவுகணையே வந்தாலும் தாங்கும் புதின் கார் பற்றி தெரியுமா?

ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு வருகிறார் இந்தியா ரஷ்யா இடையே வான வருடாந்திர மாநாட்டிற்காக இவர் இந்தியா வருகிறார். இவரை பிரதமர் மோடிநேரில் சந்தித்து பேசுகிறார். இந்நிலையில் இந்த சந்திப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இந்த சந்திப்பிற்காக ரஷ்ய அதிபர் பயன்படுத்தும் கார் இந்தியாவிற்கு வந்துள்ளது. இந்த காரில் தான் அவர் இந்தியாவில் பயணிக்கிறார். இவரது கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

Putin Aurus Senat

ரஷ்ய அதிபர் புதின் உலகின் அதிக பாதுகாப்பு நிறைந்த ஆயுதம் ஏந்திர ஆர்னஸ் சென்ட் காரை பயன்படுத்தி வருகிறார். இவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால் இந்த காரில் தான் எங்கு சென்றாலும் பயணம் செய்வார். வெளிநாடுகளுக்கு செல்லும் போது கூட இவரது கார் முதலில் வெளிநாடு சென்று இவரது பிக்கப் செய்ய தயாராக இருக்கும். இப்படியாக தான் இந்த கார் இந்தியாவிற்கு வந்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் முதன் முறையாக புதின் இந்தியா வருவதால் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்த கார் இந்தியா வந்துள்ளது. இந்த கார் ரஷ்ய அதிபர் புதினிற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கார் ஆகும். இந்த காரை ரஷ்யன் ரோல்ஸ் ராய்ஸ்என்றும் அழைக்கிறார்கள். இதில் ஆயுதம் ஏந்தி காராக வடிவமைக்கப்பட்டுள்ளுது. இதின் ஜன்னல் கண்ணாடிகள் முற்றிலும் கருப்பு நிறத்தில் இருக்கும். இதன் உட்புற கட்டமைப்பு சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

Putin Aurus Senat

இந்த காரை வாங்கும் முன் புதின் மெர்சிடீஸ் பென்ஸ் எஸ் 600 கார்டு புல்மேன் என்ற காரை பயன்படுத்தி வந்தார். ஆனால் இந்த கார் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டதால் இதனால் பிரச்சனை வர வாய்ப்பிருப்பதாக எண்ணி இந்த காரை நீக்கிவிட்டு முற்றிலுமாக ரஷ்யாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட காராக இதை உருவாக்கியள்ளது.

இந்த காரை அவர் கடந்த 2018ம் ஆண்டு பதவியேற்றது முதல் பயன்படுத்தி வருகிறார். இதை ஆவ்ரஸ் மோட்டார்ஸ் என்ற நிறுவனம் தான் உருவாக்கியுள்ளது. இதை ரஷ்யாவின் நாமி இன்ஸ்ட்டியூட், சோல்லர்ஸ் ஜேஎஸ்சி மற்றும் யூஏஇ தவாஸன் ஹோல்டிங் ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்து உருவாக்கியுள்ளது.

Putin Aurus Senat

இந்த காரின் மாஸ் தயாரிப்பு கடந்த 2021ம் ஆண்டு நடந்தது. ரஷ்ய அரசு இந்த காரை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு பரிசாக வழங்கினார். இதை இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் நட்பு என காரணம் காட்டி இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளுது.

இந்த கார் பல்வேறு விதமான தாக்குதல்களை தாங்கும் திறன் கொண்டஐது. இந்த கார் முக்கியமாக முழுமையாக குண்டு துளைக்காத வகையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஏவுகனை தாக்கதல், ட்ரோன் தாக்குதல்களையும் தாக்கு பிடிக்கும். இது கிட்டத்தட்ட ஒரு நீர்மூழ்கி கப்பல் போல செயல்படும். கார் டயர் பஞ்சரானாலும் தொடர்ந்து இயங்கும். கெமிக்கல் அட்டாக் நடந்தாலும் தாக்குபிடிக்கும்.

இந்த காரின் விலையை பொருத்தவரை இந்திய மதிப்பில் ரூ2.5 கோடி விலை என கூறப்படுகிறது. இந்த கார் முழுமையாக கஸ்டமைஸ்டு செய்யப்பட்டது. இந்த கார் முழுமையாக ஆயுதம் ஏந்தியதாக வடிமவைக்கப்பட்டுள்ளது. இந்த இது இந்த காரின் விலையை இரு மடங்காக்கியுள்ளது. அந்த அளவிற்கு ஆயுதங்கள் உள்ளுது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரஷ்ய அதிபர் புதின் பயன்படுத்தும் கார் உலகம் முழுவதும் பிரபலமானது. இந்த கார் இந்தியா வந்துள்ளதால் இதை பார்க்கவே பலர் ஆர்வமாக இருக்கிறார்கள். கடந்த செப்டம்பர் மாதம் நடபந்த எஸ்சிஓ மாநாட்டின் போது புதின் மற்றம் மோடி ஆகியோர் இணைந்து இந்த காரில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 4, 2025, 18:00 [IST]
English summary
Putin aurus senat modi meeting and rajghat itinerary
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X