ரஷ்ய ராணுவத்துக்காக ரகசியமாக தயாரிக்கப்பட்ட 'பேட்மொபைல்': புதின் நேரில் ஆய்வு!

By Saravana

ரஷ்ய ராணுவத்திற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய ராணுவ வாகனங்களை அந்நாட்டு அதிபர் புடின் நேரில் ஆய்வு செய்தார்.

இந்த வாகனங்களில் பேட் மொபைல் போன்று வடிவமைக்கப்பட்டிருந்த புதிய கவச வாகனத்தை அவர் ஆர்வமுடன் பார்த்து, விஷயங்களை தெரிந்துகொண்டார். இந்த புதிய கவச வாகனம் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு முக்கிய பங்காக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாடல் விபரம்

மாடல் விபரம்

இசட்ஐஎல் கரேட்டல் என்ற பெயரில் இந்த கவச வாகனம் அழைக்கப்படுகிறது. பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாகவும் மிரட்டலாக இருக்கிறது. இதனை ரஷ்யாவின் இசட்ஐஎல் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.

பேட்மொபைல்

பேட்மொபைல்

ஹாலிவுட் சினிமாவில் புகழ்பெற்ற பேட் மொபைல் போன்றே தோற்றத்தில் ஒத்திருக்கிறது இந்த கவச வாகனம். முன்புறத்தில் முழுவதும் கருப்பு நிறத்திலும், முகப்பில் மட்டும் சிவப்பு சாயத்தை பூசியிருக்கும் இந்த வாகனம் எதிரிகளை துவம்சம் செய்யும் வகையில் பல சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.

பயன்பாடு

பயன்பாடு

தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை, எல்லை கண்காணிப்புப் பணிகள், உள்நாட்டு பாதுகாப்பு போன்றவற்றிற்கு இந்த கவச வாகனம் பயன்படுத்தப்படும்.

 அடிப்படை மாடல்

அடிப்படை மாடல்

கமாஸ்-4911 டிரக்கின் சேஸீயை பயன்படுத்தி இந்த கவச வாகனத்தை உருவாக்கியிருக்கின்றனர். இது 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதால், எந்த ஒரு சாலையிலும் சிறப்பாக செலுத்த முடியும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த கவச வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் 8 சிலிண்டர்கள் கொண்ட டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 730 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

வேகம்

வேகம்

12 டன் எடை கொண்ட இந்த வாகனம் மணிக்கு 150 கிமீ வேகம் வரை செல்லும் என்பதையும் கணக்கில் கொள்ளளவும்.

கவச வாகனம்

கவச வாகனம்

கண்ணி வெடித் தாக்குதல் மற்றும் 7.62மிமீ துப்பாக்கிச் சூடு தாக்குதல்களை தாங்கும் வலிமையுடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

வீரர்கள்

வீரர்கள்

இந்த கவச வாகனத்தில் ஓட்டுனர், கமாண்டர் உள்பட 10 வீரர்கள் பயணிக்க முடியும்.

துப்பாக்கிகள்

துப்பாக்கிகள்

இந்த கவச வாகனத்தில் பக்கவாட்டில் இரண்டு கதவுகளிலும், மேல்புறத்திலும் துப்பாக்கிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதன் விசேஷ இருக்கை அமைப்பு மூலமாக 360 டிகிரி கோணத்தில் இந்த மேல்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும் துப்பாக்கியை இயக்க முடியும்.

சீதோஷ்ண நிலை

சீதோஷ்ண நிலை

எந்தவொரு சீதோஷ்ண நிலையிலும் இந்த கவச வாகனம் சிறப்பாக இயங்கும். மேலும், பனிபடர்ந்த சாலைகள், கரடுமுரடான சாலைகளிலும் எளிதாக செலுத்த முடியும். இதற்காக, மிக வலுவான கட்டமைப்பும், விசேஷ டயர்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன.

ரகசியம்

ரகசியம்

இந்த கவச வாகனத்தை மிக மிக ரகசியமாக ரஷ்யா தயாரித்து வந்தது. தற்போது வெளியுலகுக்கு தெரியவந்திருக்கிறது.

தொடர்புடைய செய்தித் தொகுப்பு

தொடர்புடைய செய்தித் தொகுப்பு

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க புடின் அனுப்பிய அந்த 'பிரம்மாஸ்திரம்'!!

More from DriveSpark

Article Published On: Wednesday, March 23, 2016, 10:34 [IST]
English summary
Putin inspects armored ZiL Karatel military truck.
மேலும்... #ராணுவம் #military
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+