உலகின் மிக நீண்ட பயண நேர நான் - ஸ்டாப் விமான சேவையை துவங்கும் காந்தாஸ்!

By Saravana Rajan

அண்மை காலமாக உலகின் மிக நீண்ட தூர நான்- ஸ்டாப் விமான சேவைகளை இயக்குவதில் விமான சேவை நிறுவனங்களிடையே போட்டா போட்டி நிலவுகிறது. தற்போது உலகின் மிக நீண்ட தூர நான்- ஸ்டார் விமானத்தை இயக்கும் விமான நிறுவனம் என்ற பெருமையை எமிரேட்ஸ் கைவசம் உள்ளது. இந்தநிலையில், இந்த பெருமையை விரைவில் காந்தாஸ் நிறுவனம் தட்டிப் பறிக்க இருக்கிறது.

ஆம், ஆஸ்திரேலியாவிலிருந்து முதல்முறையாக ஐரோப்பாவிற்கு நேரடி நான்- ஸ்டாப் விமான சேவையை காந்தாஸ் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன்மூலமாக, உலகின் மிக நீண்ட தூர விமான சேவையை வழங்கும் நிறுவனம் என்ற பெருமையை ஆஸ்திரேலியாவின் காந்தாஸ் நிறுவனத்துக்கு கிடைக்க இருக்கிறது.

எமிரேட்ஸ் வசம்..

எமிரேட்ஸ் வசம்..

தற்போது நியூஸிலாந்து நாட்டிலுள்ள ஆக்லாந்திலிருந்து துபாய்க்கு எமிரேட்ஸ் நிறுவனம் இயக்கும் விமானம்தான் உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா விமான சேவையாக இருக்கிறது. தூரம், பயண நேரம் இரண்டிலும் இந்த வழித்தடம்தான் தற்போது உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா விமான சேவை வழங்கும் தடமாக உள்ளது.

 பயண தூரம்

பயண தூரம்

ஆக்லாந்து - துபாய் இடையிலான 14,200 கிமீ தூரத்தை 16 மணிநேரத்தில் கடக்கிறது. இந்த வழித்தடத்தில் போயிங் 777-200LR விமானங்கள் பயன்படுத்தபடுகின்றன. இந்த விமானத்தில் 266 பேர் வரை பயணிக்க முடியும்.

காந்தாஸ் திட்டம்

காந்தாஸ் திட்டம்

இந்தநிலையில், ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து லண்டனுக்கு நேரடி விமான சேவையை ஆஸ்திரேலியாவை சேர்ந்த காந்தாஸ் நிறுவனம் துவங்க இருக்கிறது. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இந்த சேவையை துவங்குவதற்கு காந்தாஸ் திட்டமிட்டுள்ளது.

நான்- ஸ்டாப் கொண்டாட்டம்

நான்- ஸ்டாப் கொண்டாட்டம்

பெர்த்- லண்டன் இடையிலான 14,000 கிமீ தூரத்தை 19 மணிநேரத்தில் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, பயண நேரத்தின் அடிப்படையில் காந்தாஸ் உலகின் மிக நீண்ட தூர நான் - ஸ்டாப் விமானத்தை இயக்கும் நிறுவனம் என்ற பெருமையை பெறும்.

விமான மாடல்

விமான மாடல்

புதிதாக டெலிவிரி பெற இருக்கும் போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானத்தையே இந்த வழித்தடத்தில் பயன்படுத்த காந்தாஸ் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. மேலும், ஆஸ்திரேலியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு நேரடியாக இயக்கப்பட இருக்கும் முதல் விமான சேவையாகவும் இது குறிப்பிடப்படுகிறது. இதன்மூலமாக, பயண நேரம் வெகுவாக குறையும்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த விமானத்தில் 250 பேர் பயணிக்கலாம். பிசினஸ் கிளாஸ், பிரிமியம் கிளாஸ் மற்றும் எக்கானமி எனப்படும் சாதாரண வகுப்பு இருக்கைகள் கொண்டதாக வருகிறது. இந்த விமான சேவை ஆஸ்திரேலியர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Qantas to Take world's longest flight service title from Emirates.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X